No products in the cart.
தினம் ஓர் ஊர் – கூத்தப்பார் (Koothappar) – 09/06/24
தினம் ஓர் ஊர் – கூத்தப்பார் (Koothappar)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருச்சிராப்பள்ளி
மக்கள் தொகை – 15,943
கல்வியறிவு – 92.79 %
மக்களவைத் தொகுதி – திருச்சிராப்பள்ளி
சட்டமன்றத் தொகுதி – திருவெறும்பூர்
மாவட்ட ஆட்சியர் – Bro. Pradeep Kumar (I.A.S)
Commissioner of Police – Sis. N. Kamini (IPS)
Superintendent of Police – Bro. V. Varunkumar (IPS)
District Revenue Officer – Sis. R. Rajalakshmi
Project Director – Bro. S. Devanathan
மக்களவை உறுப்பினர் – Bro. Tirunavukarasu (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. P.Anbil Mahesh Poiyamozhil (MLA)
Mayor – Bro. M. Anbazhagan
Deputy Mayor – Sis. G. Dhivya
Commissioner – Bro. R. Vaithinathan
Assistant Executive – Bro. V.Jeyakumar
Engineer (Planning)
Principal District Judge – Bro. K.Babu
ஜெபிப்போம்
கூத்தப்பார் (Koothappar) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறும், இந்த ஊரில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட மிக பழமையான சிவாலயம் உள்ளது. ஊரில் விவசாயம் மூலத்தொழிலாக உள்ளது. விவசாய நீர்நிலைகளாக சிவந்தான்குளம், பெரியகுளம், சம்பங்குளம், சம்புதிகுளம் போன்ற ஏரிகள் உள்ளன. கூத்தப்பார் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்த கூத்தப்பார் பேரூராட்சி, திருச்சியிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. கூத்தப்பர் பேரூராட்சி காவேரி ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளது மற்றும் புகழ்பெற்ற கல்லணை அணை (கிராண்ட் அணைக்கட் என்றும் அழைக்கப்படுகிறது) இங்கிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சி 6.4 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 63 தெருக்களும் கொண்டுள்ளது. இப்பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்காகவும், வார்டு கவுன்சிலர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. P.Anbil Mahesh Poiyamozhil அவர்களுக்காகவும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Tirunavukarasu அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களை தேவ கரம் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
கூத்தப்பர் டவுன் பஞ்சாயத்தில் 15,943 மக்கள் தொகை உள்ளது. இதில் 8,089 ஆண்கள் மற்றும் 7,854 பெண்கள் உள்ளனர். கூத்தப்பர் சராசரி கல்வியறிவு விகிதம் 87% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 84% ஆகும். இப்பேரூராட்சியில் 4250 குடும்பங்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 84.61% பேரும், முஸ்லீம்கள் 4.62% பேரும், கிறிஸ்தவர்கள் 10.39% பேரும், சீக்கியர் 0.01% பேரும், புத்த 0.02% மற்றும் ஜெயின் 0.06% பேரும், மற்றவர்கள் 0.03% பேரும் உள்ளனர். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களின் தேவைகளுக்காக ஜெபிப்போம்.
மொத்த மக்கள்தொகையில், 6,193 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 4,838 ஆண்கள் மற்றும் 1,355 பெண்கள். இவர்களுக்காகவும், இவர்கள் செய்கின்ற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
கூத்தப்பார் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களுடைய தேவைகளுக்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கின்ற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் கர்த்தருடைய வார்த்தை அறிவிக்கப்பட்டு, அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.