Daily Updates

தினம் ஓர் ஊர் – ஏற்காடு (Yercaud) – 16/08/24

தினம் ஓர் ஊர் – ஏற்காடு (Yercaud)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – சேலம்

பரப்பளவு – 383 சதுர கிலோமீட்டர்கள் (148 sq mi)

மக்கள் தொகை – 41,869

கல்வியறிவு – 61.48%

District Collector and District Magistrate  – Dr. R. Brindha Devi, I.A.S.

Commissioner of Corporation  – Bro.  Ranjeet Singh, I.A.S.

Additional Collector  – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,

Commissioner of Police  – Sis. B. Vijayakumari,I.P.S.,

Superintendent of Police  – Bro. A.K. Arun Kabilan, IPS.,

District Revenue Officer and

Additional District Magistrate  – Dr. P. Menaha

Salem Municipality Commissioner – Bro. Y.Surendiran

Salem Mayor – Bro. A. Ramachandran

Deputy Mayor – Sis. Saradha Devi

மக்களவைத் தொகுதி – கள்ளக்குறிச்சி

சட்டமன்றத் தொகுதி – ஏற்காடு

மக்களவை உறுப்பினர் – Bro. Malaiyarasan (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Sis. G. Chitra (MLA)

Principal District Judge – Sis. S.Sumathi (Salem)

District Munsif-cum- Judicial Magistrate – Sis. M.Jayanthi (Yercaud)

ஜெபிப்போம்

ஏற்காடு (Yercaud) என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோடை வாழிட நகராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது. ஏற்காடு வட்டத்தில் அமைந்த ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623 மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது.

ஏற்காடு சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. 19-ஆம் நூற்றாண்டில் சேலத்தில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் ஏற்காட்டைக் கண்டறிந்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் காக் பர்ன் இங்கு காப்பிச்செடி, ஆப்பிள் போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தினார்.

ஏற்காடு வட்டம் என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும். ஏற்காடு வட்டம் 67 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. இந்த நகராட்சி ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் Sis. G. Chitra அவர்களுக்காகவும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Malaiyarasan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம்.

இந்த நகரத்தில் உள்ள லேடி சீட் என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து இரவு நேரங்களில் மலையில் இருந்து பார்த்தால் சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பதையும் காணலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வானிலை சரியாக இருந்தால், இங்கிருந்து மேட்டூர் அணையைக் கூட காணமுடியும் என்கிறார்கள்.

ஏற்காட்டில் கிள்ளியூர் அருவி, பகோடா பாயிண்ட், நல்லூர் அருவி, சீமாட்டி இருக்கை, கரடிமலையும் பிராஸ்பெக்ட் உச்சியும், பகோடா கோவில், டஃப் சிகரம், காவேரி சிகரம், மரகத ஏரி என்றும் அழைக்கப்படும் ஏற்காடு ஏரி தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரி போன்ற சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன.

கி. பி. 1841-ஆம் ஆண்டு ஜெ. எம். லெச்லர் (Rev. M. Lechier) என்ற பாதிரியார், அப்பொழுது சேலம் மாவட்டத்தின் துணை ஆட்சியராக இருந்த (Sub Collector), பிரெட் (Brett) என்பவரோடு இங்குள்ள மலை வளங்களைக் கண்டு உந்துதல் அடைந்து ஒரு வீட்டினைக் கட்டினார். இதுவே ஏற்காட்டின் முதல் வீடு எனக் கருதப்படுகிறது. அவ்வில்லம் இப்போது பேர்லாண்டு ஓட்டல் (Fair-Lawns Hotel) என்ற பெயரோடு விளங்குகிறது.

ஏற்காட்டில் முக்கிய வருமான ஆதாரமாக காப்பிச்செடி தோட்டங்கள் உள்ளன. 1820 ஆம் ஆண்டு திரு MD காக்பர்ன் என்பவரால் காபி செடி ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டு Grange எஸ்டேட்டில் நடவு செய்யபட்டது. பலா, நட்சத்திர ஆப்பிள், அத்தி, நீர் ஆப்பிள், பேரி, வாழை, ஆரஞ்சு, கொய்யா, கருப்பு மிளகு, ஏலக்காய் போன்றவை ஏற்காட்டில் விளைகின்றன. சந்தனம், தேக்கு மற்றும் சில்வர் ஓக் ஏராளமாக உள்ளன.

தேசிய தாவரவியல் பூங்கா ஏற்காட்டில் அமைந்துள்ளது. மொத்த பரப்பளவு 18.4 ஹெக்டேர் ஆகும். இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800 வகையான செடிகளும் உள்ளன. இந்தப் பூங்கா 1963ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. பூச்சி தின்னும் பிட்சர் தாவரம் இந்தப் பூங்காவில் வளர்க்கப்படுகிறது. காட்டு விலங்குகள் காட்டு எருமை, மான், முயல்கள், நரிகள், கீரிப் பிள்ளை, அணில், கௌதாரி, பாம்புகள், குருவி, பருந்து இங்கு வாழ்கின்றன.

மரகத ஏரி என்றும் அழைக்கப்படும் இந்த ஏற்காடு ஏரி, தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும். ஏரியின் நடுவில் ஓர் நீருற்றும் அமைந்துள்ளது. ஏரியின் அருகே அண்ணா பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலையைப் பின்பற்றி ஒரு சிறிய பூங்காவும் அமைந்துள்ளது. மே மாதம் இங்கு மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.

இவ்வட்டம் 41,869 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 21,070 ஆண்களும், 20,799 பெண்களும் உள்ளனர். 10,772 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்களில் 72.3% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 89.89%, இசுலாமியர்கள் 0.91%, கிறித்தவர்கள் 9.09%, மற்றும் பிறர் 0.11% ஆகவுள்ளனர்.

ஏற்காடு நகரத்திற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட்டு கர்த்தக்கென்று எழும்பி பிரகாசிக்க ஜெபிப்போம். குடும்பங்களில் தெய்வீக சமாதானம் உண்டாக ஜெபிப்போம். இந்த நகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.