No products in the cart.

தினம் ஓர் ஊர் – தொண்டி (Thondi) – 25/03/25
தினம் ஓர் ஊர் – தொண்டி (Thondi)
மாவட்டம் – இராமநாதபுரம்
வட்டம் – திருவாடானை
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 18,465
கல்வியறிவு – 89.61%
மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்
சட்டமன்றத் தொகுதி – திருவாடானை
மாவட்ட ஆட்சியர் – Bro. Simranjeet Singh Kahlon I.A.S.
Superintendent of Police – Bro. G.Chandeesh I.P.S.
Additional Collector DRDA – Bro. Veer Pratap Singh IAS.,
Wildlife Warden – Dr. R.Murugan I.F.S.,
District Revenue Officer – Bro. R. Govindarajalu
Principal District Judge – Bro. A.K.Mehbub Alikhan (Ramanathapuram)
District Munsif – Bro.D. Manishkumar (Thiruvadanai)
ஜெபிப்போம்
தொண்டி (Thondi) தமிழ்நாடு மாநிலத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தின் 7 பேரூராட்சிகளில் ஒன்றாகும். இது திருவாடானை வட்டத்தில் உள்ளது. இது 12 வருவாய் கிராமங்களைக் கொண்டது. இது இராமநாதபுரத்திலிருந்து 44 கிமீ தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 58 கிமீ தொலைவிலும் உள்ளது. சங்க காலத்தில், இது இந்தியாவின் ஒரு துறைமுக நகரமாக இருந்தது.
தொண்டிக்கு நான்கு பெயர்கள் உண்டு. பொன்னகரி, பவித்திரமாணிக்கம், அலை வாய் கரை, தொண்டி ஆகிய பெயர்கள் இதற்கு உண்டு. படையாட்சிகள் காலப்போக்கில் இஸ்லாமியராக மாறியதன் விளைவாகத்தான் தேவிபட்டினம், திருப்பாலைக்குடி தொண்டி பாசிப்பட்டினம்,அம்மாபட்டினம் போன்ற ஊர்களில் இஸ்லாமியர்களும் படையாட்சி மக்களும் உறவுமுறை சொல்லி அழைத்துக் கொண்டார்கள்.
தொண்டி நகரம் 15 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இது 10.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 132 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
தொண்டி பேரூராட்சியின் மக்கள் தொகை 18,465 ஆகும், இதில் 9,316 ஆண்கள் மற்றும் 9,149 பெண்கள் உள்ளனர். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 2246 ஆகும், தொண்டியில், ஆண்களின் எழுத்தறிவு விகிதம் சுமார் 93.87% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 85.32% ஆகவும் உள்ளது. இப்பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகையில் இந்து 43.59%, முஸ்லிம் 51.68%, கிறிஸ்தவர் 4.53%, சீக்கியர் 0.02% மற்றும் பௌத்தர் 0.01% உள்ளனர்.
தொண்டி பேரூராட்சி 3,859 வீடுகளுக்கு மேல் நிர்வாகத்தைக் கொண்டுள்ளது, அவற்றுக்கு தண்ணீர் மற்றும் கழிவுநீர் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குகிறது. மொத்த மக்கள்தொகையில், 6,101 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5,085 பேர் ஆண்கள், 1,016 பேர் பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
தொண்டி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். தொண்டி பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். இப்பேரூராட்சியின் தலைவருக்காகவும், துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். தொண்டி பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.