No products in the cart.
தினம் ஓர் ஊர் – திருவாடானை- 09/07/23
தினம் ஓர் ஊர் – திருவாடானை
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – இராமநாதபுரம்
மக்கள் தொகை – 212,029
கல்வியறிவு – 84.60%
மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்
சட்டமன்றத் தொகுதி – திருவாடானை
மாவட்ட ஆட்சியர் – Sis. Vishnu Chandran (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. P.Thangadurai (I.P.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. S.Ramakrishnan (I.P.S) (Tiruvadanai)
District Revenue Officer – Bro. R.Govindarajalu
மக்களவை உறுப்பினர் – Bro. Kani K.Navas (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Karumanickam (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. M.Ajitha Barvin (Ramanathapuram)
நகராட்சி தலைவர் – Bro. K.Karmegam (Ramanathapuram)
நகராட்சி துணை தலைவர் – Bro. R.Praveen Thangam (Ramanathapuram)
District Revenue Inspector – Bro. Sekar
Town Planning Inspector – Bro. M.Rajkumar
Principal District and Sessions Judge – Sis. G.Vijaya
Additional District Judge (FTC) – Sis. N.Shanthi
Judicial Magistrate – Sis. Virgin Vesta (Tiruvadanai)
District Munsif – Bro. D.Manishkumar (Tiruvadanai)
ஜெபிப்போம்
திருவாடானை (Tiruvadanai), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும். இந்த நகரம் மதுரையிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும், தேவகோட்டையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும், இராமநாதபுரம் நகரத்திற்கு வடக்கே 53 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திரு+ஆடு+ஆனை திரு, சொற்பொருளியல்: மேன்மை, தெய்வீகம் மற்றும் ஆடு +ஆனை (யானை) திரிந்து திருவாடானை ஆகியது. திருவாடானை தாலுகாவிற்காக ஜெபிப்போம்.
சூரியனால் வழிபடப்பட்டதாக கருதப்படும் ஆடானை நாதர் கோவில் என அழைக்கப்படும் சிவன் கோவில் இங்கு உண்டு. திருவாடானை பல கிராமங்களை உள்ளடக்கியது அதில் ஆதியூர் மிகவும் சிறப்புடையது. இந்த ஊருக்கு பல புராணங்கள் உள்ளன. ஆதியூர் பெயர்க்காரணம் ஆதி மனிதர்கள் இங்கேதான் தோன்றினார்கள் என சொல்வதும் உண்டு. இவ்வூரில் அமைந்துள்ள ஆதிரத்தினேசுவரர் கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும்.
இந்த வட்டத்தின் கீழ் தொண்டி, திருவாடானை, புல்லூர், மங்கலக்குடி என 4 உள்வட்டங்களும், 27 வருவாய் கிராமங்களும் உள்ளது. மேலும் திருவாடானை ஊராட்சி மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளையும், 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்த தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், ஊராட்சி மன்ற தொகுதிகளுக்காகவும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காகவும், ஊராட்சி மன்ற தலைவருக்காகவும், ஊராட்சி மன்ற துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம்.
திருவாடானை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Karumanickam அவர்களுக்காகவும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Kani K.Navas அவர்களுக்காகவும், மாவட்ட ஆட்சியர் Sis. Vishnu Chandran அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. P.Thangadurai அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம்.
திருவாடானை தாலுகாவின் காவல்துறை கண்காணிப்பாளர் Bro. S.Ramakrishnan அவர்களுக்காகவும், இராமநாதபுரம் நகராட்சி ஆணையர் Sis. M.Ajitha Barvin அவர்களுக்காகவும், இராமநாதபுரம் நகராட்சி தலைவர் Bro. K.Karmegam அவர்களுக்காகவும், இராமநாதபுரம் துணை நகராட்சி தலைவர் Bro. R.Praveen Thangam அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் ஆணையர் Bro. Sekar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய வழிநடத்துதல் இவர்களோடுகூட இருக்கும்படி ஜெபிப்போம்.
திருவாடானை நகரத்தில் 443 குடிநீர் இணைப்புகள், 3 சிறு மின்விசைக் குழாய்கள், 3 கைக்குழாய்கள் , 4 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 1 தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள், 16 உள்ளாட்சிக் கட்டடங்கள், 5 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள், 110 ஊராட்சி ஒன்றியச் சாலைகள், 4 ஊராட்சிச் சாலைகள் ஆகிய அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது, இதற்காக ஜெபிப்போம்.
இவ்வட்டம் 212,029 மக்கள்தொகையை கொண்டுள்ளது. இவர்களில் 106,094 ஆண்களும், 105,935 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 82.5% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் மொத்தம் 50,212 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 69.95%, இசுலாமியர்கள் 17.52%, கிறித்தவர்கள் 12.18% மற்றும் பிற மதத்தை சார்ந்தவர்கள் 0.35% ஆகவுள்ளனர். திருவாடானை தாலுகாவில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். குடும்பங்களில் இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். குடும்பங்களின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.
திருவாடானை தாலுகாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்கள் செய்யும் தொழிலையும், கையின் பிரயாசத்தையும் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.