Daily Updates

தினம் ஓர் ஊர் – தாராபுரம் (Dhārāpuram) – 20/09/24

தினம் ஓர் ஊர் – தாராபுரம் (Dhārāpuram)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருப்பூர்

மக்கள் தொகை – 282,752

கல்வியறிவு – 71.34%

District Collector  – Bro. T Christuraj , I.A.S

District Revenue Officer  – Bro. K Karthikeyan

Commissioner of Police  – Sis. Lakshmi IPS

Superintendent of Police  – Bro. Abhishek Gupta IPS

Municipal Commissioner – Bro. P.Thirumalselvam

Municipal Chairman – Bro. Pappukanan

Municipal Vice – Chairman – Bro. Ravichandran

மக்களவைத் தொகுதி – ஈரோடு

சட்டமன்றத் தொகுதி – தாராபுரம்

மக்களவை உறுப்பினர் – Bro. Prakash (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Sis. N. Kayalvizhi (MLA)

Principal District and Sessions Judge – Bro. N.Gunasekaran (Tiruppur)

District Munsif  – Sis. Mathivathani Vanangamudi (Dharapuram)

Sub Judge – Bro. K.Sakthivel (Dharapuram)

ஜெபிப்போம்

தாராபுரம் (Dhārāpuram) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் வட்டம் மற்றும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும். இந்நகரத்தில் அமராவதி ஆறு பாய்கிறது. மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. விவசாயம் நிறைந்த நகரம் ஆகும்.

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் கொங்கு நாட்டில் ஆன்பொருநைக் கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தை அரண்களால் வலிமிக்கதாக்கினான். அதன்கண் சேரர் குடியில் தோன்றிய அரசியற் செல்வருள் ஒருவரை நிறுவிச் சேரர் கொங்கில் நாடு காவல் புரியச் செய்தான், இடைக்காலச் சோழ வேந்தர் கொங்கு வஞ்சியைக் கைப்பற்றி அதற்கு இராசராசபுரம் என்று பெயரிட்டனர். பிற்காலத்தே இதன் ஒரு பகுதி “இராசாதிராசத் சதுர்வேதிமங்கல”மாகியது. இந்த இராசராசபுரம் தாராபுரம் என்று மருவியது.

தாராபுரம் முதலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் (1804-1979) (கோயம்புத்தூர் மாவட்டத்தில் தலைநகரமாகவும் சில ஆண்டுகள் விளங்கியது) இருந்தது. அதன்பின் புதிதாக உருவாக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின் 2009ல் புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய வட்டம் தாராபுரம் வட்டமே (தாலுகா) ஆகும் (பரப்பளவில் பெரியது) தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மூன்று வருவாய் கோட்டங்களில் ஒன்று இதில் தாராபுரம், காங்கேயம் வட்டங்கள் இதில் அடங்கும். தாராபுரம் சேரர்கள், மேற்கு கங்க பேரரசு மற்றும் பின்னர் கொங்கு சோழர்கள் கீழ் கொங்கு நாட்டின் தலைநகராக இருந்தது.

தாராபுரம் வட்டம், தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 7 உள்வட்டங்களும், 71 வருவாய் கிராமங்களும் உள்ளது. இவ்வட்டத்தில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. தாராபுரம் வட்டம் கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர் என்று மூன்று மாவட்டங்களுடன் எல்லை பகிர்வு உள்ளது.

தாராபுரம் நகராட்சி 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. Municipal Commissioner Bro. P.Thirumalselvam அவர்களுக்காகவும், Municipal Chairman Bro. Pappukanan அவர்களுக்காகவும், Municipal Vice – Chairman Bro. Ravichandran அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இந்த நகராட்சி தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், ஈரோடு மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் Sis. N. Kayalvizhi அவர்களுக்காகவும், ஈரோடு மக்களவை உறுப்பினர் Bro. Prakash அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இவ்வட்டம் 282,752 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 140,576 ஆண்களும், 142,176 பெண்களும் உள்ளனர். 86,520 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் 60.5% வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.6%, இசுலாமியர்கள் 4.9%, கிறித்தவர்கள் 2.14% மற்றும் பிறர் 0.35% ஆகவுள்ளனர்.

தமிழகத்தின் மொத்த விதை நெல் உற்பத்தியில் 50 சதவீதத்தை உற்பத்தி செய்து, ‘விதைக் களஞ்சியம்’ என்ற சிறப்புப் பெயரை பெற்றுள்ளது தாராபுரம். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கியபோதும், தாராபுரத்தில் இருந்துதான் தஞ்சை உட்பட 7 மாவட்ட விவசாயிகளுக்கு விதை நெல் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் 20 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மொத்த விதை நெல் தேவையில் பெரும்பகுதி தாராபுரத்தில் இருந்துதான் பூர்த்தி செய்யப்படுகிறது.

தாராபுரம் பகுதியில் பலமான காற்று வீசும் என்பதால், தமிழகத்தின் முக்கியமான ஒரு காற்றாலை நகரமாக மாறியிருக்கிறது. குறிப்பாகத் தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் நூற்றுக்கணக்கான காற்றாலைகள் அமைந்திருக்கின்றன. மேலும் தாராபுரம்-காங்கேயம் சாலைப் பகுதியிலும் காற்றாலைகள் அமைந்துள்ளன. தென்னை, பனை மரங்கள் அதிகமாக காணப்படும் ஊராக திகழ்கிறது. தேங்காய் அதிக அளவில் சாகுபடி செய்யபடும் நகரங்களில் ஒன்று.

தாராபுரம் நகரத்திற்காக ஜெபிப்போம். இப்பகுதியில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கின்ற தொழில்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத மக்கள் மத்தியில் ஆண்டவருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். தாராபுரம் நகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.