No products in the cart.

தினம் ஓர் ஊர் – நாங்குநேரி (Nanguneri) – 23/01/24
தினம் ஓர் ஊர் – நாங்குநேரி (Nanguneri)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருநெல்வேலி
மக்கள் தொகை – 225,457
கல்வியறிவு – 77.48%
மக்களவைத் தொகுதி – திருநெல்வேலி
சட்டமன்றத் தொகுதி – நாங்குநேரி
District Collector – Bro. K. P. Karthikeyan (I.A.S)
Superintendent of Police – Bro. N.Silambarasan (I.P.S)
District Revenue Officer – Sis. M.Suganya
Joint Director / Project Director – Bro. S.Suresh
மக்களவை உறுப்பினர் – Bro. S.Gnanathiraviam (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Ruby R. Manoharan (MLA)
Deputy Mayor – Bro. K.R.Raju
Commissioner – Bro.V. Sivakrishnamurthy
Chief Judicial Magistrate – Bro. S. Manojkumar (Tirunelveli)
Principal Sub Judge – Bro. M. Amirtha Velu (Tirunelveli)
Principal District Judge – Sis. C.P.M. Chandra
Sub Judge – Bro. M. Ramadhas (Nanguneri)
DIstrict Munsif – Sis. A.V. Subashini (Nanguneri)
Judicial Magistrate – Bro. M.V.O. Chidambaram (Nanguneri)
ஜெபிப்போம்
நாங்குநேரி (Nanguneri) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்கா ஆகும். இவ்வூர் வானமாமலை, தோதாத்ரி க்ஷேத்ரம், பூலோக வைகுண்டம் என்றும் அறியப்படுகிறது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இந்த திவ்ய தேசத்தை சிரிவரமங்கை நகர் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாங்குநேரி தாலுக்காவிற்காக ஜெபிப்போம்.
ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி= நான்குநேரி எனவும், அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப் பகுதியில் அமைந்ததால் நான் + கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நாங்குநேரி பேரூராட்சிக்கு கிழக்கே திசையன்விளை (25 கி.மீ.); மேற்கில் களக்காடு (16 கி.மீ.); வடக்கே திருநெல்வேலி (29 கி.மீ.); தெற்கே வள்ளியூர் (13 கி.மீ.) தொலைவிலும் உள்ளது. நாங்குநேரி அருகில் (2 கி.மீ.) தொலைவில் மறுகால் குறிச்சி உள்ளது. நாங்குநேரியின் தென் பகுதியில் மஞ்சங்குளம் அமைந்துள்ளது. இந்த தாலுகாவிற்கு அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Ruby R. Manoharan அவர்களுக்காகவும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. S.Gnanathiraviam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய வல்லமையான கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
நாங்குநேரி நகரமானது 17.28 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 66 தெருக்களும் கொண்டுள்ளது. இந்த தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 225,602 ஆகும். இதில் 110,908 ஆண்கள் மற்றும் 114,694 பெண்கள் உள்ளனர். நாங்குநேரி தாலுகாவில் மொத்தம் 58,730 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். மக்கள் தொகையில் 33.7% மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர், 66.3% பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும், தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.
நாங்குநேரி வட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் களக்காடு, ஏர்வாடி, பூலம்பட்டி, மூலைக்கரைப்பட்டி நாங்குநேரி என 5 குறுவட்டங்களும், 81 வருவாய் கிராமங்களும் உள்ளன. இவ்வட்டத்தில் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் களக்காடு ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இந்த வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம்.
நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். நாங்குநேரி வட்டத்தில் அமைந்த இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. நாங்குநேரி ஊராட்சி மன்ற தலைவருக்காகவும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம்.
நாங்குநேரி தாலுகாவில் மொத்த மக்கள் தொகையில், 102,374 பேர் பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 12,329 பேர் விவசாயிகள் மற்றும் 29,771 பேர் விவசாயத் தொழிலாளர்கள் ஆவார்கள். மேலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கின்ற தொழில்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம்.