Daily Updates

தினம் ஓர் ஊர் – பட்டுக்கோட்டை (Pattukkottai) – 20/12/23

தினம் ஓர் ஊர் – பட்டுக்கோட்டை (Pattukkottai)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தஞ்சாவூர்
மக்கள் தொகை – 73,135
கல்வியறிவு – 89.2%
மக்களவைத் தொகுதி – தஞ்சாவூர்
சட்டமன்றத் தொகுதி – பட்டுக்கோட்டை
District Collector – Bro. Deepak Jacob, (I.A.S)
Additional Collector (Development) – Bro. H.S.Srikanth (I.A.S)
Deputy Inspector General of Police – Bro. T.Jayachandran (I.P.S)
Superintendent of Police – Bro. Ashish Rawat (I.P.S)
District Revenue Officer – Bro. T.Thiyagarajan
மக்களவை உறுப்பினர் – Bro. S.S.Palanimanickam (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. K.Annadurai (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. T.Soundararajan
நகராட்சி தலைவர் – Sis. S.Shanmugapriya
நகராட்சி துணை தலைவர் – Bro. P.Suresh
Principal District Judge – Sis. Jacintha Martin (Thanjavur)
Presiding Officer and
Additional District Judge – Bro. G.Sundarajan (Thanjavur)
District Munsif Court – Bro. M. Ravichandran (Pattukkottai)

ஜெபிப்போம்

பட்டுக்கோட்டை (Pattukkottai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை நகராட்சி ஆகும். பதினேழாம் நூற்றாண்டுக்கு முன்பே பட்டுக்கோட்டை எனும் பெயர் வழக்கத்தில் இருந்துள்ளது. ’பட்டு மழவராயர்’ எனும் கள்ளர் குழுத்தலைவன் வாழ்ந்ததாகவும் அவரால் கோட்டைக் கட்டப்பட்டதாகவும் தஞ்சை அரசுப் பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. இதுவே பட்டுக்கோட்டை எனப் பெயர் வரக் காரணமாகும். பட்டுக்கோட்டை நகராட்சிக்காக ஜெபிப்போம்.

பட்டுக்கோட்டை நகராட்சி 1 ஏப்ரல் 1965 இல் 21.83 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது. நகராட்சி துணைப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐந்து வருவாய் கிராமங்கள் உள்ளன. பட்டுக்கோட்டை 1 ஏப்ரல் 1975 இல் இரண்டாம் தர நகராட்சியாகவும், 7 ஏப்ரல் 1984 இல் முதல் தர நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. பட்டுக்கோட்டை நகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.

தஞ்சாவூர் District Collector Bro. Deepak Jacob அவர்களுக்காகவும், Additional Collector Bro. H.S.Srikanth அவர்களுக்காகவும், Deputy Inspector General of Police Bro. T.Jayachandran அவர்களுக்காகவும், Superintendent of Police Bro. Ashish Rawat அவர்களுக்காகவும், District Revenue Officer Bro. T.Thiyagarajan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.

இந்த நகரம் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,77,798 வாக்காளர்கள் (85,476 ஆண்கள் மற்றும் 83,902 பெண்கள்) உள்ளனர். தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் Bro. S.S.Palanimanickam அவர்களுக்காகவும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Bro. Bro. K.Annadurai அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களையும், இவர்கள் செய்கின்ற பணிகளையும் கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.

இந்த நகரம் தற்போது, இது ஏ தேர்வு-தர நகராட்சி மற்றும் 33 வார்டுகளைக் கொண்டுள்ளது. பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் Bro. T.Soundararajan அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. S.Shanmugapriya அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. P.Suresh அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.

இந்நகரத்தின் மக்கள்தொகை 73,135 ஆகும். அதில் 36,386 ஆண்களும், 36,749 பெண்களும் உள்ளனர். இங்கு மொத்தம் 18,437 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.82%, இசுலாமியர்கள் 7.57%, கிறித்தவர்கள் 5.34% மற்றும் பிறர் 0.18%ஆகவுள்ளனர். இந்த தொகுதியில் முக்குலத்தோர், வெள்ளாளர்,முத்தரையர், ஆதிதிராவிடர், இஸ்லாமியர்கள், மற்றும் மீனவர்கள் சமூகத்தினரும் பரவலாக உள்ளனர். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.

ஆங்கிலேயர் காலத்தில், பித்தளை பாத்திரங்கள், பருத்தி துணிகள் மற்றும் பாய்கள் பட்டுக்கோட்டையின் முக்கிய உற்பத்திகளாக இருந்தன. 1951 இல், மானுடவியலாளர் Kathleen Gough குறிப்பிடுகையில், பட்டுக்கோட்டையில் ஜமீன்தாரி மற்றும் இனம் நிலங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. நெல் மற்றும் தென்னை முக்கிய பயிர்கள், இருப்பினும், பட்டுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விளைபொருட்கள் வளர்க்கப்படுகின்றன. இதற்காக ஜெபிப்போம்.

பட்டுக்கோட்டை “காயர் கொத்து” செப்டம்பர் 2007 இல் பாரம்பரிய தென்னை நார் சார்ந்த தொழில்களை ஊக்குவித்து வருகிறது. தமிழகத்தில், பொள்ளாச்சிக்குப் பிறகு, பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள 30,000 ஹெக்டேர் நிலத்தில் தென்னை சாகுபடி பெருமளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டையில் ரூ.4 கோடியில் தேங்காய் வளாகம் கட்டப்பட்டு, தேங்காய்களை தரம் பிரிப்பது, கொப்பரை பிரித்தெடுப்பது, உலர்த்தும் கூடம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை பகுதி பட்டு மழவராயர் என்பவர்களால் ஆட்சி செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை அருகேயுள்ள மனோரா எனும் சுற்றுலாத்தலம் உள்ளது. மேலும் இங்குள்ள அருள்மிகு நாடியம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.மேலும் இங்கு புகழ்பெற்ற ‘கல்யாணசுந்தரம் மணிமண்டபம்’ அமைந்துள்ளது.

பட்டுக்கோட்டை வட்டத்தில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத மக்கள் மத்தியில் கர்த்தருடைய வார்த்தைகள் விதைக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். ஆவிக்குரிய தேவ ஊழியர்களை கர்த்தர் இந்த பகுதிகளில் எழுப்பி தர நாம் ஜெபிப்போம். பட்டுக்கோட்டை பகுதியில் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.