Daily Updates

தினம் ஓர் ஊர் – திருவைகுண்டம்

தினம் ஓர் ஊர் – திருவைகுண்டம்

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தூத்துக்குடி

மக்கள் தொகை – 202,962

கல்வியறிவு – 85.29%

மக்களவைத் தொகுதி – தூத்துக்குடி

சட்டமன்றத் தொகுதி – திருவைகுண்டம்

மாவட்ட ஆட்சியர் – Bro. K.Senthil Raj (I.A.S)

Additional Collector – Bro. Thakare Shubham Dnyandeorao (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. L.Balaji Saravanan (I.P.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. G.Venkatesan (Srivaikuntam)

District Revenue Inspectors – Bro. K.V.Ganesan, Bro. M.Veerakumar

Executive Engineer – Bro. Ruban Suresh Ponnaiah

மக்களவை உறுப்பினர் – Sis. Kanimozhi Karunanidhi (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Oorvasi S.Amirtharaj (MLA)

மாவட்ட ஆணையர் – Bro. C.Dineshkumar

மாவட்ட துணை ஆணையர் – Bro. T.Kumar, Bro. O.Rajaram

மேயர் – Bro. P.Jegan

துணை மேயர் – Sis. S.Jenitta

Principal District Judge – Bro. M.Selvam

District Munsif Judge – Sis. S.Muthulakshmi

Sub Judge – Bro. K.Nambirajan

ஜெபிப்போம்

திருவைகுண்டம் (Srivaikuntam), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றின் வடகரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் தூத்துக்குடியிலிருந்து 39 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 30 கிமீ தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது. திருவைகுண்டம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

திருவைகுண்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் வல்லநாடு, தெய்வச்செயல்புரம், செய்துங்கநல்லூர், ஆறுமுகங்குளம், சிரீவைகுண்டம் என ஆறு உள்வட்டங்களும், சேரகுளம், காரசேரி, அரசர்குளம், வள்ளுவர் காலனி, தாதன்குளம், கருங்குளம், ஆதிச்சநல்லூர், கால்வாய், வெள்ளூர் உட்பட 69 வருவாய் கிராமங்களும் உள்ளன. உலக நாகரிகத்தின் தொட்டில் ஆதிச்சநல்லூரும் இவ்வட்டத்தில் அமைந்துள்ளதால் கூடுதல் சிறப்பு. இந்த பேரூராட்சியில் உள்ள வருவாய் கிராமங்களுக்காக, கிராம மக்களுக்காக ஜெபிப்போம்.

இந்த பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Oorvasi S.Amirtharaj அவர்களுக்காகவும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Sis. Kanimozhi Karunanidhi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்காக, இவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

தூத்துக்குடி நகராட்சி மேயர் Bro. P.Jegan அவர்களுக்காகவும், துணை மேயர் Sis. S.Jenitta அவர்களுக்காகவும், மாவட்ட ஆணையர் Bro. C.Dineshkumar அவர்களுக்காகவும்,  மாவட்ட துணை ஆணையர்கள் Bro. T.Kumar, Bro. O.Rajaram அவர்களுக்காகவும், District Revenue Inspectors Bro. K.V.Ganesan, Bro. M.Veerakumar அவர்களுக்காகவும், திருவைகுண்டம் பேரூராட்சியின் காவல்துறை கண்காணிப்பாளர் Bro. G.Venkatesan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இவ்வட்டத்தின் மொத்தம் 202,962 மக்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 100,416 பேரும், பெண்கள் 102,546 பேரும் இருக்கிறார்கள். மக்கள்தொகையில் 77.7% பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றார்கள். இந்த பேரூராட்சியில் 52,689 குடும்பங்கள் உள்ளனர். மக்கள்தொகையில்  இந்துக்கள்  82.85%, இசுலாமியர்கள் 6.04%,கிறித்தவர்கள் 10.86%, பிற மதங்களை சார்ந்தவர்கள்  0.25% பேரும் வாழ்கிறார்கள். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அதிகமாக பாரப்பட்டு ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இந்த ஊராட்சி ஒன்றியம் 31 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருவைகுண்டம் ஊராட்சி மன்றங்களுக்காக, ஊராட்சி மன்ற தலைவருக்காக, ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம்.

திருவைகுண்டம் பேரூராட்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்காக ஜெபிப்போம். படிக்கின்ற பிள்ளைகளுக்காக, ஆசிரியர்களுக்காக ஜெபிப்போம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றவர்களுக்காக ஜெபிப்போம். திருவைகுண்டம் மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலைக் கொண்டுவரும்படி ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். அநேக பிள்ளைகள் கர்த்தருக்கென்று எழும்பி பிரகாசிக்க ஜெபிப்போம். திருவைகுண்டம் பேரூராட்சியை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.