No products in the cart.
தினம் ஓர் ஊர் – மைலாடி (Mylaudy) – 14/09/23

தினம் ஓர் ஊர் – மைலாடி (Mylaudy)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 10,070
கல்வியறிவு – 72%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – கன்னியாகுமரி
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Thalavai Sundaram (MLA)
மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan
Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)
ஜெபிப்போம்
மைலாடி ((Mylaudy) தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இந்த பேரூராட்சி நாகர்கோவிலிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மைலாடியில் கல் சிற்பம் செய்வது புகழ்பெற்றது. மைலாடி கல் சிற்பம் மார்ச் 31, 2023 அன்று தமிழ்நாட்டில் புவியியல் குறிப்புகளைப் பெற்றது. மைலாடி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
மைலாடி சிற்ப கலைகளுக்கு பெயர் போன இடமாக விளங்குகிறது. இங்கு இயற்கை வளங்கள் அதிகமாகவும், மிக செழிப்பாகவும் வளரும் இடமாகும். இங்கு சித்த மருத்துவத்தின் முலிகைகள் கிடைக்கும். கன்னியாக்குமரி திருவள்ளுவர் சிலை வடிவமைப்பில் மைலாடியின் பெரும் பங்கு உள்ளது.
இவ்வூரில் முப்பதுக்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்களில், சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிற்பத் தொழிலைச் சார்ந்து இருக்கின்றனர். கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை, சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் போன்றவை மைலாடி சிற்பிகளால் செய்யப்பட்டவை. இந்த தொழிலுக்காக ஜெபிப்போம். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
மைலாடி பேரூராட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Thalavai Sundaram அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி 15 வார்டுகளையும், 36 தெருக்களையும், 2,661 வீடுகளையும் கொண்டுள்ளது. இந்த தொகுதியில் உள்ள வார்டு உறுப்பினர்களுக்காகவும், அவர்களுடைய பொறுப்புகளுக்காகவும் ஜெபிப்போம். அவர்களுடைய குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.
மைலாடி பேரூராட்சி 10,070 மக்கள்தொகையும் கொண்டது. இவர்களில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50% உள்ளனர். மைலாடியின் சராசரி கல்வியறிவு விகிதம் 72% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். குடும்பங்களை பரிசுத்த ஆவியானவரின் ஆளுகை இருக்க ஜெபிப்போம்.
இந்த நகரத்தில் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்கள் பின்பற்றப்படுகின்றன. இங்குள்ள Ringeltaube Vethamonikam Memorial Church, கிரிஸ்துவர் மிஷனரி வில்லியம் டோபியாஸ் Ringeltaube அவர்களால் நிறுவப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். தென்னை, நெல் ஒரு முக்கிய தோட்டமாகும். மைலாடி இரண்டு மலைகளால் சூழப்பட்டுள்ளது. இதற்காக ஜெபிப்போம்.