Daily Updates

தினம் ஓர் ஊர் – பென்னாகரம் (Pennagaram) – 25/10/24

தினம் ஓர் ஊர் – பென்னாகரம் (Pennagaram)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தருமபுரி

பரப்பளவு – 6.75 சதுர கிலோமீட்டர்கள் (2.61 sq mi)

மக்கள் தொகை – 2,34,853

கல்வியறிவு – 56%

மக்களவைத் தொகுதி – பென்னாகரம்

சட்டமன்றத் தொகுதி – தருமபுரி

District Collector – Sis. K.Santhi I.A.S

Superintendent of Police  – Bro. S.S. Maheswaran

Municipal Commissioner  – Bro. S. Bhuvaneshwaran (a) Annamalai

Municipal Chairman – Sis. M.Lakshmi

Municipal Vice Chairman – Sis. A. Nithya

Executive Officer – Bro. Senthil Kumar (Pennagaram)

மக்களவை உறுப்பினர் – Bro. A. Mani (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. G. K. Mani (MLA)

Principal District Judge  – Bro. D.V.Aanand (Dharmapuri)

Chief Judicial Magistrate  – Bro. B.Santhosh (Dharmapuri)

ஜெபிப்போம்

பென்னாகரம் வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும். பென்னாகரம் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பென்னாகரம் வட்டத்தின் பரப்பளவு சுமார் 1,13,027 எக்டேர்களாகும்.

இந்த வட்டத்தின் கீழ் 39 வருவாய் கிராமங்கள் உள்ளன.இவ்வட்டம் பென்னாகரம், பெரும்பாலை, பாப்பாரப்பட்டி, சுஞ்சல்நாதம் என 4 உள்வட்டங்கள் கொண்டது. இவ்வட்டத்தில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஏரியூர் ஊராட்சி ஒன்றியம்உள்ளது.

இந்த நகரத்திற்கு கிழக்கில் தருமபுரி 32 கி.மீ.; மேற்கில் ஒகனேக்கல் 15 கி.மீ.; வடக்கில் பாப்பாரப்பட்டி 25 கி.மீ. மாரண்டஹள்ளி 50 கி.மீ. தொலைவிலும் உள்ளன. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் அருவி, பென்னாகரத்திலிருந்து 15 கி.மீ. ஒகேனக்கல்லில் முதலைப் பண்ணை உள்ளது.

பென்னாகரம் வட்டம் 6.75 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. Municipal Commissioner Bro. S. Bhuvaneshwaran (a) Annamalai அவர்களுக்காகவும், Municipal Chairman Sis. M.Lakshmi அவர்களுக்காகவும், Municipal Vice Chairman Sis. A. Nithya அவர்களுக்காகவும் ஜெபிப்போம். பென்னாகரம் வட்டத்தின் மன்ற உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம்.

இந்த நகரம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கும், தருமபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் Bro. G. K. Mani அவர்களுக்காகவும், தருமபுரி மக்களவை உறுப்பினர் Bro. A. Mani அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

பென்னாகரம் வட்டத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,34,853 மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 48% ஆகும். பென்னாகரம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பென்னாகரம் பகுதியில் பல அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றுள் குறிப்பிட தக்கவை அரசு மேல்நிலைப்பள்ளி பி.அக்ராகரம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாங்கரை ஆகும். இப்பகுதியில் முதன்மைத் தொழிலாக விவசாயம் ஆகும்.

பென்னாகரம் நகரத்திற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இந்த பகுதியில் உள்ள விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.  பென்னாகரம் நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.