No products in the cart.
தினம் ஓர் நாடு – மாலத்தீவு (Maldives) – 25/07/23
தினம் ஓர் நாடு – மாலத்தீவு (Maldives)
கண்டம் (Continent) – ஆசியா (Asia)
தலைநகரம் – மாலே (Male)
தேசிய மொழி – திவேஹி (Dhivehi)
பொதுவான மொழி – ஆங்கிலம்
மதம் – சுன்னி இஸ்லாம்
மக்கள் தொகை – 515,122
அரசாங்கம் – ஒற்றையாட்சி ஜனாதிபதி
அரசியலமைப்பு குடியரசு
ஜனாதிபதி – இப்ராஹிம் முகமது சோலி
துணைத் தலைவர் – பைசல் நசீம்
மஜ்லிஸ் பேச்சாளர் – முகமது நஷீத்
தலைமை நீதிபதி – அகமது முத்தசிம் அட்னான்
சுதந்திரம் அறிவிக்கப்பட்டது – 26 ஜூலை 1965
குடியரசு அறிவிக்கப்பட்டது – 11 நவம்பர் 1968
மொத்த பகுதி – 300[5] கிமீ2 (120 சதுர மைல்)
தேசிய விலங்கு – யெல்லோஃபின் டுனா
(Yellowfin tuna)
தேசிய பறவை – வெள்ளை மார்பக வாட்டர்ஹென் (White Breasted Waterhen)
தேசிய மலர் – (பிங்க்ரோஸ்) Pinkrose
தேசிய மரம் – (தேங்காய் பனை) Coconut Palm
தேசிய விளையாட்டு – கால்பந்து (Football)
நாணயம் – மாலத்தீவு ரூஃபியா (Maldivian rufiyaa)
ஜெபிப்போம்
மாலத்தீவு (Maldives) அல்லது மாலத்தீவு குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நாடாகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கி.மீ. தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 90,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 5 இலட்சத்து 15 ஆயிரத்து 122 ஆகும். மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200-இல் மட்டும் மனிதக் குடியேற்றங்கள் காணப்படுகிறன. தீவுகளால் அமைந்த மாலைபோல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்றும் சமஸ்கிருத மொழியில் “மாலத்வீப”(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது. மாலத்தீவு நாட்டிற்காக ஜெபிப்போம்.
சோழர்கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டன. 1153இல் இசுலாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 1558-இல் போர்த்துக்கேயரிடமும், 1654 டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியிடமும் பின்பு 1887 முதல் பிரித்தானியரிடமும் அடிமைப்பட்டது. 1965-ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1968-இல் சுல்தான் ஆட்சியிலிருந்து குடியரசாக மாறியது. குடியரசான மாலைத் தீவுகளின் முதல் குடியரசுத் தலைவர் சுல்தான் ஆட்சியில் பிரதமராக இருந்த இப்ராகிம் நசீர் ஆவார். நாட்டின் அரசியல் அமைப்புக்காக ஜெபிப்போம்.
மாலத்தீவின் வரலாற்றின்படி சிங்கள இளவரசன் கொயிமலா என்பவர் தனது மனைவியான இலங்கை அரசனின் மகளோடு கப்பலில் செல்லும் போது சதுப்பு நிலத்தில் கப்பல் சிக்கி அவர்கள் மாலைத்தீவில் தங்கும்படியாயிற்று. அவ்விளவரசன் இலங்கைக்கு திரும்பாமல் மாலைத்தீவிலிருந்து ஆட்சி செய்தான். அவன் முதலாவது சுல்தானெனக் கொள்ளப்படுகிறார். அதற்கு முன்னர் கிராவரு என்பவர்கள் மாலத்தீவை ஆண்டதாக கூறப்படுகிறது.
இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு முன்னர் மாலத்தீவினர் பௌத்த மதத்தையே பின்பற்றினார்கள். மாலத்தீவின் கலாச்சாரமானது பல கடல்வழி வியாபாரிகளின் தாக்கத்தைக் கொண்டது. இது வரலாற்றில் பெரும் பகுதி சுதந்திர இஸ்லாமிய நாடாக இருந்தது எனினும் 1887 முதல் 1965 யூலை 25 வரை பிரித்தானிய முடியின் கீழான அரசாகக் காணப்பட்டது. விடுதலைக்குப் பிறகு 1968 ஆம் ஆண்டு சுல்தான் ஆட்சி முறை கலைக்கப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.
