Daily Updates

தினம் ஓர் ஊர் – அத்தனூர் (Athanur) – 30/07/24

தினம் ஓர் ஊர் – அத்தனூர் (Athanur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – நாமக்கல்

தாலுகா – இராசிபுரம் (Rasipuram)

பரப்பளவு – 5.18 சதுர கிலோமீட்டர்கள் (2.00 sq mi)

மக்கள் தொகை – 9,827

கல்வியறிவு – 72.71 %

District Collector – Sis. S. Uma, IAS

Superintendent of Police – Bro. S.Rajesh Kannan, I.P.S

District Revenue Officer – Bro. R.Suman

Project Director – Bro. S.Vadivel

District Forest Officer  – Bro. S.Kalanithi, I.F.S.,

மக்களவைத் தொகுதி – நாமக்கல்

சட்டமன்றத் தொகுதி – இராசிபுரம்

மக்களவை உறுப்பினர் – Bro. Madheshwaran (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. M. Mathiventhan (MLA)

Municipality Commissioner – Bro. A. Muthusamy (Rasipuram)

Chairman – Sis. R. Kavitha Sankar (Rasipuram)

Vice-Chairman – Sis. Gomathi Anandhan (Rasipuram)

Executive Officer  – Bro. S Balakrishanan (Athanur)

Principal District Judge – Bro. R.Gurumurthy (Namakkal)

District Munsif  – Sis. S. Santhi (Rasipuram)

Subordinate Judge – Bro. J.K. Dhilip (Rasipuram)

ஜெபிப்போம்

அத்தனூர் (Athanur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அத்தனூர் என்ற பெயர் அருள்மிகு அத்தனூர் அம்மன் கோவில் உள்ளதால் அத்தனூர் என பெயர் வரப்பெற்றது.

இப்பேரூராட்சியில் விசைத்தறிகள், வேளாண்மை மற்றும் நூற்பாலைகள் ஆக முக்கியத் தொழில்கள் ஆகும். இப்பேரூராட்சியைச் சுற்றி அலவாய்மலை அமைந்துள்ளது. இராசிபரத்திற்கு நீர் கொண்டு செல்லும் பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத்தில் ஒன்று இங்கு உள்ளது. அத்தனூர் பேரூராட்சிக்கு நாமக்கல் 37 கிமீ தொலைவில் உள்ளது. இதன் மேற்கில் வெண்ணந்தூர் 5 கிமீ மற்றும் வடக்கில் மல்லூர் 5 கிமீ தொலைவில் உள்ளது.

அத்தனூர் பேரூராட்சி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதல்நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி சேலம் சாலையில் நாமக்கல்லிருந்து 33 கி.மீ தொலைவிலும், சேலத்தில் இருந்து 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் பெரும்பாலும் கிராமங்கள் உள்ளடக்கிய பேரூராட்சியாகும்.

இப்பேரூராட்சி இராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் Bro. M. Mathiventhan அவர்களுக்காகவும், நாமக்கல் மக்களவை உறுப்பினர் Bro. Madheshwaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

அத்தனூர் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.  Municipality Commissioner Bro. A. Muthusamy அவர்களுக்காகவும், Chairman  Sis. R. Kavitha Sankar அவர்களுக்காகவும், Vice-Chairman Sis. Gomathi Anandhan அவர்களுக்காகவும், Executive Officer Bro. S Balakrishanan (Athanur) அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்காக ஜெபிப்போம்.

அத்தனூர் டவுன் பஞ்சாயத்தில் 9,827 மக்கள் தொகை உள்ளது, இதில் 4,959 ஆண்கள் மற்றும் 4,868 பெண்கள் உள்ளனர். இப்பேரூராட்சியில் 2,666 குடும்பங்கள் வசிக்கின்றனர். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 865 ஆகும். அத்தனூரில் ஆண்களின் கல்வியறிவு 81.86% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 63.49% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 99.06% பேரும், முஸ்லீம்கள் 0.44% பேரும், கிறிஸ்தவர்கள் 0.41% பேரும் மற்றும் சீக்கியர்கள் 0.01% பேரும் உள்ளனர்.

இப்பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகையில், 5,243 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,120 ஆண்கள் மற்றும் 2,123 பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.

அத்தனூர் பேரூராட்சியில் விசைத்தறிகள், வேளாண்மை மற்றும் நூற்பாலைகள் ஆக முக்கியத் தொழில்கள் ஆகும். விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும் ஜெபிப்போம். நூற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்.

அத்தனூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், இரட்சிக்கப்படாத குடும்பங்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். தொழில்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.