No products in the cart.
தினம் ஓர் ஊர் – மணப்பாறை (Manapparai) – 01/06/24
தினம் ஓர் ஊர் – மணப்பாறை (Manapparai)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருச்சிராப்பள்ளி
மக்கள் தொகை – 375,370
கல்வியறிவு – 73.71%
மக்களவைத் தொகுதி – கரூர்
சட்டமன்றத் தொகுதி – மணப்பாறை
மாவட்ட ஆட்சியர் – Bro. Pradeep Kumar (I.A.S)
Commissioner of Police – Sis. N. Kamini (IPS)
Superintendent of Police – Bro. V. Varunkumar (IPS)
District Revenue Officer – Sis. R. Rajalakshmi
Project Director – Bro. S. Devanathan
மக்களவை உறுப்பினர் – Sis. Jothimani Sennimalai (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. P. Abdul Samad (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. S.N. Siyamala
நகராட்சி தலைவர் – Sis. Geetha A Maickelraj
நகராட்சி துணை தலைவர் – Sis. R. Muthulakshmi
Principal District Judge – Bro. K.Babu
Principal District Munsif – Bro. R.Pandy (Manapparai)
Judicial Magistrate Court – Sis. V. Gomathi (Manapparai)
ஜெபிப்போம்
மணப்பாறை (Manapparai) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை நகராட்சி ஆகும். மணப்பாறை முறுக்கு மற்றும் மாட்டுச்சந்தைக்கும் மிகவும் புகழ்பெற்றது. மண என்பதற்கு தமிழில், கடினம் (HARD) என்று பொருள்; மணப்பாறை – கடின பாறைகள் கொண்ட நிலம் என்று பொருள்படும். மணப்பாறை நகரத்திற்காக ஜெபிப்போம்.
மணப்பாறை நகராட்சி என்பது மணப்பாறை நகரை ஆளும் உள்ளாட்சி அமைப்பாகும். நகராட்சி 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் உள்ளாட்சி அமைப்பின் தலைவர். நகராட்சி ஆணையர் Sis. S.N. Siyamala அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. Geetha A Maickelraj அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis. R. Muthulakshmi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். நகராட்சியின் பணிகளுக்காக ஜெபிப்போம்.
இந்த நகரம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மணப்பாறை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. P. Abdul Samad அவர்களுக்காகவும், கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் Sis. Jothimani Sennimalai அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பரிசுத்த கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
மணப்பாறை தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 375,370. இதில் 186,964 ஆண்கள் மற்றும் 188,406 பெண்கள். இந்த தாலுகாவில் மொத்தம் 87,298 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 14% மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர், 86% பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 65.67%, இசுலாமியர்கள் 11.3%, கிறித்தவர்கள் 22.95% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர். மணப்பாறை நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகளின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.
மணப்பாறை தாலுகாவின் மொத்த கல்வியறிவு விகிதம் 73.71% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 73.93% மற்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 56.63% ஆகும். நகர்ப்புறங்களில் சராசரி கல்வியறிவு விகிதம் 86.7% ஆகவும், கிராமப்புறங்களில் 71.6% ஆகவும் உள்ளது. மணப்பாறையில் சுமார் 23 பள்ளிகள் உள்ளன, அவற்றில் 6 அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் ஒரு பொறியியல் கல்லூரி நகராட்சி எல்லைக்குள் உள்ளது. மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நகரத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் பன்னங்கொம்பு என்ற இடத்தில் அமைந்துள்ளது. மணப்பாறையில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், மாணவ – மாணவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
மணப்பாறை தாலுகாவில் மொத்த மக்கள் தொகையில் 192,372 பேர் பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ள 192,372 தொழிலாளர்களில், 46,794 பேர் விவசாயிகள் மற்றும் 70,045 பேர் விவசாயத் தொழிலாளர்கள், வீட்டுத் தொழில்கள் 1,572 பேரும், மற்ற தொழிலாளர்கள் 11,242 பேரும் உள்ளார்கள். இவர்களுக்காகவும், இவர்கள் செய்கின்ற தொழில்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
இந்த நகராட்சியில் உள்ள மருத்துவமனைகளுக்காக, காவல்நிலையங்களுக்காக, அரசு மற்றும் தனியார் அலுவலங்களுக்காக ஜெபிப்போம். இந்த துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்காக, ஊழியர்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். மணப்பாறை நகராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம்.