மாலத்தீவுகளின் தலா வருமானம் 1980களில் அதிகூடிய வளர்ச்சியான 26.5 சதவீதத்தைக் காட்டியது. சுற்றுலாத் துறையும் மீன்பிடிக் கைத்தொழிலும் மாலைத்தீவுகளின் பொருளாதாரத்தின் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. கப்பல் மற்றும் வங்கி, உற்பத்தி துறைகளும் முக்கிய பங்களிப்பைச் செய்கின்றன. தெற்காசியாவில் இரண்டாவது கூடிய தலா வருமானத்தைக் கொண்டது. மாலைத்தீவுகளின் முக்கிய வாணிப நாடுகள் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா என்பனவாகும். மீன்பிடித்தல் மக்களின் முக்கிய தொழிலாக இருந்துவருகிறது. அரசு மீன்பிடிகைத்தொழிலின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவி செய்கிறது. நாட்டின் பொருளாதாரத்திற்காக ஜெபிப்போம்.
1974 ஆம் ஆண்டில் பாராம்பரிய “டோனி” என்ற தோணிகள் இயந்திர படகுகளுக்கு மாறியமை மீன்பிடி கைத்தொழிலினதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியினதும் முக்கிய மைல்கல்லாகும். 1977 இல் மீன்களைத் தகரப் பேணியில் அடைக்கும் தொழிற்சாலையொன்று யப்பானிய உதவியோடு பெளிவரு தீவில் நிறுவப்பட்டமை இன்னுமொரு முக்கிய நிகழ்வாகும். இன்று மீன்பிடிக் கைத்தொழில், மாலைத்தீவுகளின் மொத்த தேசிய உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் பங்களிப்புச் செய்கிறது. மேலும் நாட்டின் தொழிலாளர் படையில் 30% பேர் மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபடுகின்றனர். வெளிநாட்டு வருவாயில் சுற்றுலாத்துறைக்கு அடுத்தபடியாக அதிக வருவாயைக் கொடுக்கிறது. சுற்றுலா துறைக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.
சுற்றுலாத்துறையின் வளர்ச்சி நாட்டின் பாரம்பரிய குடிசைக் கைத்தொழில்களின் வளர்ச்சியை மறைமுகமாக அதிகரித்தது. பாய் இழைத்தல், நெசவு, சிற்பம், கயிறு திரித்தல் போன்ற கைத்தொழில்கள் முக்கிய வளர்ச்சியைக் கண்டன. மாலத்தீவில் கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக அவர்களின் கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.
மாலத்தீவுகளின் அரசியல் அதிபர் முறை குடியரசு என்ற சட்ட வரம்புக்குள் நடைபெறுகின்றது. அதிபர் அரசின் தலைவராகப் பணியாற்றும் அதேவேளை அமைச்சர் சபையையும் அவரே நியமிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. பாராளுமன்றத்தில் நடைபெறும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
மாலத்தீவுகளின் பாராளுமன்றம் (மசிலிசு) 50 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி முறைப் பாரளுமன்றமாகும். ஒரு பவழத்தீவுக்கு இரண்டு ஆண்கள் வீதம் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதோடு, மிகுதி 8 பேரை அதிபர் நேரடியாக நியமிப்பார். மாலத்தீவுகள் மக்கள் கட்சி இதுவரையும் பாராளுமன்றத்தை வைத்திருந்த போதிலும் 2005 க்குப் பிறகு பிற கட்சிகளும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மாலத்தீவுகளில் 26 பவழத்தீவுகளும் இருபது நிர்வாகப் பவழத்தீவுகளாகவும் ஒரு நகரமாகவும் பிரிக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகிறது. மாலைத்தீவுகளில் பெரியதும் உலகிலே மிகப்பெரியதுமான பவழத்தீவு, ஞாவியானி பவழத்தீவு என்பதாகும். ஒவ்வொரு பவழத்தீவுக்கும் ஒரு தலைவர் அதிபரால் நேரடியாக நியமிக்கப்படுவதோடு அவற்றில் காணப்படும் தீவுகளுக்கு ஒவ்வொரு தலைவர் வீதமும் அதிபரால் நியமிக்கப்படுவர்.
மாலத்தீவு மக்கள் பல கலாச்சாரங்களின் கலப்பினால் உருவானவர்காளாவர். முதலாவது குடியேற்றவாசிகள் தென் இந்தியாவிலிருந்து வந்தவர்களாவார். 4ஆம் 5ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையிலிருந்து வந்த இந்தோ-ஆரிய மக்கள் அடுத்ததாக இங்கு வந்தவர்களாவார். கிபி 12வது நூற்றாண்டில் மலாய தீவுகள், கிழக்காப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கு குடியேறினர். இன்றைய மாலைத்தீவினர் இம்மக்கள் அனைவரதும் கலப்பில் உருவான பல்கலாச்சாரக் கலப்பு மக்களாவர். மாலைத்தீவுகளில் இஸ்லாம் இந்திய வாணிப சமுதாயத்தைத் தவிர்த்த ஏனைய மாலைத்தீவினர் சுன்னி இஸ்லாம் மதப்பிரிவை சேர்ந்தவர்களாகும்.
