Daily Updates

தினம் ஓர் ஊர் – கெங்குவார்பட்டி (Genguvarpatti) – 30/10/23

தினம் ஓர் ஊர் – கெங்குவார்பட்டி (Genguvarpatti)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தேனி

மக்கள் தொகை – 10,569

கல்வியறிவு – 57%

மக்களவைத் தொகுதி – தேனி

சட்டமன்றத் தொகுதி – பெரியகுளம்

மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)

District Revenue Officer – Sis. Jeyabharathi

District Forest Officer – Bro. S.Kowtham

மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. K.S.Saravanakumar (MLA)

நகராட்சி ஆணையர் – Bro. S.Ganesh

நகராட்சி தலைவர் –  Sis. S.Sumitha

நகராட்சி துணை தலைவர் – Bro. S.Raja Mohamed

Revenue Divisional Officer  – Sis. K.Sindhu (Periyakualam)

Town Planning Inspector  – Bro. R.Veeranan

Principal District Judge  – Sis. K. Arivoli

Additional District & Sessions Judge – Bro. P.Ganesan (Periyakulam)

Subordinate Judge  – Bro. K.Mariappan (Periyakulam)

District Munsif  – Bro. A.Kannan (Periyakulam)

Judicial Magistrate  – Bro. K.Kamalanathan (Periyakulam)

ஜெபிப்போம்

கெங்குவார்பட்டி (Genguvarpatti) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது கொடைக்கானல் செல்வதற்கான நுழைவு வாயிலாக உள்ளது. இந்த பேரூராட்சியின் வடக்கில் கொடைக்கானல் மலையும், மேற்கில் தேவதானப்பட்டியும், கிழக்கில் வத்தலக்குண்டும் எல்லைகளாக அமைந்துள்ளன. கெங்குவார்பட்டி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

இந்த பேரூராட்சி பழனி மலைக்குன்றுகளின் அருகே அமைந்துள்ளதால் வருடம் முழுவதும் மிதமான வெப்பநிலையே நிலவுகிறது. இந்த ஊர் தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் அமைப்பில் முதல்நிலைப் பேரூராட்சி எனும் நிலையில் உள்ளது. சுமார் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடையது. காமக்காபட்டி, கோட்டார்பட்டி, செங்குளத்துப்பட்டி, பாலப்பட்டி, மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்கள் கெங்குவார்பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்டவையாக இருக்கின்றன. தேனி மாவட்டத்தின் எல்லையாகவும் அமைந்திருக்கிறது. கெங்குவார்பட்டியில் உள்ள கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தேனி மக்களவை உறுப்பினர் Bro. P.Ravindhranath அவர்களுக்காகவும், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் Bro. K.S.Saravanakumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை உண்மையாக நிறைவேற்ற ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

கெங்குவார்பட்டி பேரூராட்சியானது பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 74 தெருக்கள் இருக்கின்றன. வார்டு உறுப்பினர்களுக்காகவும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பினை உண்மையாகவும், பொறுப்போடும் செய்ய ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டு மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியில் மொத்தம் 10,592 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,377 ஆண்கள், 5,215 பெண்கள் ஆவார்கள். கெங்குவார்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 57% ஆகும். கெங்குவார்பட்டி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பத்தின் ஆசீர்வாதத்திற்காகவும், தேவைகளுக்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தருடைய பாதுகாப்பு கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.

இவ்வூரின் விவசாயம்தான் ஊருக்கு முதுகெலும்பு; இந்த நகரத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றனர். இந்த ஊரின் பெரும்பாலான பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் பசுமைத் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு நெல், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புக்கள் அதிக அளவில் உள்ளன. விவசாயப் பணிகளுக்கு மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளிலிருந்து நீர் பெறப்படுகிறது. தேங்காய், நெல், கரும்பு, வாழை, பருத்தி மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பேரூராட்சியில் உள்ள விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம். அவர்களின் தேவைகளுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.