No products in the cart.
தினம் ஓர் ஊர் – வெம்பக்கோட்டை (Vembakkottai) – 11/01/25
தினம் ஓர் ஊர் – வெம்பக்கோட்டை (Vembakkottai)
மாவட்டம் – விருதுநகர்
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 49,461
கல்வியறிவு – 80.10%
மாவட்ட ஆட்சியர் – Bro. V.P.Jeyaseelan (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. L. Pitchi (I.P.S)
District Revenue Officer – Bro. R Rajendran (Virudhunagar)
மக்களவைத் தொகுதி – விருதுநகர்
சட்டமன்றத் தொகுதி – சாத்தூர்
மக்களவை உறுப்பினர் – Bro. B.Manickam Tagore (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. A.R.R. Raghuraman (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. M.Sugandhi (Virudhunagar)
நகராட்சி தலைவர் – Bro. R.Madhavan (Virudhunagar)
நகராட்சி துணை தலைவர் – Sis. T.Dhanalakshmi
Principal District Judge – Bro. K.Jeyakumar
ஜெபிப்போம்
வெம்பக்கோட்டை (Vembakkottai) என்பது தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகாவாகும். இது விருதுநகருக்கு தென்மேற்கில் 47.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தாலுகா விருதுநகர் மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டம் 2016 இல் புதிதாக நிறுவப்பட்டது.
வெம்பக்கோட்டை வட்டம் ஆலங்குளம், ஏழாயிரம்பண்ணை, கீழராஜகுலராமன் மற்றும் வெம்பக்கோட்டை என நான்கு உள்வட்டங்களும், 37 வருவாய் கிராமங்களும் கொண்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளையும், 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வெம்பக்கோட்டை கிராமத்தின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சர்பஞ்சால் (கிராமத் தலைவர்) நிர்வகிக்கப்படுகிறது. இந்த நகரத்தின் வருவாய் கிராமங்களுக்காக, ஊராட்சி மன்றங்களுக்காக, ஊராட்சி மன்ற தலைவருக்காக, ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம்.
வெம்பக்கோட்டை தாலுகா சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. சாத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. A.R.R. Raghuraman அவர்களுக்காகவும், விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. B.Manickam Tagore அவர்களுக்காகவும், மாவட்ட ஆட்சியர் Bro. V.P.Jeyaseelan அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. A.Chandrasekaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம். பரிசுத்த ஆவியானவர் இவர்களை ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம்.
வெம்பக்கோட்டை தாலுகாவை சுற்றி விளாமரத்துப்பட்டி, எழுவன்பச்சேரி, இந்திரா நகர், காமராஜ் நகர், கோமாளிப்பட்டி, மீனாட்சிபுரம், அக்கரைப்பட்டி, நேருஜி நகர் ஆகிய சிற்றூர்கள் உள்ளன. இந்த சிற்றூர்களில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக ஜெபிப்போம். இந்த சிற்றூரிகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, போக்குவரத்து வசதி, மின்சாரம் ஆகியவை கிடைத்திட ஜெபிப்போம்.
இந்த நகரத்தில் மொத்தம் 49461 மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஆண்கள் 24552 பேரும், பெண்கள் 24909 பேரும் உள்ளனர். வெம்பக்கோட்டை தாலுகாவின் கல்வியறிவு விகிதம் 80.10% ஆக உள்ளது, இதில் ஆண்களின் கல்வியறிவு 88.35% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 71.96% ஆகவும் உள்ளது. வெம்பக்கோட்டையில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.
இந்த வட்டத்தில் 384 குடிநீர் இணைப்புகள், 5 சிறு மின்விசைக் குழாய்கள், 28 கைக்குழாய்கள், 9 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 7 உள்ளாட்சிக் கட்டடங்கள், 6 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள், 1 சந்தை, 22 ஊராட்சி ஒன்றியச் சாலைகள், 5 ஊராட்சிச் சாலைகள் போன்ற அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது. இதற்காக ஜெபிப்போம்.
வெம்பக்கோட்டை நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். கர்த்தருடைய ஆசீர்வாதமும், கிருபையும் இவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். அவர்களுடைய குடும்பங்களுக்காக அவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்.
வெம்பக்கோட்டை நகரத்திற்காக ஜெபிப்போம். வெம்பக்கோட்டை நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். வெம்பக்கோட்டை நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.