No products in the cart.
தினம் ஓர் ஊர் – புளியங்குடி(Puliangudi) – 01/08/23
தினம் ஓர் ஊர் – புளியங்குடி
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தென்காசி
மக்கள் தொகை – 66,080
கல்வியறிவு – 77.36%
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – வாசுதேவநல்லூர்
மாவட்ட ஆட்சியர் – Bro. Durai Ravichandran (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. E.T.Samson (I.P.S)
District Revenue Inspector – Bro. M.Nagaranjan
Special Revenue Inspector – Bro. A.Abdul Kadar @ Abu
மக்களவை உறுப்பினர் – Bro. Dhanush M.Kumar (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. T.Sadhan Tirumalaikumar (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. M.Suganthi
நகராட்சி தலைவர் – Sis. S.Vijaya
நகராட்சி துணை தலைவர் – Bro. A.Anthonysamy
Revenue Inspector – Bro. T.Vairamani
Principal District Munsif – Bro. K. Baskar
Additional District Judge – Sis. G.Anuradha
ஜெபிப்போம்
புளியங்குடி (Puliangudi), தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஓர் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இந்த ஊரானது, மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ள ஊர்களில் ஒன்றாகும். ‘புளியங்குடி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் எலுமிச்சை பழம் சாகுபடி அமோகமாக உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய எலுமிச்சம் பழம் சந்தை இவ்வூரில் உள்ளது. இதனால் இந்த ஊரை லெமன் சிட்டி என்று அழைக்கப்படுகிறது. புளியங்குடி நகராட்சிக்காக ஜெபிப்போம்.
இந்த நகரம் திருநெல்வேலியிலிருந்து 75 கி.மீ. தொலைவிலும் மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், இராஜபாளையத்திலிருந்து 45 கி.மீ. தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த நகராட்சிகு அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.
இந்த நகராட்சி வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. T.Sadhan Tirumalaikumar அவர்களுக்காகவும், மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Dhanush M.Kumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
புளியங்குடி நகராட்சி ஆணையர் Sis. M.Suganthi அவர்களுக்காகவும், புளியங்குடி நகராட்சி தலைவர் Sis. S.Vijaya அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. A.Anthonysamy அவர்களுக்காகவும், புளியங்குடி நகராட்சியின் வருவாய் ஆணையர் Bro. T.Vairamani அவர்களுக்காக ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளுக்காக ஜெபிப்போம்.
இந்த நகராட்சியில் 66,080 மக்கள் வசிக்கின்றார்கள். அவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புளியங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். புளியங்குடி நகரத்தில் 72.22% இந்துக்கள், 20.88% முஸ்லிம்கள், 6.81% கிறிஸ்தவர்கள், 0.01% சீக்கியர்கள் மற்றும் 0.07% பிற மதங்களைப் பின்பற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். புளியங்குடி நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் தேவைகளுக்காக, ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
இவ்வூரில் லுங்கித் துணி நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். மேலும் நகரத்தின் பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்து அமைந்துள்ளது. மொத்த மக்கள்தொகையில், 29,935 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 18,563 ஆண்கள் மற்றும் 11,372 பெண்கள். நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்கள் செய்கின்ற தொழிலை ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள விவசாயிகளுக்காக ஜெபிப்போம். அவர்களது குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
புளியங்குடி நகரம் அமில சுண்ணாம்பு சாகுபடிக்கு பெயர் பெற்றது. தட்பவெப்பநிலை, மண் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகள் இந்தப் பயிர் சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாக இருப்பதால், அமிலச் சுண்ணாம்பு சாகுபடியில் இந்நகரம் முன்னணியில் உள்ளது. இதற்காக ஜெபிப்போம்.
புளியங்குடி நகராட்சியில் உள்ள சிறு பிள்ளைகளுக்காகவும், வாலிப பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்கள் மத்தியில் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம். பிள்ளைகள் ஆண்டவருடைய வார்த்தையின்படி நடக்கவும், இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம்.