No products in the cart.
தினம் ஓர் ஊர் – திருச்செந்தூர் – 15/07/23
தினம் ஓர் ஊர் – திருச்செந்தூர்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தூத்துக்குடி
மக்கள் தொகை – 32,171
கல்வியறிவு – 79%
மக்களவைத் தொகுதி – தூத்துக்குடி
சட்டமன்றத் தொகுதி – திருச்செந்தூர்
மாவட்ட ஆட்சியர் – Bro. K.Senthil Raj (I.A.S)
Additional Collector – Bro. Thakare Shubham Dnyandeorao (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. L.Balaji Saravanan (I.P.S)
District Revenue Officer – Bro. C.Ajay Srinivasan
மக்களவை உறுப்பினர் – Sis. Kanimozhi Karunanidhi (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Anitha R.Radhakrishnan (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. N.T.Velavan
நகராட்சி தலைவர் – Sis. R.Sivananthi
நகராட்சி துணை தலைவர் – Bro. A.B.Ramesh
Municipal Engineer – Sis. K.S. Hazeena
Sanitary Inspector – Bro. A.Vetrivel Murugan
Town Planning Inspector – Bro. Nijanthan
Principal District Judge – Bro. M.Selvam
Judicial Magistrate – Bro. S.Varatharajan
Sub Judge – Bro. P.V.Vasheeth Kumar
ஜெபிப்போம்
திருச்செந்தூர் (Thiruchendur), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் பல ஊர்களைப் போலவே கோயில் நகரமான திருச்செந்தூர், செந்தூர் என்ற ஊரின் செம்மண் இயற்கையின் பெயரால் அழைக்கப்படுகிறது. திருச்செந்தூர் நகராட்சிக்காக ஜெபிப்போம்.
இந்நகராட்சி திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Anitha R.Radhakrishnan அவர்களுக்காகவும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Sis. Kanimozhi Karunanidhi அவர்களுக்காகவும் ஜெபிப்போம், இவர்களை தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
திருச்செந்தூர் நகராட்சி 10.5 ச.கி.மீ. பரப்பும், 21 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்டது. இந்த நகரத்தின் வார்டு கவுன்சிலர்களுக்காக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்காக ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டு மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட ஜெபிப்போம்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் Bro. K.Senthil Raj அவர்களுக்காகவும், மாவட்ட கூடுதல் கலெக்டர் Bro. Thakare Shubham Dnyandeorao அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. L.Balaji Saravanan அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் ஆணையர் Bro. C.Ajay Srinivasan அவர்களுக்காகவும், சுகாதாரதுறை ஆணையர் Bro. A.Vetrivel Murugan அவர்களுக்காகவும், Town Planning Inspector Bro. Nijanthan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் அவர்கள் செய்கின்ற பணிகளை ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.
திருச்செந்தூர் நகராட்சி, 16 அக்டோபர் 2021 அன்று திருச்செந்தூர் பேரூராட்சியை நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் Bro. N.T.Velavan அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. R.Sivananthi அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. A.B.Ramesh அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் பதினொன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருச்செந்தூரில் உள்ள ஊராட்சி மன்றங்களுக்காக, ஊராட்சி மன்ற தலைவருக்காக, ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம்.
இந்த நகராட்சியில் மொத்தம் 32,171 மக்கள் உள்ளனர். அவர்களில் 15,973 ஆண்கள் மற்றும் 16,198 பெண்கள் இருக்கிறார்கள். நகரத்தில் மொத்தம் 8,271 வீடுகள் இருக்கின்றன. திருச்செந்தூரில் ஆண்களின் கல்வியறிவு 93.69% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 89.11% ஆகவும் உள்ளது. திருச்செந்தூரில் வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். திருச்செந்தூரில் உள்ள வாலிப பிள்ளைகள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.
திருச்செந்தூர் தமிழ்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவை நோக்கிய கடற்கரையில் அமைந்துள்ளது. நகரத்தைச் சுற்றியுள்ள புறநகர் கிராமங்களில் வறண்ட, சிவப்பு மண் காடுகள் அடர்ந்து பனை மரங்கள், முந்திரி தோட்டங்கள் மற்றும் இப்பகுதியின் பிற பயிர்களும் வளர்க்கப்படுகின்றன. திருச்செந்தூர் மக்களின் தொழில்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம். இந்த நகரத்தின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட ஜெபிப்போம்.