Daily Updates

தினம் ஓர் ஊர் – மேலூர் (Melur) – 22/02/24

தினம் ஓர் ஊர் – மேலூர் (Melur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – மதுரை

மக்கள் தொகை – 291,398

கல்வியறிவு – 86.5%

மக்களவைத் தொகுதி – மதுரை

சட்டமன்றத் தொகுதி – மேலூர்

District Collector – Sis. M. S. Sangeetha (IAS)

Additional Collector (D) / Project Director – Bro. S. Saravanan (IAS)

Superintendent of Police – Bro. Dongare Pravin Umesh (IPS)

District Revenue Officer – Bro. R. Sakthivel

மக்களவை உறுப்பினர் – Bro. S. Venkatesan (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Periyapulian @ P. Selvam (MLA)

நகராட்சி ஆணையர் – Bro. C.Arumugam

நகராட்சி தலைவர் – Bro. U.Mohammed Yasin

நகராட்சி துணை தலைவர் – Bro. S. Elanchelian

Principal District and Sessions Judge – Bro. S. Sivakadatcham (Madurai)

Sub Judge – Bro. S. Ganesan (Melur Taluk)

ஜெபிப்போம்

மேலூர் (Melur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்கு பிரதான தொழிலாக கலப்பை தொழிற்சாலை முக்கியப் பங்கு வகிக்கின்றது. மேலூர் மதுரை மாவட்டத்தின் வடக்கு நுழைவாயிலாகும். மேலூர் பழைய பெயர் நடுவி நாடு என்று அழைக்கப்படுகிறது. மேலூர் என்ற பெயர் “மேலநாடு” என்பதிலிருந்து வந்தது. மேலூர் தாய்கிராமம் (‘கிராமங்களின் தாய்’) என்று அழைக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெரிய தாலுக்காவாகும். மேலூர் நகராட்சிக்காக ஜெபிப்போம்.

மதுரை District Collector Sis. M. S. Sangeetha அவர்களுக்காகவும், Additional Collector (D) / Project Director Bro. S. Saravanan அவர்களுக்காகவும், Superintendent of Police Bro. Dongare Pravin Umesh அவர்களுக்காகவும், District Revenue Officer Bro. R. Sakthivel அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

மேலூர் நகரம் மதுரை மக்களவைத் தொகுதிக்கும், மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. மதுரை மக்களவை உறுப்பினர் Bro. S. Venkatesan அவர்களுக்காகவும், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. Periyapulian @ P. Selvam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பணியினை உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.

மேலூர் தாலுகா 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த வட்டத்தின் நகராட்சி ஆணையர் Bro. C.Arumugam அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. U.Mohammed Yasin அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. S. Elanchelian அவர்களுக்காகவும், ஜெபிப்போம். நகராட்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.

மேலூர் வட்டம், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தில் அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலியல் பாரம்பரியத் தளம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 8 உள்வட்டங்களும், 84 வருவாய் கிராமங்களும் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம்.

இவ்வட்டம் 74,851 வீடுகளும், 2,91,398 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் ஆண்கள் 1,46,711 ஆகவும், பெண்கள் 1,44,687 ஆகவும் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 16.6% மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர், 83.4% பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 78.00% பேரும், முஸ்லீம்கள் 17.00% பேரும், கிறிஸ்துவர்கள் 5.00% பேரும் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.

மேலூர் தாலுகாவின் மொத்த கல்வியறிவு விகிதம் 76.57% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 75.69% மற்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 59.87% ஆகும். நகர்ப்புறங்களில் சராசரி கல்வியறிவு விகிதம் 86.5% ஆகவும், கிராமப்புறங்களில் 74.6% ஆகவும் உள்ளது. இந்த வட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம்.

மேலூர் தாலுகாவில் மொத்த மக்கள் தொகையில் 141,086 பேர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 22,751 பேர் விவசாயிகள் மற்றும் 56,192 பேர் விவசாயத் தொழிலாளர்கள், வீட்டுத் தொழில்கள் 2,600 பேர் மற்ற தொழிலாளர்கள் 34,833 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்காக ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற வேலைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

மேலூர் ஒரு கலப்பை உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர். இது பல வார்ப்பிரும்பு தொழில்துறைகளைக் கொண்டுள்ளது. கிரானைட் உற்பத்தி ஒரு முக்கியமான தொழில். மேலூரில் இருந்து கிரானைட் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையின் பிரயாசத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

பெரும்பாலும் விவசாயப் பகுதிக்குள் அமைந்துள்ள மேலூரைச் சுற்றியுள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தில், முக்கியமாக நெல் சாகுபடியில் வேலை செய்கிறார்கள். வீடு கட்டும் பணியில் ஒரு சிலர் கொத்தனார் மற்றும் உதவியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த வட்டத்தில் உள்ள விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

மேலூர் தாலுகாவிற்காக ஜெபிப்போம். இந்த வட்டத்தில் உள்ள குடும்பங்களுக்காகவும், இரட்சிக்கப்படாத பிள்ளைகளின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இந்த பகுதியில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் தேவனை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். மேலூர் தாலுகாவில் உள்ள மக்கள் மத்தியில் கர்த்தர் எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.