Daily Updates

தினம் ஓர் ஊர் – திருவட்டாறு (Thiruvattaru) – 19/08/23

தினம் ஓர் ஊர் – திருவட்டாறு (Thiruvattaru)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – கன்னியாகுமரி

மக்கள் தொகை – 70,834

கல்வியறிவு – 77%

மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி

சட்டமன்றத் தொகுதி – குளச்சல்

மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)

துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)

District Revenue Officer – Bro. J.Balasubramaniam

District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)

Joint Director / Project Director – Bro. P.Babu

மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. J.G.Prince (MLA)

மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan

Principal District Court – Bro. S.Arulmurugan

ஜெபிப்போம்

திருவட்டாறு (Thiruvattaru), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் கோயில் அமைந்துள்ள இந்த கிராமம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.  திருவட்டாறு பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.

இந்த நகரம் மார்த்தாண்டத்திலிருந்து வடகிழக்கே 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவிலும், நாகர்கோவிலுக்கு வடமேற்கே 30 கிமீ (19 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. பஹ்ராலி ஆறு மற்றும் கோதை ஆகிய இரண்டு முக்கிய ஆறுகள் கிராமத்தைச் சூழ்ந்து மூவாட்டுமுகத்தில் இணைகின்றன, இது திரு (புனித) + வட்ட (சுற்று) + ஆறு (நதி) என்று பெயர் பெற்றது. [1] புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் கோயில் அமைந்துள்ள இந்த கிராமம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் .

திருவட்டாறின் கிழக்கில் குலசேகரம் 5 கிமீ; மேற்கில் மார்த்தாண்டம் 10 கிமீ; வடக்கில் திற்பரப்பு 10 கிமீ; தெற்கில் தக்கலை 20 கிமீ தொலைவில் உள்ளது. 15 கிமீ தொலைவில் உள்ள குழித்துறையில் உள்ளது. இந்த பேரூராட்சிக்கு அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.

திருவட்டாறு வட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ள 6 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.  இவ்வட்டத்தின் கீழ் 21 வருவாய் கிராமங்கள் உள்ளது. இவ்வட்டத்தில் உள்ள திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் 10 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவட்டாறில் இயங்குகிறது.

6.30 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 41 தெருக்களும், 4,836 வீடுகளை கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளுக்காகவும், வார்டு கவுன்சிலர்களுக்காகவும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளுக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. குளச்சல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. J.G.Prince அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய ஆளுகையின் கரத்திற்குள்ளாக இவர்களை ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.

திருவட்டாறு பேரூராட்சியில் மொத்தம் 70,834 மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஆண்கள் 49% பேரும் மற்றும் பெண்கள் 51% பேரும் வாழ்கிறார்கள். திருவட்டாறு சராசரி கல்வியறிவு 77% ஆகும். ஆண்களின் கல்வியறிவு 78% மற்றும் பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். திருவட்டாறு மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருவட்டாறு பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களில் இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.

திருவட்டாறு நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற எல்லா வேலைகளையும் கர்த்தர் ஆசீர்வதித்து பாதுகாக்கும்படி ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம். திருவட்டாறு பேரூராட்சியை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.