No products in the cart.
தினம் ஓர் நாடு – பிஜி (Fiji) – 21/07/24
தினம் ஓர் நாடு – பிஜி (Fiji)
கண்டம் (Continent) – ஆஸ்திரேலியா
தலைநகரம் – சுவா (Suva)
ஆட்சி மொழிகள் – ஆங்கிலம், விசிய மொழி,
பிசி இந்தி, தெலுங்கு மொழி, செருமன் மொழி
மக்கள் – பிசியர்
மக்கள் தொகை – 936,375
அரசாங்கம் – இராணுவம் நியமித்த அரசு
நாடாளுமன்ற முறை
President – Wiliame Katonivere
Prime Minister – Sitiveni Rabuka
Chief Justice – Salesi Temo
Deputy Prime Ministers – Viliame Gavoka
Biman Prasad
Manoa Kamikamica
Parliament Speaker – Naiqama Lalabalavu
சுதந்திரம் – 10 அக்டோபர் 1970
குடியரசு – 6 அக்டோபர் 1987
மொத்த பகுதி – 18,274 km2 (7,056 sq mi)
தேசிய விலங்கு – Banded iguana
தேசிய பறவை – காலர் லாரி (Collared Lory)
தேசிய மலர் – டாகிமௌசியா (Tagimoucia)
தேசிய பழம் – Coconut
தேசிய விளையாட்டு – Rugby union
நாணயம் – Fijian dollar
ஜெபிப்போம்
பிஜி (Fiji) என்பது மெலனீசியாவில் பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருந்து வடகிழக்கே 1100 கடல்மைல்கள் தூரத்தில் உள்ளது. பிஜி ஆஸ்திரேலியா கண்டத்தில் உள்ளது. இது சில நேரங்களில் ஓசியானியா என்றும் அழைக்கப்படுகிறது. ஓசியானியா என்பது உலகின் பாரம்பரிய ஏழு கண்ட மாதிரியில் சேர்க்கப்படாத பசிபிக் முழுவதும் உள்ள தீவுகளைக் குறிக்கும் சொல். தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள பிஜி, நாடு மற்றும் தீவுக்கூட்டம். இது நியூசிலாந்தின் ஆக்லாந்திற்கு வடக்கே சுமார் 1,300 மைல் (2,100 கிமீ) தொலைவில் கோரோ கடலைச் சூழ்ந்துள்ளது.
இத்தீவின் அருகிலுள்ள அயல் நாடுகள்: மேற்கே வனுவாட்டு, தென்மேற்கே பிரான்சின் நியூ கலிடோனியா, தென்கிழக்கே நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள், கிழக்கே தொங்கா, வடகிழக்கே சமோவா, பிரான்சின் வலிசும் புட்டூனாவும், வடக்கே துவாலு ஆகியவை அமைந்துள்ளன. பெரும்பான்மையான பிஜித் தீவுகள் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட எரிமலைச் சீற்றங்களினால் உருவானவையாகும்.
பிஜி தீவுக்கூட்டத்தில் மொத்தம் 332 தீவுகளும், ஐநூறுக்கும் அதிகமான தீவுத்திடல்களும் உள்ளன. 332 தீவுகளில் 110 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். விட்டி லெவு, வனுவா லெவு ஆகியன இங்குள்ள இரண்டு முக்கிய தீவுகள் ஆகும். நாட்டின் மொத்த மக்கள்தொகையான 850,000 இல் 87 விழுக்காட்டினர் இவ்விரு தீவுகளிலும் வசிக்கின்றனர். பிஜியின் தலைநகரும், நாட்டின் மிகப் பெரிய நகருமான சுவா விட்டி லெவு தீவில் அமைந்துள்ளது. பிஜிய மக்களின் பெரும்பான்மையானோர் விட்டி லெவு தீவின் கரையோரப் பகுதிகளில் வசிக்கின்றனர்.
1970 வரை பிஜி சுமார் ஒரு நூற்றாண்டு காலம் வரை பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் பிரித்தானியரால் பல பிசிய நாட்டவர்கள் நியூசிலாந்து, மற்றும் ஆஸ்திரேலியப் படையினருடன் இணைந்து போரில் பங்கு பெற வைக்கப்பட்டனர். பிஜி படைத்துறை தரை, மற்றும் கடற்படைகளைக் கொண்டுள்ளது. பிஜி பெருமளவு காட்டுவளம், கனிமவளம், மற்றும் மீன் வளங்களைக் கொண்டிருப்பதால், இது பசிபிக் தீவுப் பகுதியில் பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது, சுற்றுலாத்துறை, சர்க்கரை ஏற்றுமதி ஆகியன இந்நாட்டிற்கு வெளிநாட்டு வருமானத்தைத் தரும் முக்கிய துறைகளாகும்.
1970 ஆம் ஆண்டில் பிரித்தானியாவிடம் இருந்து பிஜி விடுதலை பெற்றது. பிஜி அரசாங்கத்தில் பிஜி இந்தியர்கள் பெரும்பான்மையாக இருந்ததனால், மக்களாட்சி அமைப்பு 1987 ஆம் ஆண்டில் இரு தடவைகள் இராணுவப் புரட்சியால் தடைப்பட்டது. 1987 இல் இடம்பெற்ற இரண்டாவது இராணுவப் புரட்சியை அடுத்து பிஜிய அரசர், மற்றும் ஆளுனர் ஆகியோர் பதவிகளில் இருந்து அகற்றப்பட்டனர். பதிலாக நிறைவேற்றதிகாரமற்ற ஜனாதிபதி ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் பெயரும் டொமினியன் பிஜி இலிருந்து பிஜி குடியரசு (பின்னர் 1997 இல் பிஜித் தீவுகளின் குடியரசு) என மாற்றப்பட்டது.
