Daily Updates

தினம் ஓர் ஊர் – இலஞ்சி(Ilanji) – 07/08/23

தினம் ஓர் ஊர் – இலஞ்சி

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தென்காசி

மக்கள் தொகை – 10,282

கல்வியறிவு – 80.09 %

மக்களவைத் தொகுதி – தென்காசி

சட்டமன்றத் தொகுதி – தென்காசி

மாவட்ட ஆட்சியர் – Bro. Durai Ravichandran (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. E.T.Samson (I.P.S)

District Revenue Inspector – Bro. M.Nagaranjan

Special Revenue Inspector – Bro. A.Abdul Kadar @ Abu

மக்களவை உறுப்பினர் – Bro. Dhanush M.Kumar (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. S.Palani Nadar (MLA)

நகராட்சி ஆணையர் – Sis. S.M.Farijan (Tenkasi)

நகராட்சி தலைவர் –  Bro. R.Sadhir

நகராட்சி துணை தலைவர் – Bro. K.N.L.Subbaiah

Municipal Engineer – Bro. R.Jayaseelan

Principal District Munsif – Bro. K. Baskar

Additional District Judge – Sis. G.Anuradha

ஜெபிப்போம்

இலஞ்சி (Ilanji), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இது தென்காசி மற்றும் செங்கோட்டை நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இலஞ்சிக்கு மேற்கே 4 கிமீ தொலைவில் செங்கோட்டையும், வடக்கே 4 கிமீ தொலைவில் குத்துக்கல்வலசையும், தெற்கே 4 கிமீ தொலைவில் குற்றாலம் மற்றும் மேலகரம் 4 கிமீ தொலைவிலும், கிழக்கே 5கிமீ தொலைவில் தென்காசியும் உள்ளது. இலஞ்சி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

இளஞ்சி என்ற சொல்லுக்கு நீர்நிலை உட்பட பல பொருள்கள் உண்டு. இந்த கிராமத்திற்கு மிக அருகில் மூன்று ஏரிகள் உள்ளன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இரண்டையும் பெறும் ஒரே இடம் இதுதான். புவியியல் ரீதியாக, இலஞ்சி என்பது ஒரு முக்கோணத்தின் மையப்பகுதியாகும், அதன் மூன்று மூலைகளிலும் செங்கோட்டை, குற்றாலம் மற்றும் தென்காசி நகரங்கள் உள்ளன, இவை ஒவ்வொன்றும் இலஞ்சியிலிருந்து சுமார் 3 கிமீ (2 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இதனால் சிலர் இதனை “மூன்று நகரம்” என்று அழைக்கின்றனர். இது சிற்றாறு (தெற்கரு) மற்றும் குண்டாறு (வடக்கரு) ஆகிய இரண்டு ஆறுகளாலும் சூழப்பட்டுள்ளது.

இப்பேரூராட்சி 8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 118 தெருக்களும், 2823 வீடுகளும் கொண்டுள்ளது. இலஞ்சி பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளுக்காகவும், வார்டு உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளுக்காக ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டில் உள்ள மக்களுடைய அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட ஜெபிப்போம். கவுன்சிலர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

இலஞ்சி பேரூராட்சி தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தென்காசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் Bro. S.Palani Nadar அவர்களுக்காகவும், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Dhanush M.Kumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்காக ஜெபிப்போம்.

மாவட்ட கலெக்டர் Bro. Durai Ravichandran அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. E.T.Samso அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் ஆணையர் Bro. M.Nagaranjan அவர்களுக்காகவும், சிறப்பு மாவட்ட வருவாய் ஆணையர் Bro. A.Abdul Kadar @ Abu அவர்களுக்காகவும், ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆசீர்வதித்து வழிநடத்திட ஜெபிப்போம்.

தென்காசி மாவட்ட ஆணையர் Sis. S.M.Farijan அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. R.Sadhir அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர்      Bro. K.N.L.Subbaiah அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளுக்காக ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

இந்த நகரத்தில் மொத்தம் 10,282 மக்கள் வாழ்கிறார்கள். இதில் 5,130 ஆண்கள் மற்றும் 5,152 பெண்கள் உள்ளார்கள். இந்துகள் 95.41% பேரும், முஸ்லிம் 2.17% பேரும், கிறிஸ்தவர்கள் 2.30% பேர் இருக்கிறார்கள். இலஞ்சியில், ஆண்களின் கல்வியறிவு 88.41% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 72.90% ஆகவும் உள்ளது. இலஞ்சி பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக, இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். இங்குள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களில் சமாதானம், ஐக்கியம் உண்டாக ஜெபிப்போம். குடும்பங்களின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

இலஞ்சியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம். தொழிலுக்கான பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். இலஞ்சியில் பருப்பு, வெல்லம் மற்றும் தேங்காய் இல்லாமல் தயாரிக்கப்படும் “பொழி” என்ற இனிப்புக்கும் மிகவும் பிரபலமாகும்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.