Daily Updates

தினம் ஓர் ஊர் – இடங்கணசாலை (Edaganasalai) – 23/08/24

தினம் ஓர் ஊர் – இடங்கணசாலை (Edaganasalai)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – சேலம்

பரப்பளவு – 24.5 சதுர கிலோமீட்டர்கள் (9.5 sq mi)

மக்கள் தொகை – 33,245

கல்வியறிவு – 68.07 %

District Collector and District Magistrate  – Dr. R. Brindha Devi, I.A.S.

Commissioner of Corporation  – Bro.  Ranjeet Singh, I.A.S.

Additional Collector  – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,

Commissioner of Police  – Sis. B. Vijayakumari,I.P.S.,

Superintendent of Police  – Bro. A.K. Arun Kabilan, IPS.,

District Revenue Officer and

Additional District Magistrate  – Dr. P. Menaha

Salem Municipal Commissioner – Bro. Y.Surendiran

Edaganasalai Municipal Chairman – Bro. P.G. Kamalakannan

Edaganasalai Municipal Vice – Chairman – Bro. T. Thalapathi

மக்களவைத் தொகுதி – நாமக்கல்

சட்டமன்றத் தொகுதி – சங்ககிரி

மக்களவை உறுப்பினர் – Bro. Madheshwaran (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. S. Sundararajan (MLA)

Principal District Judge – Sis. S.Sumathi (Salem)

District Munsif – Bro. N.Panneerselvam (Sankari)

ஜெபிப்போம்

இடங்கணசாலை (Edaganasalai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இடங்கணசாலை நகராட்சியும் மற்றும் அதன் அருகாமையில் உள்ள இளம்பிள்ளை பேரூராட்சியும் கைநெசவுத் தொழிலுக்கு சிறந்து விளங்குகிறது.

முந்தைய காலங்களில் இப்பகுதியில் விவசாயிகளால் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் இளங்கன்றுகள் இவ்வூரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பழைமையான ஏரியில் நீர் அருந்த வந்ததனால் இவ்வூர் இளங்கன்சாலை என்று அழைக்கப்பட்டது பின்னர் இடங்கணசாலை என்றானது.

இடங்கணசாலை நகராட்சியானது 16 ஆகஸ்ட் 2021 அன்று தமிழக அரசால் பேரூராட்சியிலிருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இடங்கணசாலை நகர் 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இடங்கணசாலை Municipal Chairman Bro. P.G. Kamalakannan அவர்களுக்காகவும், இடங்கணசாலை  Municipal Vice – Chairman Bro. T. Thalapathi அவர்களுக்காகவும், வார்டு உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பினை உண்மையாக நிறைவேற்ற ஜெபிப்போம்.

இடங்கணசாலை நகராட்சிக்கு கிழக்கே சேலம் 20 கிமீ; மேற்கே சங்ககிரி 34 கிமீ; வடக்கே ஓமலூர் 25 கிமீ மற்றும் தெற்கே இளம்பிள்ளை 1 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நகரம் 24.5 சகிமீ பரப்பும், 64 தெருக்களையும் கொண்டுள்ளது.

இடங்கணசாலை நகராட்சி சங்ககிரி சட்டமன்றத் தொகுதி மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் Bro. S. Sundararajan அவர்களுக்காகவும், நாமக்கல் மக்களவை உறுப்பினர் Bro. Madheshwaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இடங்கணசாலை நகரத்தில் 33,245 மக்கள்தொகை உள்ளது, இதில் 17,609 ஆண்கள் மற்றும் 15,636 பெண்கள் உள்ளனர். மேலும் 8,631 குடும்பங்கன் வாழ்கிறார்கள். இந்த நகரத்தில் ஆண்களின் கல்வியறிவு 76.24% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 58.91% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 99.25%  பேரும், முஸ்லீம்கள் 0.28% பேரும், கிறிஸ்தவர்கள் 0.37% பேரும், சீக்கியர் 0.01% பேரும் மற்றும் பௌத்தர்  0.01% பேரும் உள்ளனர்.

மொத்த மக்கள்தொகையில், 15,799 பேர் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 10,956 ஆண்கள் மற்றும் 4,843 பெண்கள். இவர்களுக்காகவும், இவர்கள் செய்கின்ற பணிகளுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களையும், இவர்களுடைய குடும்பங்களையும் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

இடங்கணசாலை நகராட்சிக்காக ஜெபிப்போம். நகராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். ஆண்டவரை அறியாத மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத மக்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். கைநெசவுத் தொழில் ஆசீர்வதிக்கப்படவும், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.