bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Daily Updates

தினம் ஓர் ஊர் – நன்னிலம் (Nannilam) – 28/11/23

தினம் ஓர் ஊர் – நன்னிலம் (Nannilam)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருவாரூர்

மக்கள் தொகை – 137,964

கல்வியறிவு – 84.48%

மக்களவைத் தொகுதி – நாகப்பட்டினம்

சட்டமன்றத் தொகுதி – நன்னிலம்

District Collector – Sis. T.Charusree (I.A.S)

Additional Collector (Development) /

Project Director – Sis. S. Priyanka (I.A.S)

The Superintendent of Police  – Bro. S. Jeyakumar (I.P.S)

District Revenue Officer  – Bro. K.Shanmuganathan

மக்களவை உறுப்பினர் – Bro. M.Selvarasu (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. R.Kamaraj (MLA)

நகராட்சி ஆணையர் – Sis. Malligha

நகராட்சி தலைவர் –  Sis. S.Bhuvanapriya

நகராட்சி துணை தலைவர் – Sis. S.Akila

Chief Judicial Magistrate  – Bro.T.Balamurugan (Tiruvarur)

District Munsif Cum Judicial Magistrate – Bro. M.S M.S. Bharathidhasan (Nannilam)

ஜெபிப்போம்

நன்னிலம், (Nannilam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள, நன்னிலம் வட்டம் மற்றும் நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். நன்னிலம் சுற்றி அச்சுதமங்கலம், சன்னநல்லூர், திருவாஞ்சியம், நல்லமாங்குடி, மாப்பிள்ளைக்குப்பம் ஆகிய ஊர்கள் உள்ளது. நன்னிலம் வட்டத்திற்காக ஜெபிப்போம்.

நன்னிலம் வட்டம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 73 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம்.

இந்த நகரம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் Bro. M.Selvarasu அவர்களுக்காகவும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் Bro. R.Kamaraj அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களையும், இவர்கள் செய்கின்ற பணிகளையும் கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.

இந்நகரமானது 12.80 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்டுள்ளது. நன்னிலம் நகராட்சி ஆணையர் Sis. Malligha அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. S.Bhuvanapriya அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis. S.Akila அவர்களுக்காகவும் ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம். நன்னிலம் நகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.

இந்த நகரம் அருகிலுள்ள கிராமங்களுக்கு ஒரு முக்கிய மையமாக உள்ளது. மக்கள் தொகையில் பலர் விவசாயிகள். நன்னிலம் காரைக்காலுக்கு மேற்கே 30 கிமீ தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து கிழக்கே 30 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மக்கள் முக்கியமாக விவசாயத்தை நம்பியுள்ளனர், கிட்டத்தட்ட 70% மக்கள் விவசாயத்தில் வேலை செய்கிறார்கள். இதற்காக ஜெபிப்போம்.

இவ்வட்டம் 137,964 மக்கள்தொகை கொண்டது. இதில் 69,360 ஆண்களும், 68,604 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 86.4% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் 35,102 குடும்பங்கள் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.46%, இசுலாமியர்கள் 5.16%, கிறித்தவர்கள் 1.25% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இவ்வட்டத்தில் உள்ள குடும்பங்களுக்காகவும், குடும்பத்தின் தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.

நன்னிலம் நகரத்தில் கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களுக்கு வேண்டிய ஞானத்தையும், பெலத்தையும் கட்டளையிடும்படி ஜெபிப்போம். கர்த்தருடைய வல்லமையான கரம் இவர்களை பாதுகாத்திட ஜெபிப்போம்.

நன்னிலம் வட்டத்தில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத மக்கள் மத்தியில் கர்த்தருடைய வார்த்தைகள் விதைக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். ஆவிக்குரிய தேவ ஊழியர்களை கர்த்தர் கர்த்தர் இந்த பகுதிகளில் எழுப்பி தர நாம் ஜெபிப்போம். நன்னிலம் பகுதியில் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.