No products in the cart.

தினம் ஓர் ஊர் – தேவகோட்டை (Devakottai) – 07/02/25
தினம் ஓர் ஊர் – தேவகோட்டை (Devakottai)
மாவட்டம் – சிவகங்கை
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – சிவகங்கை
மக்கள் தொகை – 157,631
கல்வியறிவு – 81.69%
மாவட்ட ஆட்சியர் – Sis. Asha Ajith (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Ashish Rawat (I.P.S)
District Revenue Officer – Bro. Shanmugavelu
மக்களவைத் தொகுதி – சிவகங்கை
சட்டமன்றத் தொகுதி – காரைக்குடி
மக்களவை உறுப்பினர் – Bro. Karti P.Chidambaram (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. S.Mangudi (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. G.S. KRISHNARAM
நகராட்சி தலைவர் – Bro. CM. Durai Anand
நகராட்சி துணை தலைவர் – Bro. Karkannan
Principal District and Sessions Judge – Sis. K.Arivoli (Sivagangai)
Sub Judge – Sis. P.Kalai Nila (Devakottai)
Judicial Magistrate – Sis. R.M.Marimuthu (Devakottai)
District Munsif – Sis. R.Premi (Devakottai)
ஜெபிப்போம்
தேவகோட்டை (Devakottai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். செட்டிநாடு என்று அழைக்கப்படும் நாட்டுக்கோட்டை நகரத்தார் வசிக்கும் 76 ஊர்களில் தேவகோட்டையும் ஒன்று. செட்டிநாட்டு வீடுகள் தேவகோட்டையின் சிறப்பு ஆகும்.
தேவகோட்டை நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. தேவகோட்டை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு முதல் தர நகராட்சியாகும். இது செட்டிநாடு பகுதியின் கீழ் வரும் முக்கிய நகரங்களில் ஒன்றாகும், இது “காரை வீடு” என்று அழைக்கப்படும் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட வீடுகளின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்த பகுதி செட்டிநாடு பெல்ட்டில் உள்ள நகரங்களில் ஒன்றாகும்.
‘தேவகோட்டை’ என்ற பெயர் ‘தேவி கோட்டை’ என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது. சோழப் பேரரசில் காவேரிபூம்பட்டினத்தில் நாட்டுக்கோட்டை நாகரதர் ஒரு காலத்தில் வாழ்ந்த ஊர்களில் இதுவும் ஒன்றாகும். அதன் நினைவாக, அவர்கள் பாண்டியப் பேரரசுக்கு குடிபெயர்ந்தபோது, புதிய ஊருக்கு தேவி கோட்டை என்று பெயரிட்டனர். பின்னர், அந்த ஊர் ‘தேவகோட்டை’ என்று அறியப்பட்டது.
இந்திய சுதந்திர இயக்கத்தில் தேவகோட்டை ஒரு தீவிர நகரமாக இருந்தது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தேவகோட்டை நகராட்சி நீதிமன்றம் எரிந்து தரைமட்டமானது. இதன் விளைவாக, வழக்கமான கட்டிட கட்டமைப்புகள் மற்றும் நினைவுச்சின்னங்களுடன் இந்த நகரம் தமிழ்நாட்டின் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
தேவகோட்டை வட்டம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக தேவகோட்டை நகரம் உள்ளது. இவ்வட்டத்தில் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் தேவகோட்டை, கண்டதேவி, கண்ணங்குடி, புளியால் மற்றும் சருகணி என 5 உள்வட்டங்களும், 91 வருவாய் கிராமங்களும் உள்ளன. இவ்வட்டத்தில் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
இந்த நகராட்சி காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. S.Mangudi அவர்களுக்காகவும், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Karti P.Chidambaram அவர்களுக்காகவும் ஜெபிப்போம். தேவ கரம் இவர்களை ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 157,631 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 79,606 ஆண்களும், 78,025 பெண்களும் உள்ளனர். 39,220 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 67.1% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 84.71%, இசுலாமியர்கள் 4.19%, கிறித்தவர்கள் 10.59% & பிறர் 0.49% ஆகவுள்ளனர். தேவகோட்டை நகராட்சியில் மொத்தம் 13,697 விவசாயிகள் விவசாயத்தை நம்பி உள்ளனர். விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலையை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.
தேவகோட்டை நகரத்திற்காக ஜெபிப்போம். தேவகோட்டை மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம். வாலிப பிள்ளைகள் மற்றும் சிறுபிள்ளைகள் கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து பாரத்தோடு ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட்டு ஆண்டவரை ஏற்றுக்கொள்ள ஜெபிப்போம். தேவகோட்டை பகுதியில் கர்த்தர் ஆவிக்குரிய சபைகளையும், தேவ ஊழியர்களையும் எழுப்பி தரும்படி ஜெபிப்போம். தேவகோட்டை நகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.