No products in the cart.
தினம் ஓர் ஊர் – மொடக்குறிச்சி (Modakurichi) – 02/08/24
தினம் ஓர் ஊர் – மொடக்குறிச்சி (Modakurichi)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – ஈரோடு
பரப்பளவு – 11.78 சதுர கிலோமீட்டர்கள் (4.55 sq mi)
மக்கள் தொகை – 9,907
கல்வியறிவு – 72.36%
District Collector – Bro. Raja Gopal Sunkara I.A.S.
Superintendent of Police – Bro. G. Jawahar, I.P.S.
District Revenue Officer – Bro. S. Santhakumar
Municipality Commissioner – Bro. Dr.Manish.N. I.A.S.
Revenue Divisional Officer – Bro. M. Sathish Kumar (Erode)
District Forest Officer – Bro. Kumili Venkata Appala Naidu, I.F.S.
மக்களவைத் தொகுதி – ஈரோடு
சட்டமன்றத் தொகுதி – மொடக்குறிச்சி
மக்களவை உறுப்பினர் – Bro. Prakash (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Sis. C. Saraswathi (MLA)
Principal District and
Sessions Judge – Bro. B.Murugesan (Erode)
ஜெபிப்போம்
மொடக்குறிச்சி (Modakurichi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மொடக்குறிச்சி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
மொடக்குறிச்சி வட்டம், ஈரோடு மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். ஈரோடு வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு 8 மார்ச் 2016 அன்று புதிதாக இவ்வட்டம் நிறுவப்பட்டது. மொடக்குறிச்சி வட்டம் மொடக்குறிச்சி, அரச்சலூர் மற்றும் அவல்பூந்துறை என மூன்று குறுவட்டங்களும், 50 வருவாய் கிராமங்களும் கொண்டது.
இந்த நகரமானது 11.78 ச.கி.மீ. பரப்பும், இப்பேரூராட்சிக்கு வடக்கில் 17 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கொடுமுடி 28 கி.மீ.; மேற்கில் பெருந்துறை 26 கி.மீ. தொலைவில் உள்ளன.
இப்பேரூராட்சி மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Sis. C. Saraswathi அவர்களுக்காகவும், ஈரோடு மக்களவை உறுப்பினர் Bro. Prakash அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
மொடக்குறிச்சி நகர் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. மன்ற உறுப்பினர்களுக்காகவும், பேரூராட்சியின் தலைவருக்காகவும், துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டுகளில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள் உள்ளிட்ட தேவைகள் கிடைத்திட ஜெபிப்போம்.
மொடக்குறிச்சி டவுன் பஞ்சாயத்தில் 9,907 மக்கள்தொகை உள்ளது, இதில் 4,931 ஆண்கள் மற்றும் 4,976 பெண்கள். இதில் 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 816 ஆகும். இப்பேரூராட்சியில் 3,076 குடும்பங்கள் வாழ்கின்றனர். மொடக்குறிச்சியில் ஆண்களின் கல்வியறிவு 81.25% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 63.66% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 99.32%, முஸ்லீம்கள் 0.14% மற்றும் கிறிஸ்தவர்கள் 0.49% உள்ளனர்.
இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையில், 5,456 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,216 ஆண்கள் மற்றும் 2,240 பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழில்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.
மொடக்குறிச்சி வட்டத்திற்காக ஜெபிப்போம். இந்த வட்டத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். தொழில் வளர்ச்சிக்காகவும், குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இயேசுவை அறியாத மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவும் ஜெபிப்போம்.