No products in the cart.
தினம் ஓர் ஊர் – மேச்சேரி (Mecheri) – 28/08/24
தினம் ஓர் ஊர் – மேச்சேரி (Mecheri)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – சேலம்
தாலுகா – மேட்டூர்
பரப்பளவு – 12.5 சதுர கிலோமீட்டர்கள் (4.8 sq mi)
மக்கள் தொகை – 25,676
கல்வியறிவு – 72.71 %
District Collector and District Magistrate – Dr. R. Brindha Devi, I.A.S.
Commissioner of Corporation – Bro. Ranjeet Singh, I.A.S.
Additional Collector – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,
Commissioner of Police – Sis. B. Vijayakumari,I.P.S.,
Superintendent of Police – Bro. A.K. Arun Kabilan, IPS.,
District Revenue Officer and
Additional District Magistrate – Dr. P. Menaha
Mettur Municipal Commissioner – Sis. V. Nithiya
Mettur Municipal Chairman – Bro. S.M.H. Abdul Salam
Mettur Municipal Vice – Chairman – Bro. S.G. Kasiviswanathan
மக்களவைத் தொகுதி – தருமபுரி
சட்டமன்றத் தொகுதி – மேட்டூர்
மக்களவை உறுப்பினர் – Bro. A. Mani (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. S. Sadhasivam (MLA)
Principal District Judge – Sis. S.Sumathi (Salem)
District Munsif – Bro. R.Manivarman (Mettur)
Subordinate Judge – Sis. S.Priya (Mettur)
ஜெபிப்போம்
மேச்சேரி (Mecheri) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேச்சேரி குரும்பை ஆடுகளுக்கு பெயர் பெற்றது. மேச்சேரியின் புதன்கிழமைதோறும் வாரச்சந்தையில் கிடைக்க கூடிய காய்கறிகள் தரமிக்கதாகும். மேலும், வாரச்சந்தையில் கூடும் ஆட்டுச்சந்தையும் முக்கியச் சிறப்பம்சமாகும்.
மேச்சேரி பேரூராட்சிக்கு கிழக்கில் 32 கிமீ தொலைவில் சேலம் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 7 கிமீ தொலைவில் உள்ள குட்டப்பட்டியில் உள்ளது. இதன் மேற்கில் மேட்டூர் 22 கிமீ; தெற்கில் நங்கவள்ளி 12 கிமீ; வடக்கில் தர்மபுரி 42 கிமீ தொலைவில் உள்ளது.
கன்று கறவைகளை மேய்க்கும் இடம் என்று பொருள் தரும் ‘மேய்ச்சல் ஏரி’ என்ற பெயரே பின்னாளில் மருவி ‘மேச்சேரி’ என்றானது. அக்காலத்தில் இவ்விடம் ஓர் ஏரியாக இருந்துள்ளது. இந்த ஏரியில் மாடுகளையும் ஆடுகளையும் மேய்த்து வந்ததால் இவ்விடம் மேச்சேரி என்றானது.
மேச்சேரி கால்நடைகள் சந்தை மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும். இது வாரத்தின் ஒரு முறை புதன்கிழமைகளில் கூடுகின்றன. மேச்சேரி சாமராஜபேட்டை பகுதியில் கைத்தறி நெசவு உலகப்புகழ் பெற்றவை இந்த பகுதியில் இருந்து அனைத்து இந்திய மாநிலங்களுக்கு பட்டுப்புடவைகள் செல்கின்றது.
மேச்சேரி செம்மறி இன ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக மேச்சேரி, கொளத்தூர், நங்கவள்ளி, ஓமலூர் பகுதிகளிலும், ஈரோடு மற்றும் தருமபுரி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. மேச்சேரி இனச் செம்மறியாடுகள் இளம்பழுப்பு நிறம் கொண்டவை. இந்த இன ஆடுகளுக்கு கொம்புகள் கிடையாது. மேச்சேரி ஆடுகள் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆடு வகைகள் ஆகும். இந்த வகை ஆடுகளுக்கென்று தனி ஆராய்ச்சி நிலையம் மேச்சேரி அருகே பொட்டனேரி என்ற ஊரில் அமைந்துள்ளது.
இப்பேரூராட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. S. Sadhasivam அவர்களுக்காகவும், தருமபுரி மக்களவை உறுப்பினர் Bro. A. Mani அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் கரம் இவர்களையும், இவர்கள் செய்கின்ற பணிகளையும் ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம்.
மேச்சேரி நகரம் 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. Mettur Municipal Commissioner Sis. V. Nithiya அவர்களுக்காகவும், Mettur Municipal Chairman Bro. S.M.H. Abdul Salam அவர்களுக்காகவும் Mettur Municipal Vice – Chairman Bro. S.G. Kasiviswanathan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களுக்காக ஜெபிப்போம்.
மேச்சேரி டவுன் பஞ்சாயத்தில் 25,676 மக்கள்தொகை உள்ளது, இதில் 13,495 ஆண்கள் மற்றும் 12,181 பெண்கள் உள்ளனர். இந்த பேரூராட்சியில் மொத்தம் 6,330 குடும்பங்கள் வாழ்கிறார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்து 99.26%, முஸ்லிம் 0.30%, கிறிஸ்தவர் 0.21% உள்ளனர்.
மேச்சேரியின் அருகே ஜிண்டால் எஃகு நிறுவனம் தனது மிகபெரிய இரும்பு தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் இந்த தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர். மேலும் இந்த ஊரின் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையும், செங்கல் சூளையும் செய்து வருகின்றனர். இங்கு அதிகம் கேழ்வரகு, சோளம், கம்பு, வேர்க்கடலை போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
சாமராஜபேட்டை பகுதி மற்றும் அதனை சுற்றி பல பகுதியில் பெருமளவில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். மேலும் இந்த பகுதியில் தேவாங்க நெசவாளர் அதிகம் உள்ளனர். மேச்சேரியின் சுற்றுவட்டாரப்பகுதியில் மட்டும் தோராயமாக 5000 அதிகமான பேர் நெசவுத்தொழில் செய்கிறார்கள்.
மேச்சேரி பேரூராட்சிக்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். மேச்சேரி நகரத்தில் வாழும் மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதல் உண்டாக ஜெபிப்போம். மேச்சேரி பகுதியில் உள்ள சபைகளுக்காக ஜெபிப்போம். விசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.