Daily Updates

தினம் ஓர் ஊர் – இராசிபுரம் (Rasipuram) – 09/07/24

தினம் ஓர் ஊர் – இராசிபுரம் (Rasipuram)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – நாமக்கல்

பரப்பளவு – 24 கிமீ 2 (9.3 சதுர மைல்)

மக்கள் தொகை – 3,40,515

கல்வியறிவு – 71.77%

District Collector – Sis. S. Uma, IAS

Superintendent of Police – Bro. S.Rajesh Kannan, I.P.S

District Revenue Officer – Bro. R.Suman

Project Director – Bro. S.Vadivel

District Forest Officer  – Bro. S.Kalanithi, I.F.S.,

Municipality Commissioner – Bro. A. Muthusamy (Rasipuram)

Chairman – Sis. R. Kavitha Sankar (Rasipuram)

Vice-Chairman – Sis. Gomathi Anandhan (Rasipuram)

மக்களவைத் தொகுதி – நாமக்கல்

சட்டமன்றத் தொகுதி – இராசிபுரம்

மக்களவை உறுப்பினர் – Bro. Madheshwaran (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. M. Mathiventhan (MLA)

Principal District Judge – Bro. R.Gurumurthy (Namakkal)

District Munsif  – Sis. S. Santhi (Rasipuram)

Subordinate Judge – Bro. J.K. Dhilip (Rasipuram)

ஜெபிப்போம்

இராசிபுரம் (Rasipuram) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் முதல் நிலை நகராட்சி ஆகும். இது ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் இரண்டாவது நகராட்சி ஆகும். 1948-இல் உருவாக்கப்பட்ட நகராட்சி ஆகும். இவ்வூரின் பெயர் ஸ்ரீ ராஜபுரம் எனப் பழங்காலத்தில் வழங்கப்பட்டதாக இங்கு அமைந்துள்ள கைலாச நாதர் கோயில் கல்வெட்டுகள் குறிக்கின்றன. ராசிபுரம் நெய் மற்றும் மரவள்ளிக்கிழங்குக்கு பெயர் பெற்றது.

ராசிபுரம் கி.பி 1ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த நகரத்தின் பெயர் ‘ராஜபுரம்’ என்பதிலிருந்து உருவானது, இதன் பொருள் ‘ராஜாவின் நகரம்’ என்பதாகும். ராசிபுரம் ( நகராட்சி ) முன்பு சேலம் மாவட்டத்தின் ( மாநகராட்சி ) அதிகார வரம்பிற்கு உட்பட்டது, பின்னர் நாமக்கல் மாவட்ட எல்லையால் ஆளப்பட்டது.

ராசிபுரம் வட்டம் தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 93 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டத்தில் இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

ராசிபுரம் நகர் 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. நகராட்சி ஆணையர் Bro. A. Muthusamy அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. R. Kavitha Sankar அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis. Gomathi Anandhan அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இந்த நகராட்சி ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் Bro. M. Mathiventhan அவர்களுக்காகவும், நாமக்கல் மக்களவை உறுப்பினர் Bro. Madheshwaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இவ்வட்டம் 340,515 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 173,456 ஆண்களும், 167,059 பெண்களும் உள்ளனர். 91,643 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்களில் 60.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.52%, இசுலாமியர்கள் 1.42%, கிறித்தவர்கள் 0.91% மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.

இந்த நகரம் பட்டுப் புடவைகள் (ராசிபுரம் பட்டுகள்) நெசவு செய்வதற்கு பெயர் பெற்றது. இங்கு நெய்த பட்டுப் புடவைகள் மற்றும் வேட்டிகள் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஊரில் இரண்டாவது பிரபலமானது சுத்தமான வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய். ராசிபுரம் நெய் மற்றும் மரவள்ளிக்கிழங்குக்கு பெயர் பெற்றது. நெசவு தொழிலை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதித்து அவர்களுடைய தேவைகள் எல்லாம் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

இராசிபுரம் நகராட்சிக்காக ஜெபிப்போம். நகராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும், தொழிலாளர்களுக்காகவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்படவும், சுவிசேஷம் அறிவிக்கப்படவும் ஜெபிப்போம். இராசிபுரம் நகராட்சியில் உள்ள மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டு வர ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.