No products in the cart.

தினம் ஓர் ஊர் – துறையூர் (Thuraiyur) – 03/06/24
தினம் ஓர் ஊர் – துறையூர் (Thuraiyur)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருச்சிராப்பள்ளி
மக்கள் தொகை – 249,327
கல்வியறிவு – 77.9%
மக்களவைத் தொகுதி – பெரம்பலூர்
சட்டமன்றத் தொகுதி – துறையூர்
மாவட்ட ஆட்சியர் – Bro. Pradeep Kumar (I.A.S)
Commissioner of Police – Sis. N. Kamini (IPS)
Superintendent of Police – Bro. V. Varunkumar (IPS)
District Revenue Officer – Sis. R. Rajalakshmi
Project Director – Bro. S. Devanathan
மக்களவை உறுப்பினர் – Bro. R. D. Sekar (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. S. Stalinkumar (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. Suresh Kumar
நகராட்சி தலைவர் – Sis. Selvarani
நகராட்சி துணை தலைவர் – Bro. Murali
Principal District Judge – Bro. K.Babu
District Munsif – Bro. R.Sathiyamoorthy (Thuraiyur)
Judicial Magistrate – Sis. A.Narmatha Rani (Thuraiyur)
Sub Judge – Bro. M.Jaisankar (Thuraiyur)
ஜெபிப்போம்
துறையூர் (Thuraiyur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். துறையூர் வட்டத்தில் பருத்தி, வெங்காயம், சீரக சம்பா நெல் விவசாயம், நகை தொழில் பிரதானமாக உள்ளது. துறையூர் வட்டத்திற்காக ஜெபிப்போம்.
துறையூர் நகராட்சி 17 ஜனவரி 1970 இல் டவுன் பஞ்சாயத்தில் இருந்து 3-வது கிரேடு நகராட்சியாகவும், மே 1998 இல் 2-வது தர நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு, 2008 ஆம் ஆண்டு தேர்வு தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. துறையூர் நகராட்சிக்காக ஜெபிப்போம்.
துறையூர் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 64 வருவாய் கிராமங்கள் உள்ளன. துறையூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது. இந்த நகராட்சியில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், ஊராட்சி ஒன்றியங்களுக்காக ஜெபிப்போம்.
இந்த நகரம் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. துறையூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. P. Abdul Samad அவர்களுக்காகவும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் Sis. Jothimani Sennimalai அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
துறையூர் நகராட்சியின் ஆணையர் நகராட்சி ஆணையர் Bro.Suresh Kumar அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. Selvarani அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. Murali அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை கர்த்தருக்கு பயந்து ஞானத்தோடு செய்யும்படி ஜெபிப்போம்.
துறையூர் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 249,327. இதில் 123,290 ஆண்கள் மற்றும் 126,037 பெண்கள். இந்த தாலுகாவில் மொத்தம் 69,677குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 80.4% பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.79%, இசுலாமியர்கள் 1.87%, கிறித்தவர்கள் 1.29% மற்றும் பிறர் 0.05% ஆகவுள்ளனர். துறையூர் நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் போராட்டங்களை கொண்டுவந்து சமாதானத்தை கெடுக்கும் கிரியைகளை இயேசுவின் நாமத்தில் கட்டிவைத்து ஜெபிப்போம்.
தமிழகத்தில் உயர்தர நீர் மேலாண்மை அமைப்பு உள்ள மிகச் சில நகரங்களில் துறையூர் ஒன்றாகும். பருவமழையின் போது, அருகிலுள்ள மலைகளில் இருந்து வரும் மழை நீர், சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்ய பயன்படுத்தப்படும் ஏரிகளை நிரப்புகிறது. துறையூரில் பெரும்பாலானோர் விவசாயத்துறையில் பணியாற்றி வருகின்றனர். நெல் மற்றும் சோளம் ஆகியவை இப்பகுதியில் விளையும் முதன்மையான பயிர்கள். தற்போது, இந்த நகரத்தின் பொருளாதாரம் விவசாய பொருட்கள் மற்றும் நகைகளை அடிப்படையாகக் கொண்டது. விவசாயிகளுக்காகவும், விவசாய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.
துறையூர் நகராட்சியின் மக்களின் முக்கியத் தொழிலாக கைத்தறி உள்ளது. துறையூரின் பொருளாதாரம் கைத்தறி உற்பத்தியாளர்களால் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது. கைத்தறி தொழிலை நம்பியுள்ள குடும்பங்களுக்காகவும், அவர்கள் செய்கிற தொழிலை கர்த்தர் வர்த்திக்கச் செய்யுபடி ஜெபிப்போம்