மாலைத்தீவுகளின் ஆட்சி மொழி திவெயி மொழியாகும், இது ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழியாகும். இம்மொழி சிங்களத்துடன் நெருங்கிய தொடர்புடைய மொழியாகும். ஆங்கிலம் வாணிபத்துறையில் பரவலாகப் பாவனையில் உள்ளதுடன் இப்போது பாடசாலைகளிலும் போதனா மொழியாக வளர்ச்சி கண்டுவருகின்றது.
மாலத்தீவின் அரசியலமைப்பு 2008 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாநில மற்றும் அரசாங்கத்தின் தலைவர் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் உதவியுடன். திகுடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், அதிகபட்சமாக இரண்டு ஐந்தாண்டு காலத்திற்கு உலகளாவிய வாக்குரிமை மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அமைச்சரவை துணை ஜனாதிபதி, அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அட்டர்னி ஜெனரல் ஆகியோரைக் கொண்டுள்ளது . துணை ஜனாதிபதியைத் தவிர, அமைச்சரவை உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள்.
மிக உயர்ந்த சட்ட அதிகாரம் உச்ச நீதிமன்றம். அரசாங்கத்தின் பல்வேறு கிளைகள் மற்றும் பொது மக்களிடமிருந்து நியமிக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உறுப்பினர்களைக் கொண்ட நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து அதன் நீதிபதிகள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். நீதித்துறை கால வரம்புகள் இல்லை; கட்டாய ஓய்வு வயது 70. அனைத்து நீதிபதிகளும் சன்னி முஸ்லிம்களாக இருக்க வேண்டும். நீதித்துறைக்காக ஜெபிப்போம்.
மக்கள் வசிக்கும் ஒவ்வொரு தீவிலும் அடிப்படை சேவைகளை வழங்கும் ஒரு சுகாதார மையம் காணப்படுகிறது. மேலும் பவளப்பாறைகள் பொதுவாக அவற்றின் தலைநகர் தீவில் உயர் நிலை வசதி அல்லது மருத்துவமனையைக் கொண்டுள்ளன. இருப்பினும், மாலத்தீவுகள் மிகவும் தீவிரமான நோய்களுக்கான சிகிச்சைக்காக மாலே செல்ல வேண்டும். மாலத்தீவில் 1984 இல் மலேரியா ஒழிக்கப்பட்டது , மேலும் 2015 இல் உலக சுகாதார அமைப்பால் மலேரியா இல்லாத நாடு என சான்றளிக்கப்பட்ட பிராந்தியத்தில் முதல் நாடாக மாலத்தீவு ஆனது . இந்த நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்காக, பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்காக ஜெபிப்போம்,
மாலத்தீவில் மூன்று வகையான முறையான கல்விகள் உள்ளன, பாரம்பரிய பள்ளிகள் ( மக்தாப்கள் ) உட்பட குர்ஆன், திவேஹி மொழி பள்ளிகள் மற்றும் ஆங்கில மொழி ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளைப் படிக்கவும் ஓதவும் வடிவமைக்கப்பட்டுள்ளன . ஆங்கில மொழிப் பள்ளிகள் மட்டுமே தரமான பாடத்திட்டத்தை கற்பித்து இடைநிலைக் கல்வியை வழங்குகின்றன. 6 முதல் 15 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் முதன்மை அல்லது கீழ்நிலை நிலைகளில் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பட்டப்படிப்புகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் கிடைக்கப்பெற்றன. பெரும்பாலான வகையான பட்டங்களைத் தேடும் மாலத்தீவுகள் வெளிநாடு செல்ல வேண்டும். மாலத்தீவுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். படிக்கும் பிள்ளைகளுக்காகஇ ஆசிரியர்களுக்காக ஜெபிப்போம்.
மாலத்தீவின் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலி அவர்களுக்காகவும், துணைத் தலைவர் பைசல் நசீம் அவர்களுக்காகவும், மஜ்லிஸ் பேச்சாளர் முகமது நஷீத் அவர்களுக்காகவும், தலைமை நீதிபதி அகமது முத்தசிம் அட்னான் அவர்களுக்காகவும் ஜெபிப்போம். மாலத்தீவில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். நாட்டின் பொருளாதாரத்திற்காகவும், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படவும், தொழில் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.