No products in the cart.
தினம் ஓர் ஊர் – மல்லசமுத்திரம் (Mallasamudram) – 20/07/24
தினம் ஓர் ஊர் – மல்லசமுத்திரம் (Mallasamudram)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – நாமக்கல்
பரப்பளவு – 5.63 சதுர கிலோமீட்டர்கள் (2.17 sq mi)
மக்கள் தொகை – 18,007
கல்வியறிவு – 62%
District Collector – Sis. S. Uma, IAS
Superintendent of Police – Bro. S.Rajesh Kannan, I.P.S
District Revenue Officer – Bro. R.Suman
Project Director – Bro. S.Vadivel
District Forest Officer – Bro. S.Kalanithi, I.F.S.,
Municipality Commissioner – Bro. R. Sekar (Tiruchengode)
Chairman – Sis. S.Nalini (Tiruchengode)
Vice-Chairman – Bro. T.Karthikeyan (Tiruchengode)
மக்களவைத் தொகுதி – நாமக்கல்
சட்டமன்றத் தொகுதி – திருச்செங்கோடு
மக்களவை உறுப்பினர் – Bro. Madheshwaran (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. E. R. Eswaran (MLA)
Principal District Judge – Bro. R.Gurumurthy (Namakkal)
Principal District Munsif – Sis. A. Saranya (Tiruchengode)
ஜெபிப்போம்
மல்லசமுத்திரம் (Mallasamudram) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு கிழக்கில் நாமக்கல் 40 கிமீ; மேற்கில் ஈரோடு 36 கிமீ; வடக்கில் சேலம் 26 கிமீ தொலைவில் உள்ளது. மல்லசமுத்திரம் “மல்லை மாநகரம்”, “மல்லை” என்றும் அழைக்கப்படுகிறது.
மல்லர்கள் (பல்லவர்கள்) 2 ஆம் புலிகேசி மீது படையெடுத்து செல்லும்போது அந்த சின்ன ஊரை கடக்க நேரிட்டது, இருபுறமும் கடல் போல் தோற்றமளித்த ஏரியையும் மறுபுறம் ஓடிய பொன்னி நதியையும் பார்த்து அழகான ஊருக்கு “மல்லர்களின் சமுத்திரம்” என்று பெயரிட்டனர். நாளடைவில் மல்லசமுத்திரம் என்று அழைக்கப்படலாயிற்று.
இந்த பேரூராட்சி திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் Bro. E. R. Eswaran அவர்களுக்காகவும், நாமக்கல் மக்களவை உறுப்பினர் Bro. Madheshwaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
மல்லசமுத்திரம் நகர் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் 18,007 மக்கள்தொகை உள்ளது, இதில் 9,104 ஆண்கள் மற்றும் 8,903 பெண்கள் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 4,895 குடும்பங்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இந்து 97.59%, முஸ்லிம் 1.60%, கிறிஸ்தவர் 0.69%, சீக்கியர் 0.03%, மற்றும் பௌத்த 0.01% உள்ளனர்.
மல்லசமுத்திரத்தின் சராசரி கல்வியறிவு 62% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 53%. இப்பேரூராட்சியில் தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மல்லசமுத்திரத்தில் மூன்று தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது.
இப்பேரூராட்சியில் உள்ள மக்களின் முக்கிய தொழில் ஜவுளி கைத்தறி நெசவு, விவசாயம் மற்றும் ஓட்டல் ஆகும். துண்டு, கைலிகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மொத்த மக்கள்தொகையில், 8,974 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5,632 ஆண்கள் மற்றும் 3,342 பெண்கள்.
மல்லசமுத்திரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். முக்கிய தொழிலான கைத்தறி நெசவு மற்றும் விவசாய தொழிலுக்காக ஜெபிப்போம். இந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிபோம். அவர்களின் கையின் பிரயாசத்தின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். தொழில்களில் வளர்ச்சி உண்டாக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத மக்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.