No products in the cart.

தினம் ஓர் ஊர் – முதுகுளத்தூர் (Mudukulathur) – 20/03/25
தினம் ஓர் ஊர் – முதுகுளத்தூர் (Mudukulathur)
மாவட்டம் – இராமநாதபுரம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – இராமநாதபுரம்
மக்கள் தொகை – 1,13,432
கல்வியறிவு – 74.08%
மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்
சட்டமன்றத் தொகுதி – முதுகுளத்தூர்
Superintendent of Police – Bro. G.Chandeesh I.P.S.
Additional Collector DRDA – Bro. Veer Pratap Singh IAS.,
Wildlife Warden – Dr. R.Murugan I.F.S.,
District Revenue Officer – Bro. R. Govindarajalu
Principal District Judge – Bro. A.K.Mehbub Alikhan (Ramanathapuram)
District Munsif – Bro. S.Arun Sankar (Mudukulathur)
Sub Judge – Bro. T.Raja Kumar (Mudhukulathur)
ஜெபிப்போம்
முதுகுளத்தூர் (Mudukulathur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். முற்காலத்தில், இந்த நகரம் முத்துக்குளத்தூர் என்று அழைக்கப்பட்டது. இதன் பொருள் தமிழில் “ஊரணி” என்ற மூன்று குளங்களின் வெளிப்படையான குறிப்புடன் “அதன் ஏரிகளில் முத்துக்கள் கொண்ட நகரம்” என்று பொருள். இருப்பினும், இந்த நகரத்தின் பெயர் பல ஆண்டுகளாக முதுகுளத்தூர் என்று மாறியது, இதன் பொருள் “பழமையான குளங்களின் நகரம்” என்று பொருள்படும்.
முதுகுளத்தூர் வட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் முதுகுளத்தூர் வடக்கு, முதுகுளத்தூர் தெற்கு, கீழத்தூவல், மேலக்கொடுமளூர், காக்கூர் மற்றும் தேருருவேலி என 6 உள்வட்டங்களும், 46 வருவாய் கிராமங்களும் கொண்டது. இது 23.10 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 87 தெருக்களும் கொண்ட இந்த பேரூராட்சி முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம்இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. முதுகுளத்தூர் ஊராட்சி மன்றங்களுக்காக, ஊராட்சி மன்ற தலைவருக்காக, ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம். அவர்களுடைய பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 1,13,432 ஆகும். இதில் 56,531 ஆண்களும், 56,901 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 72.3%. மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த பேரூராட்சியில் மொத்தம் 28,974 குடும்பங்கள் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.19%, இசுலாமியர்கள் 5.4%, கிறித்தவர்கள் 6.27% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர். இத்தொகுதியில் முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், யாதவர், முஸ்லிம்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் குறிப்பிடும்படியாக வாழ்கின்றனர்.
இந்த நகரத்தில் நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), பருத்தி, மிளகாய் அதிகமாக விளைகின்றன. இது வறட்சி மாவட்டம் என்பதால் இங்கு சீமைக் கருவேல மரம் (விறகுகளால் தயாரிக்கப்படும் அடுப்புக்கரி தயாரிக்கும் பொருட்டு) முகனையாக வளர்க்கப்படுகிறது. முக்கிய உள்ளூர் பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. விவசாயிகளுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். கையிட்டு செய்கின்ற தொழிலை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.
முதுகுளத்தூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இங்குள்ள மக்களுக்காக அவர்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். குடும்பங்களில் கர்த்தர் சமாதானத்தை கட்டளையிடும்படி ஜெபிப்போம். குடும்பங்களில் இரட்சிக்கப்படாத பிள்ளைகள் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளும்படி ஜெபிப்போம். இப்பேரூராட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும், பேரூராட்சி தலைவருக்காகவும், துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். முதுகுளத்தூர் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.