No products in the cart.

தினம் ஓர் ஊர் – மணமேல்குடி (Manamelkudi) – 19/11/23
தினம் ஓர் ஊர் – மணமேல்குடி (Manamelkudi)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – புதுக்கோட்டை
மக்கள் தொகை – 86,672
கல்வியறிவு – 82.51%
மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்
சட்டமன்றத் தொகுதி – அறந்தாங்கி
மாவட்ட ஆட்சியர் – Sis. I.S.Mercy Ramya (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Vandita Pandey (I.P.S)
மக்களவை உறுப்பினர் – Bro. K.Navaskani (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. T.Ramachandran (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. P.R. Balasubramaniam
நகராட்சி தலைவர் – Bro. R.Anandh
நகராட்சி துணை தலைவர் – Bro. T.Subramanian
Revenue Divisional Officer – Sis. Vijayaa Shree (Pudukkottai)
Revenue Inspector – Bro. R. Jothipandian
Town Planning Officer – Bro. T.Pargunan
Town Planning Inspector – Bro. R. Anbazhagan
Principal District Judge – Bro. K.Poorana Jeya Anand
District Munsif – Sis. V.Sivagamasundary (Aranthangi)
Judicial Magistrate – Sis. P.Deepa (Aranthangi)
ஜெபிப்போம்
மணமேல்குடி (Manamelkudi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சியாகும். இங்கு மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட ஜெகதீஸ்வரர் கோயில் மற்றும் பட்டாபிராமசாமி கோயில் உள்ளது. மணமேல்குடி குலச்சிறை நாயனார் பிறந்த இடம் ஆகும். அறந்தாங்கியிலிருந்து 35-கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மணமேல்குடி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
மணமேல்குடி பேரூராட்சியானது அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டதாகும். அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் Bro. T.Ramachandran அவர்களுக்காகவும், இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் Bro. K.Navaskani அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரத்தில் இவர்களை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
மணமேல்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக மணமேல்குடி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் பெருமருதூர், கோட்டைப்பட்டினம், சிகவனம், மணமேல்குடி என 4 உள்வட்டங்களும் 72 வருவாய் கிராமங்களும் உள்ளன. இந்த வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம்.
மணமேல்குடி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை நகரமாகும். இது மாவட்டத்தின் தென்கிழக்கில், பால்க் ஜலசந்தி கடற்கரையில் அமைந்துள்ளது. மணமேல்குடியிலிருந்து 3 கிமீ தொலைவில் கோடியக்கரை சுற்றுலாத்தளம் அமைந்துள்ளது. இதன் தெற்கே அம்மாப்பட்டினம் துறைமுகம் அமைந்துள்ளது. முந்திரிக்காடு, சவுக்கை மரங்கள், ஆர் எஸ் பதி மரங்கள் போன்றவை இயற்கை எழில் சூழும் வகையில் உள்ளன. இந்த பேரூராட்சியில் உள்ள இயற்கை வளங்களுக்காக ஜெபிப்போம்.
மணமேல்குடி ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள மன்றத் தொகுதிகளுக்காகவும், மன்ற உறுப்பினர்களுக்காகவும், அவர்களுடைய பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த ஊராட்சியில் 383 குடிநீர் இணைப்புகள், 7 சிறு மின்விசைக் குழாய்கள், 7 கைக்குழாய்கள், 9 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 12 தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள், 27 உள்ளாட்சிக் கட்டடங்கள், 24 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள், 47 ஊரணிகள் அல்லது குளங்கள், 1 சந்தை, 50 ஊராட்சி ஒன்றியச் சாலைகள், 10 ஊராட்சிச் சாலைகள், 1 பேருந்து நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது. இதற்காக ஜெபிப்போம்.
இவ்வட்டம் மொத்தம் 86,672 மக்கள்தொகை கொண்டது. இதில் 42,953 ஆண்களும், 43,719 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 85.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் மொத்தம் 20,228 குடும்பங்கள் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 65.21%, இசுலாமியர்கள் 26.43%, கிறித்தவர்கள் 8.23% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களுடைய ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.