No products in the cart.
தினம் ஓர் ஊர் – நெய்யூர் (Neyoor) – 20/09/23

தினம் ஓர் ஊர் – நெய்யூர் (Neyoor)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 12917
கல்வியறிவு – 93.7%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – குளச்சல்
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. J.G.Prince (MLA)
நகராட்சி ஆணையாளர் – Bro. S.Lenin
நகராட்சி தலைவர் – Bro. G.Arulshoban
நகராட்சி துணை தலைவர் – Bro. R.Unnikrishnan
Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)
ஜெபிப்போம்
நெய்யூர் (Neyoor) என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் உள்ள ஓர் பேரூராட்சி ஆகும். இங்கு பிரபலமான நெய்யர் தேவாலயம் உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி மையம் உள்ளது. நெய்யூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
நெய்யூர், நாகா்கோவிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும்; கன்னியாகுமரியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் உள்ளது. நெய்யூர் பேரூராட்சியின் கிழக்கே திங்கள்நகர் 1 கி.மீ. தொலைவிலும் மேற்கே கருங்கல் 6 கி.மீ. தொலைவிலும் வடக்கில் அழகியமண்டபம் 6 கி.மீ. தொலைவிலும் தெற்கில் குளச்சல் 10 கி.மீ. தொலைவிலும் உள்ளன. நெய்யூர் பேரூராட்சிக்கு அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. குளச்சல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. J.G.Prince அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். தேவசித்தத்திற்கு இவர்களை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
மாவட்ட கலெக்டர் Bro. P.N.Sridhar அவர்களுக்காகவும், துணை மாவட்ட கலெக்டர் Bro. H.R.Koushik அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. D.N.Hari Kiran Prased அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் அலுவலர் Bro. J.Balasubramaniam அவர்களுக்காகவும், District Forest Officer Bro. M.Ilayaraja (I.F.S) அவர்களுக்காகவும், Joint Director / Project Director Bro. P.Babu அவர்களுக்காகவும், மாநகராட்சி ஆணையாளர் Bro. Anand Mohan அவர்களுக்காகவும் Principal District Court Judge Bro. P.Ramachandran அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்தப் பேரூராட்சியானது 5.23 சதுர கிலோ மீட்டர் பரப்பில், 46 தெருக்களும், 3430 வீடுகளும் கொண்டது. நெய்யூர் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. நெய்யூர் நகரில் மொத்தம் 3,430 குடும்பங்கள் வசிக்கின்றன. நெய்யூரில் மொத்த மக்கள் தொகை 12,917 ஆகும். இதில் 6,414 ஆண்கள் மற்றும் 6,503 பெண்கள் உள்ளனர். நெய்யூரில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களில் பரிசுத்த ஆவியானவர் ஆளுகை செய்ய ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகளுக்காக ஜெபிப்போம்.
நெய்யூரில் கல்வியறிவு விகிதம் 93.7% ஆகும். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் 91.7% கல்வியறிவு விகிதத்துடன் ஒப்பிடும்போது நெய்யூர் அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. நெய்யூரில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 95.14% மற்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 92.3% ஆகும். நெய்யூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்காக ஜெபிப்போம். படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும் ஆசிரியர்களுக்காகவும், படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் வாலிப பிள்ளைகளுக்காகவும் ஜெபிப்போம்.
நெய்யூர் சிஎஸ்ஐ தேவாலயம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூரில் உள்ளது. நெய்யூர் ஆயர்களின் வரலாறு மிகவும் புனிதமானதும் முக்கியமானதும் ஆகும். லண்டன் மிஷனரி சொசைட்டியின் தென் திருவிதாங்கூர் அமைச்சகம் ஆரம்பத்தில் நெய்யூரில் அதன் அனைத்து நிறுவனங்களுடனும் இயங்கியது. 1806 ஆம் ஆண்டில், வில்லியம் டோபியாஸ் ரிங்கெல்டாப் மைலாடியில் ஊழியத்தைத் தொடங்கினார் மற்றும் 10 ஆண்டுகளில் 7 சபைகளை நிறுவினார். 1818 இல் ஸ்டேஷனுக்கு வந்த ரெவ. சார்லஸ் மீட், தென் திருவிதாங்கூர் மிஷனின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். நெய்யூரில் உள்ள தேவாலயங்களுக்காக ஜெபிப்போம்.