No products in the cart.

தினம் ஓர் ஊர் – விராலிமலை (Viralimalai) – 02/05/25
தினம் ஓர் ஊர் – விராலிமலை (Viralimalai)
மாவட்டம் – புதுக்கோட்டை
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 10,883
கல்வியறிவு – 85.72 %
மக்களவைத் தொகுதி – கரூர்
சட்டமன்றத் தொகுதி – விராலிமலை
மாவட்ட ஆட்சியர் – Sis. M. Aruna, I.A.S..
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Thiru. Abishek Gupta
மாவட்ட வருவாய் அலுவலர் – Bro. SADHEESH R
Chief Judicial Magistrate – Bro. K.S.Paulpandian (Pudukkottai)
Principal Subordinate Judge – Bro. V. Venkatesaperumal (Pudukkottai)
District Munsif cum Judicial Magistrate – Bro. S.Anbuthasan (Viralimalai)
ஜெபிப்போம்
விராலிமலை (Viralimalai) தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இது திருச்சியிலிருந்து தெற்கே 30 கி.மீ தொலைவில் உள்ளது. விராலிமலை குன்றின் உச்சியில் விராலிமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோவில் பரத நாட்டியக் கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர்.
முற்காலச் சோழர்காலக் கோயில் இருந்ததால் கி.பி 9ஆம் நூற்றாண்டிலேயே விராலிமலை செழிப்பான கிராமமாக இருந்ததாகக் கூறுகிறது. இங்குள்ள குன்றுப்புறத்தில் முள்ளில்லாத மரங்கள், பெரும்பாலும் வெப்பாலை மரங்கள் காணப்படுகின்றன. விராலிமலை இரு நூற்றாண்டுகளுக்கும் பழமையான குறவஞ்சி நாட்டிய நாடக வடிவொன்றிற்குப் பெயர்பெற்றது. 1993ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி குன்றின் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் இரவு முழுவதும் குறவஞ்சி நாடகம் நடக்கும்.
இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் கூடுதலாகக் காணப்படும் ஓர் இடமாக விராலிமலை திகழ்கிறது. இம்மலைப்பகுதி மயில்களுக்கான உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நகரமும் கோவிலும் மயில்களின் உய்வகமும் பாரம்பரியமிக்க இடமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மயில்கள் ஏராளமாக உள்ளன மற்றும் பறவைகளின் சரணாலயமாக விராலிமலை உள்ளது.
விராலிமலை ஊராட்சி இலுப்பூர் கோட்டம், விராலிமலை வட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். விராலிமலை ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
விராலிமலையின் மொத்தம் மக்கள் தொகை 10,883 ஆகும். இதில் ஆண்கள் 5,483 மற்றும் 5,400 பெண்கள் ஆக உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.32% ஆகவுள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 2,759 குடும்பங்கள் வாழ்கிறார்கள். இந்த நகரத்தில் வாழும் குடும்பங்களுக்காகவும், குடும்பத்தின் தேவைகளுக்காகவும், ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகளின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.
விராலிமலை நகரத்தின் கல்வியறிவு விகிதம் 85.72 % அதிகமாக உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு 91.54% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 79.85% ஆகவும் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம். விராலிமலை மொத்த மக்கள்தொகையில் 4,140 பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்களில் 3,103 ஆண்கள் மற்றும் 1,037 பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும் அவர்கள் செய்கின்ற தொழில்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.
விராலிமலை நகரத்திற்காக ஜெபிப்போம். விராலிமலை நகரத்தில் உள்ள மக்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். விராலிமலை பகுதியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்காகவும், கரூர் மக்களவை உறுப்பினர் அவர்களுக்காகவும் ஜெபிப்போம். விராலிமலை நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.