Daily Updates

தினம் ஓர் ஊர்-தாளவாடி (Thalavadi) – 08/08/24

தினம் ஓர் ஊர்-தாளவாடி (Thalavadi)

மாநிலம்-தமிழ்நாடு

மாவட்டம்-ஈரோடு

மக்கள் தொகை-63,359

கல்வியறிவு-68.72 %

District Collector-Bro. Raja Gopal Sunkara I.A.S.

Superintendent of Police-Bro. G. Jawahar, I.P.S.

District Revenue Officer-Bro. S. Santhakumar

Municipality Commissioner-Bro. V.Selvam

Chairman-Sis. R.Janaki

Vice – Chairman-Bro. R. Natraj

மக்களவைத் தொகுதி-Nilgiris

சட்டமன்றத் தொகுதி-Bhavanisagar

மக்களவை உறுப்பினர்-Bro. A. Raja (MP)

சட்டமன்ற உறுப்பினர்-Sis. A. Bannari (MLA)

Principal District and

Sessions Judge-Bro. B.Murugesan (Erode)

District Munsif -Sis. P.Sharmila (Sathyamangalam)

Judicial Magistrate -Sis. R.H.Umadevi (Sathyamangalam)

Subordinate Judge-Sis. N.Sharmila (Sathyamangalam)

ஜெபிப்போம்

தாளவாடி வட்டம் (Thalavadi) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பத்து பத்து வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். கோபிச்செட்டிப்பாளையம் வருவாய் கோட்டத்தில் அமைந்த தாளவாடி வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் தாளவாடியில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 21 வருவாய் கிராமங்களும் உள்ளது.

தாளவாடி தாலுக்கா ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்கா ஆகும். 8 மார்ச் 2016 அன்று சத்தியமங்கலம், மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி தாலுகாக்கள் பிரிக்கப்பட்டதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி தனி தாலுகா ஆனது. தாளவாடி வட்டத்தில் மக்கள்தொகை குறைந்திருப்பினும், அடர்ந்த காப்புக்காடுகளில் வாழும் மலைவாழ் மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக இவ்வட்டம் உருவாக்கப்பட்டது.

தாளவாடி ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு மலைப்பாங்கான நகரம் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில், கர்நாடகாவின் எல்லையில் அமைந்துள்ள தாளவாடி தொகுதி முதன்மையாக மலைப்பாங்கானது மற்றும் அலை அலையற்ற சமவெளிகளைக் கொண்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சங்கமிக்கும் BRT வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் உள்ளது. சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் பகுதியில் தாளவாடி வட்டத்தின் பெரும்பகுதிகள் கொண்டுள்ளது.

இந்த நகரமானது Bhavanisagar சட்டமன்றத் தொகுதிக்கும், Nilgiris மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. Bhavanisagar சட்டமன்ற உறுப்பினர் Sis. A. Bannari அவர்களுக்காகவும், Nilgiris மக்களவை உறுப்பினர் Bro. A. Raja அவர்களுக்காகவும் ஜெபிப்போம். சத்தியமங்கலம் நகராட்சி Commissioner Bro. V.Selvam அவர்களுக்காகவும், ChairmanSis. R.Janaki அவர்களுக்காகவும், Vice – Chairman Bro. R. Natraj அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.

தாளவாடி வட்டத்தின் மொத்த மக்கள் தொகை 63,359 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 12,444 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 5,900 ஆக உள்ளது. இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.

தாளவாடி வருவாய் கிராமம், மாவட்டத் தலைமையிடமான ஈரோட்டிற்கு மேற்கே 103 கிலோ மீட்டர் தொலைவிலும், சத்தியமங்கலத்திலிருந்து 57 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தாளவாடி, ஈரோடு மாவட்டம் – கர்நாடகாவின் சாமராசநகர் மாவட்டங்களுக்கு இடையே உள்ள காட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதனருகே சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் நகரங்கள் அமைந்துள்ளது. இதனருகில் தெங்குமரஹாடா ஊராட்சி அமைந்துள்ளது.

தாளவாடி நகரத்திற்காக ஜெபிப்போம். நகரத்தில் உள்ள கல்வி நிலையங்களுக்காகவும், படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள வனவிலங்கு காப்பகத்திற்காகவும், வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.