Daily Updates

தினம் ஓர் ஊர் – பரமக்குடி – 07/07/23

தினம் ஓர் ஊர் – பரமக்குடி
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – இராமநாதபுரம்
மக்கள் தொகை – 265,142
கல்வியறிவு – 80.82%
மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்
சட்டமன்றத் தொகுதி – பரமக்குடி
மாவட்ட ஆட்சியர் – Sis. Vishnu Chandran (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. P.Thangadurai (I.P.S)
District Revenue Officer – Bro. R.Govindarajalu
மக்களவை உறுப்பினர் – Bro. Kani K.Navas (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. B.Murugesan (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. P.Thirumalselvam
நகராட்சி தலைவர் – Sis. S.Karunanidhi
நகராட்சி துணை தலைவர் – Bro. M.Gunasekaran
District Revenue Inspectors – Bro. V.Murugan
Principal District and Sessions Judge – Sis. G.Vijaya
Additional District Judge (FTC) – Sis. N.Shanthi
Judicial Magistrate Judge – Sis. S.P.Kavitha

ஜெபிப்போம்

பரமக்குடி (Paramakudi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இந்த நகரம் வைகை நதியின் கரையில் அமைந்திருக்கிறது. பரமக்குடி நகராட்சி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நகரமாகும். பரமக்குடி நகராட்சிக்காக ஜெபிப்போம்.

1910 இல், பரமக்குடி மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து உருவாக்கப்பட்டது, ஜே.எஃப் பிரையன்ட் முதல் கலெக்டராக இருந்தார். ஆங்கிலேயர் காலத்தில் இந்த மாவட்டம்” ராம்நாடு ” என்று அழைக்கப்பட்டது மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகும் அந்த பெயர் இருந்தது. இப்பகுதியின் தமிழ்ப் பெயருக்கு இணங்க இம்மாவட்டம் “ராமநாதபுரம்” எனப் பெயர் மாற்றப்பட்டது. பரமக்குடி நகரின் வழியாக ஓடும் வைகை ஆற்றின் பெயரால் பரம்பை என்றும் அழைக்கப்படுகிறது: இதன் பொருள் “வைகையின் முகம்” என்று கூறப்படுகிறது.

பரமக்குடி நகரம் 1918 ஆம் ஆண்டு முதல், அதாவது ராமநாதபுரம் மாவட்டம் உருவான நாளிலிருந்து தாலுகா தலைமையகமாக இருந்து வருகிறது. பரமக்குடி இந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இருந்து பரமக்குடி மற்றும் எமனேஸ்வரன் என்ற இரு தனித்தனி குடியிருப்புகளைக் கொண்டுள்ளது. இந்த குடியிருப்புகள் 1901 முதல் 1961 வரையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவுகளில் தனி நகரங்களாக வகைப்படுத்தப்பட்டன, பின்னர் ஒன்றாக இணைக்கப்பட்டு 1964 இல் தற்போதைய நகராட்சி நகரமாக உருவானது. பரமக்குடி நகராட்சியின் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.

வரலாற்று ரீதியாக இந்த பகுதி பாண்டியர்களின் வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது, இது எந்த அரசரின் தலைமையிடமல்ல, ஆனால் பாண்டியர்களாலும் பின்னர் ராமநாதபுரம் ராஜா சேதுபதியின் ஆட்சியினாலும் ஆட்சி செய்யப்பட்டது. பண்டைய காவிய ராமாயணத்தின் படி, ராம ராமாவுக்கு எதிராக ராவணனுக்கு எதிரான போர் தொடங்கியது, இங்கு 45 நிமிடங்கள் பயணம் செய்யும் சேது கால்வாய். 1964 ஆம் ஆண்டில் பரமக்குடி, எமனேஸ்வரம் ஆகிய இரு நகரங்களையும் இணைத்து பரமக்குடி நகராட்சி உருவாக்கப்பட்டது.

பரமக்குடிக்குப் பரம்பைக்குடி என்ற பெயர் ஒரு காலத்தில் இருந்திருக்குமென்று சிலர் சொல்வார். பரம்பை என்பது வன்னி மரமே. வன்னி என்பது மரத்தின் வன்மை (வலிமை) கருதி ஏற்பட்ட பெயர் (வன்>வன்னி = hard wood). வீட்டு நிலைகளை வைக்க வேண்டுமானால் வன்னி மரத்தைத் தச்சு வேலைக்குப் பயன்படுத்துவர். அவ்வளவு வலிமையானது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரம்.

பரமக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. B.Murugesan அவர்களுக்காகவும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Kani K.Navas அவர்களுக்காகவும், மாவட்ட ஆட்சியர் Sis. Vishnu Chandran அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. P.Thangadurai அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம்.

இந்த நகரம் 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. பரமக்குடி நகராட்சி ஆணையர் Bro. P.Thirumalselvam அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. S.Karunanidhi அவர்களுக்காகவும், துணை நகராட்சி தலைவர் Bro. M.Gunasekaran அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் ஆணையர் Bro. V.Murugan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம்.

பரமக்குடி வட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் பரமக்குடி, நயினார்கோவில்,மற்றும் கிள்ளியூர் என 3 உள்வட்டங்களும், 91 வருவாய் கிராமங்களும் உள்ளது. பரமக்குடி நகராட்சியில் உள்ள வருவாய் கிராமங்களுக்காக ஜெபிப்போம்.

இவ்வட்டத்தில் மொத்தம் 265,142 மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களில் 134,134 ஆண்களும், 131,008 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 60.8% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.11%, இசுலாமியர்கள் 5.92%, கிறித்தவர்கள் 3.79% மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 66,337 குடும்பங்கள் இருக்கிறார்கள். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள குடும்பங்களை பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிவப்பு குடை மிளகாய் விளைச்சலில் சிறப்பு பெற்றதாகும். இங்கு விளைவிக்கப்படும் பருத்தி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மொத்த தமிழகத்திற்குமான மிளகாய் விலை இங்கு தான் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த தொழில் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.

பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான சௌராஷ்டிரா இன மக்கள் அசல் பட்டு ஜரிகை மற்றும் அனைத்து வித கைத்தறி சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் இந்தியா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்ப்படுகிறது. இந்த நெசவுத் தொழிலுக்காக ஜெபிப்போம். இதில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம், கர்த்தர் அவர்களின் கையின் பிரயாசத்தை ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.