Daily Updates

தினம் ஓர் ஊர் – விளவங்கோடு (Vilavancode) – 17/08/23

தினம் ஓர் ஊர் – விளவங்கோடு (Vilavancode)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – கன்னியாகுமரி

மக்கள் தொகை – 587,924

கல்வியறிவு – 90.32%

மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி

சட்டமன்றத் தொகுதி – விளவங்கோடு

மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)

துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)

District Revenue Officer – Bro. J.Balasubramaniam

District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)

Joint Director / Project Director – Bro. P.Babu

மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Sis. S.Vijayadharani (MLA)

மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan

தாசில்தார்  (Vilavancode) – Bro. ஆபிரகாம் டென்னி

Principal District Court – Bro. S.Arulmurugan

ஜெபிப்போம்

விளவங்கோடு வட்டம் (Vilavancode Taluk) தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டம் விளவங்கோடு அல்லது விழவங்கோடு என்றும் உச்சரிக்கப்படுகிறது. இந்த வட்டத்தின் கீழ் 28 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டத்தில் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. விளவங்கோடு வட்டத்திற்காக ஜெபிப்போம்.

விளவங்கோடு திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் அது அப்போதைய திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1956 ஆம் ஆண்டின் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதி மொழியியல் இணைப்புகளில் மாநில எல்லைகளை சீரமைத்தது. தோவாளை, கல்குளம், விளவங்கோடு மற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுகாக்கள் திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் இருந்து சென்னை மாநிலம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டன.

இந்த நகரம் விளவன்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். விளவன்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Sis. S.Vijayadharani அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய ஆளுகையின் கரத்திற்குள்ளாக இவர்களை ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.

மாவட்ட ஆட்சியர் Bro. P.N.Sridhar அவர்களுக்காகவும், துணை மாவட்ட ஆட்சியர் Bro. H.R.Koushik அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. D.N.Hari Kiran Prased அவர்களுக்காகவும், District Revenue Officer Bro. J.Balasubramaniam அவர்களுக்காகவும், District Forest Officer Bro. M.Ilayaraja அவர்களுக்காகவும், Joint Director / Project Director Bro. P.Babu அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களோடுகூட கர்த்தருடைய பாதுகாப்பும் வழிநடத்தலும் இருக்க ஜெபிப்போம்.

விளவங்கோடு ஊராட்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். விளவங்கோடு ஊராட்சி மன்றங்களுக்காகவும், ஊராட்சி மன்ற தலைவருக்காகவும், மன்ற உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளுக்காக ஜெபிப்போம்.

விளவங்கோடு ஊராட்சியில் 713 குடிநீர் இணைப்புகள், 40 சிறு மின்விசைக் குழாய்கள், 10 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 10 உள்ளாட்சிக் கட்டடங்கள், 1 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள், 38 ஊராட்சி ஒன்றியச் சாலைகள், 23 ஊராட்சிச் சாலைகள் உள்ளன. விளவங்கோடு ஊராட்சியின் அருகில் பாலவிளை, பெரியவிளை, சந்தவிளை, கருந்தூர், காட்டுவிளை, மடிச்சல், மேலக்காட்டுவிளை, பழவார், ஈத்தவிளை ஆகிய சிற்றூர்கள் இருக்கின்றன. இந்த சிற்றூர்களில் உள்ள மக்களுக்காக அவர்களின் தேவைகளுக்காக ஜெபிப்போம்.

விளவங்கோடு தாலுக்காவில் மொத்தம் 587,924 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 290,860 ஆண்களும் 297,064 பெண்களும் உள்ளனர். 1000 ஆண்களுக்கு 1021 பெண்கள் இருக்கிறார்கள். இந்த தாலுகாவின் கல்வியறிவு 82.43 சதவீதத்தை கொண்டுள்ளது. இந்த தாலுகாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் 58.45% மக்கள் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுகின்றனர். 38.63% மக்கள்தொகையில் இந்து மதம் இரண்டாவது பெரிய மதமாக உள்ளது, இஸ்லாம் 2.48% ஜைனம், சீக்கியம் போன்ற பிற மதங்களை 0.44% பின்பற்றுகிறார்கள். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ரோமன் கத்தோலிக்கர்களாக உள்ளனர். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். குடும்பங்களில் காணப்படுகின்ற பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிபோம். குடும்பங்களில் இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.