No products in the cart.
தினம் ஓர் ஊர் – வில்லுக்குரி (Villukuri) – 26/09/23

தினம் ஓர் ஊர் – வில்லுக்குரி (Villukuri)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 15304
கல்வியறிவு – 90.52%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – குளச்சல்
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. J.G.Prince (MLA)
நகராட்சி ஆணையாளர் – Bro. S.Lenin
நகராட்சி தலைவர் – Bro. G.Arulshoban
நகராட்சி துணை தலைவர் – Bro. R.Unnikrishnan
ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் – Sis. அனுஷா தேவி
Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)
ஜெபிப்போம்
வில்லுக்குரி (Villukuri) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியப் பகுதியில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். வில்லுக்குரி பேரூராட்சிக்கு கிழக்கே நாகர்கோவில் 12 கிமீ; மேற்கே தக்கலை 6 கிமீ; தெற்கே திங்கள்நகர் 8 கிமீ தொலைவில் உள்ளது. வில்லுக்குறி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியை சுற்றியுள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.
வில்லுக்குரி ஒரு காலத்தில் திருவிதாங்கூர் இராச்சியத்தில் இராணுவப் பயிற்சி முகாமாகப் பயன்படுத்தப்பட்டது. “வில்லு” என்றால் “அம்பு”, “குரி” என்றால் “அதைக் குறிவைத்தல்” என்று பொருள். வில்லுக்குரி மார்த்தாண்டவர்மா கொளச்சல் போருக்காக ஆயுதங்களை சேமித்து வைத்த இடமாக இருந்தது. இப்பேருராட்சிக்குட்பட்ட 11-ம் வார்டு பகுதியில் திருவிடைக்கோடு ஆணைகிடங்கு செல்லும் சாலையில் சுற்றுலா தலமான மாம்பழத்துறையாறு அணை ஒன்று உள்ளது.
வில்லுக்குரி பேருராட்சியானது சுமார் 15304 மக்கள் தொகை கொண்ட முதல் நிலை பேருராட்சியாகும். இப்பேருராட்சியின் பரப்பளவு 9.92 சதுர கிலோ மீட்டர் ஆகும். வில்லுக்குரி பேருராட்சியில் 15 வார்டுகளும், 32 குக்கிராமங்களும் அமைந்துள்ளது. மொத்த மக்கள்தொகையில் ஆண்கள் 7,534 பேரும், பெண்கள் 7,770 பேரும் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 4037 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தருடைய பாதுகாப்பு கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகளுக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி குளச்சல் சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. குளச்சல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. J.G.Prince அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
வில்லுக்குரி பேரூராட்சியின் கல்வியறிவு விகிதம் 90.52% ஆக உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு 92.73% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 88.41% ஆகவும் இருந்தது. வில்லுக்குரி நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற வேலைகளையும், கையின் பிரயாசங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். தொழிலுக்குண்டான பொருளதார தேவைகள் சந்திக்கப்படவும், தொழில்களில் வளர்ச்சி உண்டாகவும் ஜெபிப்போம்.
வில்லுக்குரி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம். அநேக மக்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். இந்த பேரூராட்சியை சுற்றியுள்ள கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். புதிதாக சபைகள் கட்டப்படவும், தேவ ஊழியர்களை கர்த்தர் எழுப்பி தரவும் ஜெபிப்போம்.