No products in the cart.
தினம் ஓர் ஊர் – திருவேங்கடம் – 25/07/23
தினம் ஓர் ஊர் – திருவேங்கடம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தென்காசி
மக்கள் தொகை – 8337
கல்வியறிவு – 80.09 %
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – சங்கரன்கோவில்
மாவட்ட ஆட்சியர் – Bro. Durai Ravichandran (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. E.T.Samson (I.P.S)
District Revenue Inspector – Bro. M.Nagaranjan
Special Revenue Inspector – Bro. A.Abdul Kadar @ Abu
மக்களவை உறுப்பினர் – Bro. Dhanush M.Kumar (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. E.Raja (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. S.M.Farijan (Tenkasi)
நகராட்சி தலைவர் – Bro. R.Sadhir
நகராட்சி துணை தலைவர் – Bro. K.N.L.Subbaiah
Municipal Engineer – Bro. R.Jayaseelan
Principal District Munsif – Bro. K. Baskar
Additional District Judge – Sis. G.Anuradha
Principal Sub Judge – Sis. N.Marreeswari
ஜெபிப்போம்
திருவேங்கடம் (Thiruvengadam), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சங்கரன்கோவில் வட்டத்தை பிரித்து தமிழக அரசால் திருவேங்கடம் வட்டம் உருவாக்கப்பட்டது. திருவேங்கடம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 80 கிமீ தொலைவிலும்; கோவில்பட்டியிலிருந்து 25 கிமீ தொலைவிலும்; சங்கரன்கோவிலிருந்து 18 கிமீ தொலைவிலும்; சிவகாசியிலிருந்து 28 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்த பேரூராட்சியின் அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.
திருவேங்கடம் வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிதாக நிறுவப்பட்ட தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தில் கரிசல்குளம், திருவேங்கடம் மற்றும் பழங்கோட்டை என 3 உள்வட்டங்களும், 41 வருவாய் கிராமங்களும் உள்ளது. திருவேங்கடம் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காக ஜெபிப்போம்.
15.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. E.Raja அவர்களுக்காகவும், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Dhanush M.Kumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களை தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
தென்காசி மாவட்ட கலெக்டர் Bro. Durai Ravichandran அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. E.T.Samso அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் ஆணையர் Bro. M.Nagaranjan அவர்களுக்காகவும், சிறப்பு மாவட்ட வருவாய் ஆணையர் Bro. A.Abdul Kadar @ Abu அவர்களுக்காகவும், ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆசீர்வதித்து வழிநடத்திட ஜெபிப்போம்.
திருவேங்கடம் டவுன் பஞ்சாயத்தில் 8,337 மக்கள் உள்ளனர், இதில் 4,144 ஆண்கள் மற்றும் 4,193 பெண்கள், 0-6 வயதுடைய குழந்தைகள் 865 இருக்கிறார்கள். திருவேங்கடத்தில் ஆண்களின் கல்வியறிவு 87.64% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 69.59% ஆகவும் உள்ளது. திருவேங்கடம் டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 2,368 வீடுகளுக்கு குடிநீர், சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளன. திருவேங்கடம் பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
திருவேங்கடம் ஊரில் நிட்சேப நதி (வைப்பாறு) பாய்கிறது. இவ்வாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு அந்த நீர் கீழத்திருவேங்கடத்தின் கூத்தாடி குளத்துக்கு கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பேரூராட்சியில் உள்ள நீர்நிலைக்களுக்காக ஜெபிப்போம்.
திருவேங்கடம் நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், மருத்துவமனைகளில் பணிபுரிகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்காகவும், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக அவர்களின் பொருளாதார தேவைகளுக்காகவும், தொழில்களை கர்த்தர் ஆசீர்வதித்து வர்த்திக்க செய்யும்படி ஜெபிப்போம்.