No products in the cart.
தினம் ஓர் ஊர் – புத்தளம் (Puthalam) – 15/09/23

தினம் ஓர் ஊர் – புத்தளம் (Puthalam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 13073
கல்வியறிவு – 83.7%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – கன்னியாகுமரி
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Thalavai Sundaram (MLA)
மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan
Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)
ஜெபிப்போம்
புத்தளம் (Puthalam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். புத்தளம் அதன் உப்புக் களஞ்சியங்களுக்கும் பெயர் பெற்றது. புத்தளம் பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.
இது மணக்குடி முகத்துவாரத்திற்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த கழிமுகம் பல்லுயிர் பெருக்கத்திற்கும் இடம் பெயர்ந்து வரும் பறவைகளுக்கும் பெயர் பெற்றது. வனவிலங்கு திணைக்களம் அண்மையில் சதுப்புநில தோட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து உள்ளது. சமீபத்திய சுனாமி சுற்றியுள்ள மீனவ கிராமங்களை அழித்துவிட்டது. இந்த நகரம் 200 ஆண்டுகள் பழமையான கிறிஸ்தவ தேவாலயத்தைக் கொண்டுள்ளது, இது ஜெர்மன் மிஷனரியான ரிங்கல் டாப் என்பவரால் கட்டப்பட்டது. இந்த பேரூராட்சியில் 200 ஆண்டுகள் பழமையான மேல்நிலைப் பள்ளி, எல்எம்பிசி மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. இதற்காக ஜெபிப்போம்.
கன்னியாகுமரிக்கு அருகில் 12 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள புத்தளம் ஒரு சிறிய நகரம். தென்கிழக்கில் மண்டைக்காடு, கிழக்கில் கொட்டாரம், வடக்கே சுசீந்திரம் ஆகியன அமைந்துள்ளன. தோவாளை, சங்குத்துறை கடற்கரை, கன்னியாகுமரி கடற்கரை மற்றும் வட்டக்கோட்டை ஆகியவை அருகிலுள்ள சுற்றுலாத்தலங்கள் ஆகும்.
11.52 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Thalavai Sundaram அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பொறுப்பினை உண்மையாக நிறைவேற்ற ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியில் மொத்தம் 13073 மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 6,449 ஆண்கள் மற்றும் 6,624 பெண்கள் இருக்கிறார்கள். இந்த பேரூராட்சியில் மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 71.74% பேரும், முஸ்லிம்கள் 4.80% பேரும், கிறிஸ்தவர்கள் 23.42% பேரும் உள்ளனர். இந்த நகரத்தில் 3417 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
புத்தளத்தின் சராசரி கல்வியறிவு 83.7% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 94.84% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 90.91% ஆகவும் உள்ளது. புத்தளத்தில் படிக்கின்ற பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்களுக்கு வேண்டிய ஞானத்தை கொடுத்து வழிநடத்திட ஜெபிப்போம். வாலிப பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். அவர்களுடைய எதிர்காலத்தை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
புத்தளம் பேரூராட்சியில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 4,674 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,668 ஆண்கள் மற்றும் 1,006 பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்கள் செய்கின்ற எல்லா வேலைகளையும் ஆசீர்வதித்து பாதுகாத்திட ஜெபிப்போம். கர்த்தருடைய ஆளுகை அவர்களை வழிநடத்திட ஜெபிப்போம்.