பிஜியின் மக்கள் தொகை பெரும்பாலும் உள்ளூர் பிஜியர்கள் ஆவர். இவர்கள் மெலனீசியர்கள் ஆவர். இவர்கள் மொத்த மக்கள் தொகையின் 54.3% ஆகும். இவர்களில் சிலர் பொலினீசிய மரபுவழியினரும் அடங்குவர். 19ம் நூற்றாண்டில் பிரித்தானியரால் இங்கு தருவிக்கப்பட்ட இந்தியத் தொழிலாளர்களின் வம்சத்தைச் சேர்ந்த பிஜி இந்தியர்கள் 38.1% ஆவர். பிஜி இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த இரு தசாப்தங்களாகக் நாட்டில் குறைந்து வருகிறது. சிறிய அளவில் ஐரோப்பியர்கள், சீனர்கள் மற்றும் பசிபிக் தீவு மக்கள் போன்றவர்கள் இங்கு வசிக்கின்றனர்.
பிஜியின் பூர்வகுடிகளில் பெரும்பான்மையானோர் கிறித்தவர்கள். இங்கு இந்தியர்களில் பெரும்பாலானோர் இந்துக்களும், முஸ்லீம்களும் ஆவர். நாட்டில் மத வாரியாக கிறித்தவர்கள் 64.5% (மெதடித்தர்கள் 34.6%, உரோமன் கத்தோலிக்கர் 9.1%), இந்துக்கள் 27.9%, முசுலிம்கள் 6.3%, சீக்கியர் 0.3% உள்ளனர். இங்குள்ள இந்துக்களில் பெரும்பாலானோர் (74.3%) நான்கு குமாரர்கள் என்ற குழுவைப் பின்பற்றுபவர்கள். 3.7% இந்துக்கள் ஆரிய சமாசத்தைச் சேர்ந்தவர்கள். முசுலிம்களில் சுன்னி (59.7%), சியா (36.7%), அகம்மதிய சமூகத்தினர் (3.6%) ஆகியோர் உள்ளனர். பிஜி இந்தியர்களில் சீக்கிய மதத்தினர் 0.9% உள்ளனர்.
பிஜித் தீவில் ஆங்கிலமும், பிசித் தீவின் பூர்வ குடியினர் மொழிகளும், இந்தியக் குடியேறிகளின் மொழிகளும் பேசப்படுகின்றன. பிசித் தீவின் 1997 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பிசித் தீவுகள் மூன்று ஆட்சி மொழிகளைக் கொண்டுள்ளன. ஆங்கிலம், விசிய மொழி (பூர்வகுடியினர் மொழி), பிசி இந்துசுத்தானி (இந்தி-உருது) ஆகியனவே இவை. பிசிய மொழியை தீவின் மக்கள் எண்ணிக்கையில் பாதியளவிலுள்ள பூர்வகுடியினர் தாய்மொழியாகவும், பிறர் இரண்டாம் மொழியாகவும் பேசுகின்றனர். இந்தியக் குடியினர் 37 விழுக்காட்டினராவர். இவர்கள் வட இந்திய மொழிகளான இந்தி, குசராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளையும், தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளையும் பேசுகின்றனர்.
பிஜி முதன்மையாக சுற்றுலா மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சந்தைப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது, பிந்தையது உள்நாட்டு ஃபிஜியர்களால் ஆதிக்கம் செலுத்தும் கணிசமான வாழ்வாதாரத் துறை உட்பட. வாழ்வாதார விவசாயிகள் கொப்பரை, கொக்கோ, காவா, சாமை (உள்ளூரில் டாலோ என அழைக்கப்படுகிறது), அன்னாசி, மரவள்ளிக்கிழங்கு (மேனியாக்) அல்லது வாழைப்பழங்கள் அல்லது மீன்பிடித்தல் மூலம் கூடுதல் பண வருமானம் பெறுகின்றனர். வணிகத் துறையானது ஆடை உற்பத்தி மற்றும் கரும்புகளை அடிப்படையாகக் கொண்டது, இது பெரும்பாலும் சுதந்திர இந்திய விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது.
பிஜி நாட்டிற்காக ஜெபிப்போம். நாட்டின் President – Wiliame Katonivere அவர்களுக்காகவும், Prime Minister – Sitiveni Rabuka அவர்களுக்காகவும், Chief Justice -Salesi Temo அவர்களுக்காகவும், Deputy Prime Ministers – Viliame Gavoka, Biman Prasad, Manoa Kamikamica அவர்களுக்காகவும், Parliament Speaker – Naiqama Lalabalavu அவர்களுக்காகவும் ஜெபிப்போம். பிஜி நாட்டின் பொருளாதாரத்திற்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். பிஜி நாட்டின் இயற்கை வளங்களுக்காகவும், நாட்டினை சுற்றியுள்ள தீவுகளுக்காகவும் ஜெபிப்போம். நாட்டு மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.