No products in the cart.
தினம் ஓர் ஊர் – நாகரசம்பட்டி அல்லது நாகோஜனஹள்ளி (Nagojanahalli) – 21/12/24
தினம் ஓர் ஊர் – நாகரசம்பட்டி அல்லது நாகோஜனஹள்ளி (Nagojanahalli)
மாவட்டம் – கிருஷ்ணகிரி
மாநிலம் – தமிழ்நாடு
வட்டம் – போச்சம்பள்ளி
பரப்பளவு – 14.87 சதுர கிலோமீட்டர்கள்
மக்கள் தொகை – 9,953
கல்வியறிவு – 74.67%
District Collector – Sis. K. M. Sarayu, I.A.S.,
Superintendent of Police – Bro. P. Thangadurai I.P.S
District Revenue Officer – Bro. Sadhanaikural
Sub Collector – Sis. Priyanga
மக்களவைத் தொகுதி – கிருஷ்ணகிரி
சட்டமன்றத் தொகுதி – பர்கூர்
மக்களவை உறுப்பினர் – Bro. K. Gopinath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. D. Mathiazhagan (MLA)
Municipality Commissioner – Bro. T.KRISHNAMURTHI
Chairman – Sis. FARIDA NAWAB. B
Vice – Chairman – Sis. SAVITHIRI KADALARASU MOORTHY
Principal District and Sessions Judge – Bro. S.Kumaraguru (Krishnagiri)
District Munsif cum Judicial Magistrate – Bro. S. V.Shanmuganathan (Pochampalli)
ஜெபிப்போம்
நாகரசம்பட்டி அல்லது நாகோஜனஹள்ளி (Nagojanahalli), என்ற ஊரானது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருட்டிணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சிக்கு 25 கிமீ தொலைவில் கிருஷ்ணகிரி உள்ளது. இதன் கிழக்கில் ஊத்தங்கரை 30 கிமீ; மேற்கில் பாலக்கோடு 40 கிமீ; வடக்கில் காவேரிப்பட்டணம் 15 கிமீ; தெற்கில் காரிமங்கலம் 15 கிமீ தொலைவில் உள்ளது.
இப்பேரூராட்சியானது பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. D. Mathiazhagan அவர்களுக்காகவும், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் Bro. K. Gopinath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தரை இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இந்த நகரமானது 14.87 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 59 தெருக்களையும் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பேரூராட்சியின் தலைவருக்காகவும், துணை தலைவருக்காகவும், வார்டு உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களையும், இவர்கள் செய்கிற பணிகளையும் தேவன் ஆசீர்வதித்து வழிநடத்திட ஜெபிப்போம்.
நாகோஜனஹள்ளி டவுன் பஞ்சாயத்தில் 9,953 மக்கள்தொகை உள்ளது, இதில் 5,189 ஆண்கள் மற்றும் 4,764 பெண்கள். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 1086 ஆகும், இது நாகோஜனஹள்ளியின் (TP) மொத்த மக்கள் தொகையில் 10.91 % ஆகும். நாகோஜனஹள்ளியில், ஆண்களின் கல்வியறிவு 84.13% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 64.48% ஆகவும் உள்ளது. இப்பேரூராட்சியில் 2,483 குடும்பங்கள் வசிக்கிறார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்து 99.33%, முஸ்லிம் 0.41%, கிறிஸ்தவர் 0.20%, சீக்கியர் 0.02% மற்றும் ஜெயின் 0.01% வாழ்கிறார்கள்.
இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பேரூராட்சிக்குட்பட்ட என். தட்டக்கல் கிராமத்தில் திப்புசுல்தான் காலத்திய கோட்டை உள்ளது. மொத்த மக்கள்தொகையில், 4,507 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2,864 ஆண்கள், 1,643 பெண்கள்.
நாகோஜனஹள்ளி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். நாகோஜனஹள்ளி வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் காணப்படுகின்ற பொருளாதார தேவைகள் சந்திக்கப்படவும், குடும்பங்களில் தெய்வீக சமாதானம் உண்டாகும்படி ஜெபிப்போம். நாகோஜனஹள்ளி பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.