No products in the cart.
தினம் ஓர் ஊர் – பொத்தனூர் (Pothanur) – 18/07/24
தினம் ஓர் ஊர் – பொத்தனூர் (Pothanur)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – நாமக்கல்
பரப்பளவு – 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
மக்கள் தொகை – 18,455
கல்வியறிவு – 82.27 %
District Collector – Sis. S. Uma, IAS
Superintendent of Police – Bro. S.Rajesh Kannan, I.P.S
District Revenue Officer – Bro. R.Suman
Project Director – Bro. S.Vadivel
District Forest Officer – Bro. S.Kalanithi, I.F.S.,
மக்களவைத் தொகுதி – நாமக்கல்
சட்டமன்றத் தொகுதி – பரமத்தி-வேலூர்
மக்களவை உறுப்பினர் – Bro. Madheshwaran (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Sekar.S (MLA)
Municipal Commissioner – Bro. K.Sennukrishnan (Namakkal)
Municipal Chairman – Bro. D.Kalanithi (Namakkal)
Municipal Engineer – Bro. A.Shanmugam (Namakkal)
Town Planning Officer – Bro. B.Rajkumar (Namakkal)
Sanitary Officer – Bro. N.Thirumoorthy (Namakkal)
Principal District Judge – Bro. R.Gurumurthy (Namakkal)
District Munsif – Bro. S. Subramani (Paramathy)
Subordinate Judge – Bro. S. Nalinakumar (Paramathy)
Judicial Magistrate – Bro. J. Kannan (Paramathy)
ஜெபிப்போம்
பொத்தனூர் (Pothanur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி-வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியின் முக்கிய விளைபொருட்கள், வெற்றிலை, வாழை, கோரைபுற்கள், கரும்பு ஆகும்.
சங்க காலப் புலவர் குன்றூர் கிழார் மகனார் என்பவர் இவ்வூரைப் போந்தை என்று குறிப்பிடுகிறார். இவ்வூர் காவிரியாற்றின் வடகரையில் பரமத்தி வேலூருக்கு மேற்கில் உள்ளது. இவ்வூரின் நெல்வளத்தையும், செல்வ வளத்தையும் பாடல் பெரிதுபடுத்திப் பேசுகிறது.
பொத்தனூர் பேரூராட்சி நாமக்கல் மாவட்டத்தில் தென்பகுதியில் முக்கியமான வேகமாக வளர்ந்து வரும் பேரூராட்சியாகும். இதன் சுற்றளவு 8 ச.மீ. இப்பேரூராட்சியின் தென்புற எல்லையில் காவிரி ஆறு உள்ளது. தற்போது சிறப்பு திட்டமான குடிநீர் அபிவிருத்தி திட்டம் 6.34 கோடிமதிப்பீட்டில் நடைபெற்ற வருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் பேரூராட்சி இயக்குநர் அவர்களின் நேரடி ஆய்வில் பாராட்டப்பட்ட திட்டமாகும்.
பொத்தனூர் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. Municipal Commissioner Bro. K.Sennukrishnan அவர்களுக்காகவும், Municipal Chairman Bro. D.Kalanithi அவர்களுக்காகவும், Municipal Engineer Bro. A.Shanmugam அவர்களுக்காகவும், Town Planning Officer Bro. B.Rajkumar அவர்களுக்காகவும், Sanitary Officer Bro. N.Thirumoorthy அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சி பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பரமத்தி-வேலூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. Sekar.S அவர்களுக்காகவும், நாமக்கல் மக்களவை உறுப்பினர் Bro. Madheshwaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியின் முக்கிய விளைபொருட்கள், வெற்றிலை, வாழை, கோரைபுற்கள், கரும்பு ஆகும். மக்கள் அதிகம் பேர் விவசாயிகள். அருகில் புகளூர் பேப்பர் மில் மற்றும் இரயில் நிலையம் உள்ளது. கந்தசாமி கண்டர் கலைக்கல்லூரி இப்பேரூராட்சியில் உள்ளது.
பொத்தனூர் டவுன் பஞ்சாயத்தில் 18,455 மக்கள் தொகை உள்ளது. இதில் 9,254 ஆண்கள் மற்றும் 9,201 பெண்கள். இப்பேரூராட்சியில் 5,147 குடும்பங்கள் இருக்கிறார்கள். இந்த ஊரில் சோழிய வெள்ளாளர் சமுதாயத்தினர் அதிகமாக வாழ்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இந்து 97.55%, முஸ்லீம் 1.56%, கிறிஸ்தவர் 0.44%, சீக்கியர் 0.02%, பௌத்த 0.01%, ஜெயின் 0.01%, மற்றவர்கள் 0.02% உள்ளனர்.
மொத்த மக்கள் தொகையில், 8,603 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5,689 ஆண்கள் மற்றும் 2,914 பெண்கள். மக்கள்தொகை கணக்கெடுப்பில், தொழிலாளி வணிகம், வேலை, சேவை, மற்றும் விவசாயி மற்றும் தொழிலாளர்கள் என வரையறுக்கப்படுகிறது.
பொத்தனூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் கிறிஸ்தவர்கள் குறைவாக இருக்கிறார்கள். இதற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள விவசாய குடும்பங்களுக்காகவும், விவசாய தொழிலுக்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மக்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.