No products in the cart.

தினம் ஓர் ஊர் – சேவுகம்பட்டி (Sevugampatti) – 12/04/24
தினம் ஓர் ஊர் – சேவுகம்பட்டி (Sevugampatti)
வட்டம் – நிலக்கோட்டை
மாவட்டம் – திண்டுக்கல்
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 11,730
மொத்த பரப்பளவு – 10.50 சகிமீ
கல்வியறிவு – 76.4%
மக்களவைத் தொகுதி – திண்டுக்கல்
சட்டமன்றத் தொகுதி – நிலக்கோட்டை
District Collector – Bro.S. Saravanan, IAS
District Revenue Officer – Sis. R.Jeyabharathi
Superintendent of PoliceRevenue – Dr.A.Pradeep IPS
PRINCIPAL DISTRICT AND
SESSIONS JUDGE – Sis. A.MUTHU SARATHA
District Munsif – Bro. P.JAISANKAR (Nilakottai)
Judicial Magistrate – Bro. R.RAGHURAMAN (Nilakottai)
ஜெபிப்போம்
சேவுகம்பட்டி (Sevugampatti) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி திண்டுக்கல்லிருந்து கிழக்கே 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சேவுகம்பட்டி பேரூராட்சி 7 உட்கடை கிராமங்களை கொண்டது.
சேவுகம்பட்டி நகரம் 15 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இப்பேரூராட்சி, 10.50 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இப்பேரூராட்சியானது நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
சேவுகம்பட்டி பேரூராட்சியின் மக்கள் தொகை 11,730 ஆகும், இதில் 5,916 ஆண்கள் மற்றும் 5,814 பெண்கள். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 1158 ஆகும், இது சேவுகம்பட்டி (TP) மொத்த மக்கள் தொகையில் 9.87% ஆகும். இப்பேரூராட்சி 3,037 குடும்பங்கள் வசிக்கிறார்கள். சேவுகம்பட்டியில், ஆண்களின் கல்வியறிவு விகிதம் சுமார் 83.28% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 69.40% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள்தொகையில் இந்து 94.78%, முஸ்லிம் 0.48% மற்றும் கிறிஸ்தவர் 4.65% உள்ளனர்.
இப்பேரூராட்சியில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 4,582 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,328 பேர் ஆண்கள், 1,254 பேர் பெண்கள். மொத்த 4582 பணி மக்கள் தொகையில், 90.75% பேர் முக்கிய வேலையிலும் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கிற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.
சேவுகம்பட்டி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். சேவுகம்பட்டி பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். சேவுகம்பட்டி பேரூராட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். சேவுகம்பட்டி பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.