No products in the cart.

தினம் ஓர் ஊர் – வல்வைத்தான்கோஷ்டம்
(Valvaithankoshtam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 16,965
கல்வியறிவு – 79%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – பத்மநாபபுரம்
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. T.Mano Thangaraj (MLA)
நகராட்சி ஆணையாளர் – Bro. S.Lenin
நகராட்சி தலைவர் – Bro. G.Arulshoban
நகராட்சி துணை தலைவர் – Bro. R.Unnikrishnan
Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)
ஜெபிப்போம்
வல்வைத்தான்கோஷ்டம் (Valvaithankoshtam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சுமார் மூன்று சதுர கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் வல்வச்சகோஷ்டம் (வல்வைத்தான்கோஷ்டம் என்றும் அழைக்கப்படுகிறது) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய குடியேற்றமாகும். மேற்கில் புதுக்கடையும், வடக்கே உண்ணாமலைக்கடையும், தெற்கில் காப்பியரையும், தென்மேற்கில் கிள்ளியூரும் அமைந்துள்ளன. வாள்வைத்தான்கோட்டம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. T.Mano Thangaraj அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியினை உண்மை உத்தமதோடு செய்ய ஜெபிப்போம்.
வல்வைத்தான்கோஷ்டம் பேரூராட்சியின் நகராட்சி ஆணையர் Bro. S.Lenin அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. G.Arulshoban அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. R.Unnikrishnan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற எல்லா காரியங்களிலும் கர்த்தர் இவர்களோடுகூட இருந்து பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சி பரசுராமரால் உருவானது என்று கேரளம் புராணங்கள் கூறுகின்றது. பரசுராமர் தனது தந்தை சமதக்கினி முனிவரின் ஆணைக்கிணங்க தமது தாயாரின் தலையைக் கொய்தார். அந்த பாவம் தீர இமயத்தில் தவமியற்ற அறிவுறுத்தப்பட்டடார். அந்நிலையில் அவர் தனது வாளை இந்த இடத்தில் வைத்துவிட்டுச் சென்றதால் இவ்விடம் வாள்வைத்தக் கோட்டம் எனப்படுகிறது.
குழித்துறை, கொல்லம்கோடு, குளச்சல் துறைமுகம், தேங்காப்பட்டினம், திருவட்டார், சங்குத்துறை கடற்கரை, மணவாளக்குறிச்சி, முட்டம் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனை ஆகியவை அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களாகும். இந்த சுற்றுலாத் தலங்களுக்காக ஜெபிப்போம். இந்த பகுதிக்கு சுற்றுலாவிற்காக வருபவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்.
வல்வைத்தான்கோஷ்டம் நகரம் 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. வல்வைத்தன்கோஷ்டம் நகரில் மொத்தம் 4,406 குடும்பங்கள் வசிக்கின்றன. வல்வைத்தன்கோஷ்டத்தின் மொத்த மக்கள் தொகை 16,965 ஆகும். இதில் 8,310 ஆண்கள் மற்றும் 8,655 பெண்கள் உள்ளனர். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் தேவைகளுக்காக ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தருடைய பாதுகாப்பு கரத்திற்குள் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.
வல்வைத்தன்கோஷ்டத்தின் கல்வியறிவு விகிதம் 93.8% ஆகும். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் 91.7% கல்வியறிவு விகிதத்துடன் ஒப்பிடும்போது வல்வைதாங்கோஷ்டம் அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. வல்வைத்தன்கோஷ்டத்தில் ஆண்களின் கல்வியறிவு 95.3% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 92.39% ஆகவும் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.
வல்வைத்தான்கோஷ்டம் டவுன் பஞ்சாயத்தில் மொத்த மக்கள் தொகையில் 6,091 பேர் பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் முக்கிய தொழிலாளர்கள் மொத்தம் 5,228 பேர், அதில் ஆண்கள் 4,155 பேரும், 1,073 பெண்கள் ஆவார்கள். மேலும் விவசாயத் தொழிலாளர்கள் மொத்தம் 343 பேரும், வீட்டுத் தொழில் செய்பவர்கள் 175 பேரும், மற்ற தொழிலாளர்கள் 4,667 பேரும் உள்ளனர். பல்வேறு தொழில்களை செய்கின்ற மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற வேலைகளை எல்லாம் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.