Daily Updates

தினம் ஓர் ஊர் – ஊத்துக்குளி (Uthukuli) – 24/09/24

தினம் ஓர் ஊர் – ஊத்துக்குளி (Uthukuli)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருப்பூர்

மக்கள் தொகை – 84,797

பரப்பளவு  – 5.57 சகிமீ

கல்வியறிவு – 68%

District Collector  – Bro. T Christuraj , I.A.S

District Revenue Officer  – Bro. K Karthikeyan

Commissioner of Police  – Sis. Lakshmi IPS

Superintendent of Police  – Bro. Abhishek Gupta IPS

Municipal Commissioner – Bro. Pavankumar G. Giriyappanavar (Tiruppur)

Mayor – Bro. N.Dineshkumar (Tiruppur)

Deputy Mayor – Bro.R. Balasubramaniam (Tiruppur)

மக்களவைத் தொகுதி – திருப்பூர்

சட்டமன்றத் தொகுதி – பெருந்துறை

மக்களவை உறுப்பினர் – Bro. K Subbarayan (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Jayakumar (MLA)

Principal District and Sessions Judge – Bro. N.Gunasekaran (Tiruppur)

ஜெபிப்போம்

ஊத்துக்குளி என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்கா ஆகும். இந்த தாலுகா வெண்ணெய்க்கு பெயர் பெற்றது. ஊத்துக்குளி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

ஊத்துக்குளி வட்டம் திருப்பூர் மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டம் அவிநாசி வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு எட்டாவது வட்டமாக 12 பிப்ரவரி 2014 அன்று நிறுவப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் ஊத்துக்குளி ஆகும். இந்த வட்டம் 2 உள்வட்டங்களும், 49 வருவாய் கிராமங்களும் கொண்டது. இவ்வட்டதில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

ஊத்துக்குளி என்ற பெயர் சித்த அகஸ்தியர் கைதமலை கோவிலுக்கு தியானம் செய்ய வந்ததை கூறும் ஒரு புராணத்தில் இருந்து வந்தது. தண்ணீர் கிடைக்காததால், முருகப் பெருமானிடம் வேண்டினார். முருகன் தோன்றி நீராதாரத்தை உருவாக்கினார், இது ஊற்றுகுளி என்றும் இப்போது ஊத்துக்குளி என்றும் அழைக்கப்பட்டது.

திருப்பூர் – ஈரோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு தெற்கே 4 கிமீ ல் ஊத்துக்குளி வட்டத்தில் அமைந்த இப்பேரூராட்சிக்கு மேற்கில் திருப்பூர் 16 கிமீ; கிழக்கில் ஈரோடு 40 கிமீ; வடமேற்கில் அவிநாசி 31 கிமீ; வடக்கில் கோபிசெட்டிபாளையம் 35 கிமீ; தெற்கில் காங்கேயம் 25கிமீ; தொலைவில் உள்ளது.

இந்த நகராட்சி பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கும், திருப்பூர் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் Bro. Jayakumar அவர்களுக்காகவும், திருப்பூர் மக்களவை உறுப்பினர் Bro. K Subbarayan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

வெண்ணெய் உற்பத்திக்கு ஊத்துக்குளி மிகவும் புகழ்பெற்றது. இங்கிருந்து கேரளா, மகாராஷ்டிரம், தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு வெண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஊத்துக்குளி வெண்ணெயில் தரம், சுவை ஆகியவை அதிகம். மேலும், ஊத்துக்குளி வெண்ணெயில் இருந்து உருக்கி எடுக்கப்படும் நெய்யின் அளவும் அதிகம். ஒரு கிலோ வெண்ணெயில் 85 பாயிண்ட் நெய் அதாவது 850 கிராம் நெய் கிடைக்கிறது. மற்ற பகுதிகளில் தயாரிக்கப்படும் வெண்ணெயில் 75 பாயிண்ட் வரையே நெய் கிடைப்பதாக உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்களின் கையின் கிரியைக்கு ஏற்ற பலனை தரும்படி ஜெபிப்போம்.

இந்த இடத்தைச் சுற்றி கைத்தறி, நூற்பு ஆலைகள், கல் குவாரிகள், சுரங்கங்கள் மற்றும் கோழிப்பண்ணைகளுக்கும் இருக்கின்றன. இங்கு செய்யும் பல்வேறு தொழில்களை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். இந்த பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்காக அவர்களின் குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காக பாரத்தோடு ஜெபிப்போம்.

ஊத்துக்குளி நகரத்தில் சமீப ஆண்டுகளில் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கல்வி நிறுவனங்களுக்காக அதில் படிக்கும் மாணவர்களுக்காகவும், பணிபுரியும் ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம். மேலும் இங்குள்ள மருத்துவமனைகளில் வேலை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இவர்களுக்காக ஜெபிப்போம்.

ஊத்துக்குளி நகரத்திற்காக ஜெபிப்போம். இப்பகுதியில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கின்ற தொழில்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம். ஊத்துக்குளி பகுதியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். ஊத்துக்குளி நகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.