Daily Updates

தினம் ஓர் ஊர் – திருவையாறு (Thiruvaiyaru)

தினம் ஓர் ஊர் – திருவையாறு (Thiruvaiyaru)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தஞ்சாவூர்

மக்கள் தொகை – 1,85,803

கல்வியறிவு – 83.94%

மக்களவைத் தொகுதி – தஞ்சாவூர்

சட்டமன்றத் தொகுதி – திருவையாறு

District Collector – Bro. Deepak Jacob, (I.A.S)

Additional Collector (Development) – Bro. H.S.Srikanth (I.A.S)

Deputy Inspector General of Police – Bro. T.Jayachandran (I.P.S)

Superintendent of Police – Bro. Ashish Rawat (I.P.S)

District Revenue Officer – Bro. T.Thiyagarajan

மக்களவை உறுப்பினர் – Bro. S.S.Palanimanickam (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Durai Chandrasekaran (MLA)

Mayor, Thanjavur City Municipal Corporation – Bro. Sun. Ramanathan

Commissioner & Special Officer,

Thanjavur City Municipal Corporation – Sis. R. Maheshwari

Vice Mayor – Sis. Anjugam Boopathy

Principal District Judge  – Sis. Jacintha Martin (Thanjavur)

Presiding Officer and

Additional District Judge – Bro. G.Sundarajan (Thanjavur)

District Munsif-cum-Judicial Magistrate – Bro. N.Azhagesan

ஜெபிப்போம்

திருவையாறு (Thiruvaiyaru) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். திருவையாறு பேரூராட்சியிலிருந்து கும்பகோணம் 33 கிமீ; தஞ்சாவூர் 13.5 கிமீ; அரியலூர் 30 கிமீ; திருச்சி 50 கிமீ., தொலைவிலும் உள்ளது.  திருவையாறு பேரூராட்சிக்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

திருவையாறு என்றால் நகரைச் சுற்றியுள்ள ஐந்து ஆறுகள் என்று பொருள். திரு+ஐந்து+ஆறு காவிரி, மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.

திருவையாறு வட்டம் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக திருவையாறு நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் திருவையாறு, கண்டியூர், நடுக்காவேரி என 3 உள்வட்டங்களும், 56 வருவாய் கிராமங்களும் உள்ளன. இந்த நகரத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் Bro. Durai Chandrasekaran அவர்களுக்காகவும், தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் Bro. S.S.Palanimanickam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களை கர்த்தர் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

திருவையாறு ஊராட்சி ஒன்றியம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். திருவையாறு ஊராட்சி ஒன்றியம் நாற்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருவையாறு ஊராட்சி மன்ற தலைவருக்காகவும், ஊராட்சி மன்றங்களுக்காகவும் ஜெபிப்போம்.

இந்த பேரூராட்சியானது 5.55 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியின் Mayor Bro. Sun. Ramanathan அவர்களுக்காகவும், Commissioner & Special Officer (Thanjavur) Sis. R. Maheshwari அவர்களுக்காகவும், Vice Mayor Sis. Anjugam Boopathy அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.

இவ்வட்டத்தின் மக்கள்தொகை 1,85,803 ஆகும். இதில் 91,759 ஆண்களும், 94,044 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 79.4% விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் மொத்தம் 47,376 குடும்பங்கள் வசிக்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 80.8%, இசுலாமியர்கள் 6.49%, கிறித்தவர்கள் 11.76% மற்றும் பிறர் 0.75% ஆகவுள்ளனர். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.

திருவையாறு வட்டத்தில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத மக்கள் மத்தியில் கர்த்தருடைய வார்த்தைகள் விதைக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். ஆவிக்குரிய தேவ ஊழியர்களை கர்த்தர் இந்த பகுதிகளில் எழுப்பி தர நாம் ஜெபிப்போம். திருவையாறு நகரத்தில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.