No products in the cart.

தினம் ஓர் ஊர் – திருமயம் (Thirumayam) – 28/04/25
தினம் ஓர் ஊர் – திருமயம் (Thirumayam)
மாவட்டம் – புதுக்கோட்டை
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 8988
கல்வியறிவு – 82.46%
மக்களவைத் தொகுதி – சிவகங்கை
சட்டமன்றத் தொகுதி – திருமயம்
மாவட்ட ஆட்சியர் – Sis. M. Aruna, I.A.S..
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Thiru. Abishek Gupta
மாவட்ட வருவாய் அலுவலர் – Bro. SADHEESH R
Chief Judicial Magistrate – Bro. K.S.Paulpandian (Pudukkottai)
Principal Subordinate Judge – Bro. V. Venkatesaperumal (Pudukkottai)
District Munsif cum Judicial Magistrate – Bro. S. Gopalakannan (Thirumayam)
Sub Judge – Bro. C. Sasikumar (Thirumayam)
ஜெபிப்போம்
திருமயம் (Thirumayam) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு வட்டத் தலைநகரம் ஆகும். திருமயம் என்பது தமிழில் உண்மை இடம் என்று பொருள்படும் திருமெய்யம் என்ற சொல்லில் இருந்து வந்தது. திரு என்பது ‘புனிதமானது’ அல்லது ‘புனிதமானது’ என்று பொருள்படும் மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பாரம்பரியமாக பெயர்களுக்கு முன்னால் பயன்படுத்தப்படுகிறது.
திருமயம் புதுக்கோட்டை நகரத்திலிருந்து 22 கிமீ தொலைவிலும் காரைக்குடி நகரத்திலிருந்து 22 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலமாகும். புகழ்பெற்ற இந்திய சுதந்திரப் போராளியான சத்தியமூர்த்தி 1887 இல் திருமயத்தில் பிறந்தவர் என்பது குறிப்படத்தக்கது.
திருமயத்தில் பாரத மிகு மின் நிறுவனம் (பாரத் ஹெவி எலக்ட்டிக்கல்ஸ் லிமிடெட்) புதிய தொழிற்சாலை ஒன்று 300 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ளது. இது பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் ஆகஸ்ட் 2, 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கொதிகலங்களுக்கான குழாய்ப் பகுதிகள் இங்கு தயாரிக்கப் பட உள்ளன.
இந்த நகரம் திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. திருமயம் தாலுகாவின் மொத்தம் மக்கள் தொகை 8988 ஆகும். இதில் 4445 ஆண்கள் மற்றும் 4543 பெண்கள் உள்ளனர். மேலும் இந்த நகரத்தில் 2225 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். திருமயம் வட்டத்தின் கல்வியறிவு விகிதம் 82.46% ஆக உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு 89.91% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 75.12% ஆகவும் உள்ளது.
இந்த நகரத்தில் உள்ள மொத்த 3515 தொழிலாளர்களில், 483 பேர் விவசாயிகள் மற்றும் 491 பேர் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்காக ஜெபிப்போம். மேலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலைகளை கர்த்தர் ஆசீர்வதித்து வழிநடத்திட ஜெபிப்போம்.
திருமயம் வட்டத்திற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இங்குள்ள குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம். இந்த நகரத்தின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம். திருமயம் நகரத்தில் ஆண்டவரை பற்றி அறியாத மக்கள் மத்தியில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.