No products in the cart.

தினம் ஓர் ஊர் – முசிறி (Musiri) – 14/05/2024
தினம் ஓர் ஊர் – முசிறி (Musiri)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருச்சிராப்பள்ளி
மக்கள் தொகை – 231,655
கல்வியறிவு – 76.57%
மக்களவைத் தொகுதி – பெரம்பலூர்
சட்டமன்றத் தொகுதி – முசிறி
மாவட்ட ஆட்சியர் – Bro. Pradeep Kumar (I.A.S)
Commissioner of Police – Sis. N. Kamini (IPS)
Superintendent of Police – Bro. V. Varunkumar (IPS)
District Revenue Officer – Sis. R. Rajalakshmi
Project Director – Bro. S. Devanathan
மக்களவை உறுப்பினர் – Bro. T. R. Paarivendhar (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. N. Thiyagarajan (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. P.Krishnaveni
நகராட்சி தலைவர் – Bro. R.Elangovan
நகராட்சி துணை தலைவர் – Bro. S.Suresh
Town Planning Inspector – Bro. T. Nethaji Mohan
Principal District Judge – Bro. K.Babu
Principl District Munsif – Bro. K.Bakkiaraj (Musiri)
Additional District Munsif – Sis. P.S.A.Nishanthini (Musiri)
Judicial Magistrate – Bro. C.Jayachandran (Musiri)
ஜெபிப்போம்
முசிறி (Musiri) தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இந்த ஊரின் அசல் பெயர் “முசுகுந்தபுரி”, இது ஒரு சோழ மன்னன் முசுகுந்தன் பெயரிடப்பட்டது. முசிறி நகராட்சிக்காக ஜெபிப்போம்.
முசிறி பேரூராட்சியை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நகரமானது 18.80 சகிமீ பரப்பும், 24 வார்டுகளும், 105 தெருக்களும் கொண்டுள்ளது. முசிறியின் நகராட்சி ஆணையர் Sis. P.Krishnaveni அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. R.Elangovan அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. S.Suresh அவர்களுக்காகவும், Town Planning Inspector Bro. T. Nethaji Mohan அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த நகரம் முசிறி சட்டமன்றத் தொகுதிக்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. முசிறி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. N. Thiyagarajan அவர்களுக்காகவும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. T. R. Paarivendhar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களை தேவ கரம் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
முசிறி வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 64 வருவாய் கிராமங்கள் உள்ளன. முசிறி ஊராட்சி ஒன்றியம் மற்றும் தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது. இந்த வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், ஊராட்சி ஒன்றியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
இவ்வட்டத்தின் மக்கள்தொகை 231,655 ஆகும். இதில் 115,774 ஆண்களும், 115,881 பெண்களும் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 63,161 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். கிராமப்புற மக்கள்தொகை 78.7% பேர் வாழ்கிறார்கள். மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 97.97%, இசுலாமியர்கள் 1.36%, கிறித்தவர்கள் 0.55% மற்றும் பிறர் 0.11% பேரும் உள்ளார்கள். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.
முசிறி வளர்ச்சி பெற்று வரும் நகராட்சியாகும். இங்கே பல வளர்ந்து வரும் தொழில் துறை நிறுவனங்கள் உள்ளன. முசிறியின் முக்கிய பகுதியாகக் கருதப்படும் கைகாட்டி பகுதியில் பல ஜவுளி கடைகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பங்கு வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன. முசிறியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்காக ஜெபிப்போம்.
காவேரி ஆற்றின் வடகரையில் 1 கிமீ அகலம் கொண்ட இந்த ஊரில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பயிர்களில் நெல், கரும்பு, வாழை மற்றும் காய்கறிகள் அடங்கும். கோரை புல் (நாணல்) பாய்/சட்டை பாய் நெசவு இங்கு செய்யப்படுகிறது. விவசாயிகளுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். பாய் நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
முசிறியில் மொத்தம் 4 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த நகரத்திற்கு அருகே 4 கி.மீ தொலைவில் வடுகபட்டி என்னும் பகுதியில் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது. இது 1968 முதல் செயல்பட்டு வருகின்றது. மேலும் முசிறி – துறையூர் நெடுஞ்சாலையில் முசிறியிலிருந்து சரியாக 5 கி.மீ தொலைவில் சிவிலிப்பட்டி என்னும் சிற்றூரில் MIT என்னும் தனியார் பல்-தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது. முசிறியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்காக ஜெபிப்போம். மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.