Daily Updates

தினம் ஓர் ஊர் – வாசுதேவநல்லூர்(Vasudevanallur) – 31/07/23

தினம் ஓர் ஊர் – வாசுதேவநல்லூர்

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தென்காசி

மக்கள் தொகை – 21361

கல்வியறிவு – 68.50%

மக்களவைத் தொகுதி – தென்காசி

சட்டமன்றத் தொகுதி – வாசுதேவநல்லூர்

மாவட்ட ஆட்சியர் – Bro. Durai Ravichandran (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. E.T.Samson (I.P.S)

District Revenue Inspector – Bro. M.Nagaranjan

Special Revenue Inspector – Bro. A.Abdul Kadar @ Abu

மக்களவை உறுப்பினர் – Bro. Dhanush M.Kumar (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. T.Sadhan Tirumalaikumar (MLA)

நகராட்சி ஆணையர் – Sis. S.M.Farijan (Tenkasi)

நகராட்சி தலைவர் –  Bro. R.Sadhir

நகராட்சி துணை தலைவர் – Bro. K.N.L.Subbaiah

Municipal Engineer – Bro. R.Jayaseelan

Principal District Munsif – Bro. K. Baskar

Additional District Judge – Sis. G.Anuradha

ஜெபிப்போம்

வாசுதேவநல்லூர் (Vasudevanallur), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்திலுள்ள, சிவகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இது மதுரையிலிருந்து சுமார் 115 கி.மீ. தொலைவிலும், தென்காசியிருந்து 37 கி.மீ தொலைவிலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. வாசுதேவநல்லூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

இந்த நகரம் 10.40 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 93 தெருக்களும் 5833 வீடுகளை கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு கவுன்சிலர்களுக்காக ஜெபிப்போம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பினை உண்மையாக செய்ய கர்த்தர் கிருபை கொடுக்கும்படி ஜெபிப்போம்.

வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. T.Sadhan Tirumalaikumar அவர்களுக்காகவும், மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Dhanush M.Kumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய ஆளுகை இவர்களை வழிநடத்திட ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியில் மொத்தம் 21361 மக்கள் வாழ்கிறார்கள். வாசுதேவநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கரும்பு நன்கு விளைவதால், வாசுதேவநல்லூரில் தனியார்துறையில் தரணி சர்க்கரை ஆலை இயங்குகிறது. விவசாயம் செழிப்பான பகுதி மற்றும் அதிகபட்ச பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்கள். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற தொழிலை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம். பீடி தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்காக ஜெபிப்போம்.

இந்தியாவிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து முதன் முதலாக பூலித்தேவன் போரிட்ட இடம் இதுவே. ஆங்கிலேயரால் அனுப்பப்பட்ட மருதநாயகம் என்பவருக்கும் பூலித்தேவனுக்கும் முதன்முதலாக இங்கு போர் நடந்தது. அதில் பூலித்தேவன் வெற்றிபெற்றார். இதை பறைசாற்றும் விதமாக இங்கு ஒரு நடுகல்லும் உள்ளது. அதில் புலித்தேவனின் பெயரும் அவர் தளபதி வெண்ணிக் காலாடி மற்றும் போர் வீரர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அருகில்தான் சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட “பூலித்தேவன்” ஆண்ட நெல்கட்டும் செவல் உள்ளது. 1998-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசால் பூலித்தேவன் அரண்மனை பழமைமாறாமல் புதுப்பிக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக ஜெபிப்போம்.

இந்நகரின் அருகில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள “தலையணை” எனப்படும் பகுதி ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். வனமும் அருவியும் ஆறும் தலையணையை சிறப்பூட்டுகின்றன. வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீரோட்டம் உள்ள தலையணைக்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து சுற்றுலாவாக மக்கள் வருகின்றனர். இப்பகுதியில் “மலைவாழ் மக்கள் குடியிருப்பு’ உள்ளது. வாசுதேவநல்லூர் பேரூராட்சி மூலமாக மலை வாழ் மக்களுக்காக 19 குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் உள்ள சுற்றுலா பகுதிக்காகவும், சுற்றுலாவுக்கு வரும் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், இந்த பேரூராட்சியில் உள்ள மலை வாழ் மக்களுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.