No products in the cart.

தினம் ஓர் நாட்டின் தலைநகரம் ஜப்பானின் தலைநகரம் – டோக்கியோ (Tokyo – Capital of Japan)
தினம் ஓர் நாட்டின் தலைநகரம் ஜப்பானின் தலைநகரம் – டோக்கியோ (Tokyo – Capital of Japan)
நாடு (Country) – ஜப்பான் (Japan)
கண்டம் (Continent) – ஆசியா (Asia)
அதிகாரப்பூர்வ மொழி – Japanese
மக்கள் தொகை – 14,187,176
மக்கள் – Tokyoite
அரசாங்கம் – டோக்கியோ பெருநகர அரசு
Prime Minister – Shigeru Ishiba
Governor – Yuriko Koike
மொத்த பரப்பளவு – 2,194 km2 (847 sq mi)
தேசிய பறவை – Green pheasant
தேசிய மரம் – Cherry blossom
தேசிய மலர் – Cherry blossom
தேசிய பழம் – Japanese persimmon
தேசிய விளையாட்டு – Sumo wrestling
நாணயம் – Japanese yen
ஜெபிப்போம்
டோக்கியோ நகரம் (Tokyo City), ஜப்பான் நாட்டின் தலைநகரமாகும். மேலும் இது மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நகரமாகும். டோக்கியோ, ஜப்பானிய அரசு மற்றும் அரசரின் தலைமையிடமாகும். இந்நகரத்தின் மொத்த மக்கள் தொகை 12 மில்லியன் ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 10% பேர் இங்கு வாழ்கின்றனர்.
டோக்கியோ ஜப்பானின் நான்கு முக்கியத் தீவுகளில் பெரிய தீவான ஹொன்ஷூ தீவின் தென்கிழக்குப் பகுதியில் கன்டோ மண்டலத்தில் அமைந்துள்ளது. டோக்கியோ பெருநகரம் 1943ஆம் ஆண்டு முந்தைய டோக்கியோ மாநிலத்தையும் டோக்கியோ நகரத்தையும் ஒன்றிணைத்து உருவானது. டோக்கியோ ஒரு நகரமாகக் கருதப்பட்டாலும் இதனை பெருநகர மாநிலம் என்றே குறிப்பிடுகின்றனர். பெருநகர மாநிலமாக டோக்கியோ நகரத்தை ஒன்றிணைப்பதற்கு முன்பிருந்த 23 நகராட்சி வார்டுகளும் சிறப்பு வார்டுகளாக அரசாளப்படுகின்றன. ஒவ்வொன்றும் தனி நகரமாகவே ஆளப்படுகிறது. இவற்றைத் தவிர பெருநகர மாநிலத்தில் 39 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் 30 மாநிலத்தின் மேற்கிலும் 8 இசூ தீவிலும் ஒன்று ஓகசவரா தீவிலும் உள்ளன.
ஜப்பானில் உள்ள நான்கு நபர்களில் ஒருவர் டோக்கியோவில் வாழ்கின்றார். 100க்கு மேற்பட்ட கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இங்கு அமைந்துள்ளது. கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்களுக்காகவும் பெருமளவு ஜப்பானியர்கள் இந்த நகரிற்கு குடி பெயருகின்றனர். பெரும்பாலான ஜப்பானிய நிறுவனங்கள் தமது தலைமை அலுவலகத்தை இங்கேயே அமைத்துள்ளனர். அமெரிக்க $1.479 டிரில்லியன் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படுத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட டோக்கியோ உலகின் மிகப்பெரும் பொருளியல் சமூகத்தைக் கொண்ட நகரங்களில் முதலாவதாக விளங்குகிறது. உலகின் எந்த நகரத்திற்கும் இல்லாத பெருமையாக உலகளாவிய பார்ச்சூன் 500 நிறுவனங்களில் 51 நிறுவனங்கள் இந்த நகரிலிருந்து இயங்குகின்றன.
உலகப் பொருளாதாரத்தின் மூன்று கட்டுப்பாட்டு மையங்களில் ஒன்றாக நியூயார்க் நகரம் மற்றும் இலண்டன் நகரங்களுடன் அறியப்படுகிறது. இந்த நகரம் ஓர் உலகளாவிய நகரமாக கருதப்படுகிறது. பல்வேறு உலக மக்கள் வாழும் நகரங்களில் நான்காவதாக மற்றொரு பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 2012இல் டோக்கியோ வெளிநாட்டினருக்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக வாழும் செலவினங்களை கணிக்கும் மெர்சர் அறிக்கை குறிப்பிடுகின்றது. மேலும் 2009இல் மிகவும் வாழத்தக்க நகரமாகவும் மோனோக்கிள் என்ற வாழ்நிலை இதழ் அறிவித்துள்ளது.
டோக்கியோ துவக்கத்தில் கழிமுகம் எனப் பொருள்படும் எடோ என்ற சிற்றூராக இருந்தது. இராச்சியத்தின் தலைநகரமாக 1868இல் தேர்வானபோது இதன் பெயர் டோக்கியோ என கிழக்காசிய மரபுப்படி மாற்றப்பட்டது.
டோக்கியோவின் தெருக்கள் குறுகிய தெருக்களாகவே உள்ளது. இங்கு மோட்டார் வண்டி, பேருந்து, மேட்டார் சைக்கிள், சைக்கிள் இருந்த போதும் சுரங்க இரயில்களே மிகவும் பிரபலமானதாகும். சுரங்க ரயில்களை தினமும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். புல்லட் இரயில்கள் ஓசாகா மற்றும் ஜப்பானின் பிரதான நகரங்களை இணைக்கின்றன. புல்லெட் ட்ரெயின் என்று அழைக்கப்படும் மிக அதி வேக ரயில்கள் சராசரியாக வருடத்திற்கு 0.6 நிமிடங்களே தாமதமாக செல்கின்றது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
டோக்கியோ மக்கள் வாடகைக் கார்களை (டாக்ஸி) போக்குவரத்திற்காக உபயோகிக்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர். தூரமாக செல்லும் போதும், குழுக்களாக பயணிக்கும் பொழுதும், இரவு நேரங்களில் ரயில் மற்றும் பேருந்து சேவை இல்லாத நேரங்களில் மக்கள் வாடகைக்கார்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
டோக்கியோ உலகின் முன்னேறிய நகரமாயினும், அதிகரிக்கும் மக்கள்தொகை பெரும் பிரச்சனையாக உள்ளது. அத்துடன் சூழல் மாசடைதலும் மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது.
டோக்கியோ நகரத்திற்காக ஜெபிப்போம். டோக்கியோ நகரத்தின் PRIME MINISTER, GOVERNOR மற்றும் அரசு அதிகாரிகளுக்காகவும் ஜெபிப்போம். டோக்கியோ நகர மக்களின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம். டோக்கியோ நகரத்தின் பொருளாதாரத்திற்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.