No products in the cart.
தினம் ஓர் ஊர் – செங்கோட்டை (Sengottai) – 26/07/23
தினம் ஓர் ஊர் – செங்கோட்டை
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தென்காசி
மக்கள் தொகை – 26,823
கல்வியறிவு – 86.62 %
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – கடையநல்லூர்
மாவட்ட ஆட்சியர் – Bro. Durai Ravichandran (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. E.T.Samson (I.P.S)
District Revenue Inspector – Bro. M.Nagaranjan
Special Revenue Inspector – Bro. A.Abdul Kadar @ Abu
மக்களவை உறுப்பினர் – Bro. Dhanush M.Kumar (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. C.Krishnamurali (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. S.Parkavi
நகராட்சி தலைவர் – Sis. R.Ramalakshmi
நகராட்சி துணை தலைவர் – Bro. S.Navaneetha Krishnan
வருவாய்துறை ஆணையர் – Bro. R.Petchikumar (Shencottai)
Principal District Munsif – Bro. K. Baskar
Additional District Judge – Sis. G.Anuradha
District Munisif cum Judicial Magistrate – Bro. M.Sunil Raja
ஜெபிப்போம்
செங்கோட்டை (Sengottai), என்பது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது தென் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் நுழைவாயில் ஆகும். இந்த நகரத்தின் பொருளாதாரம் அரிசி, தென்னை, மா, கிராம்பு மற்றும் மிளகு சாகுபடியைச் சுற்றியே உள்ளது. செங்கோட்டை தோசைக்கல் (பொதுவாக தோசை தவா என்று அழைக்கப்படுகிறது) முக்கிய சந்தையாக தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்டதாகும். இந்த ஊரில் கறுப்புத் தொழிலாளி கடைகள் அதிகம். செங்கோட்டை தாலுகாவிற்காக ஜெபிப்போம்.
செங்கோட்டை 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இயற்கைச் சூழலில் இருக்கும் நகரம் ஆகும். கோட்டை போன்ற அமைப்பில் நுழைவு வாயில் இருந்ததால் இப்பெயர் பெற்றது. 1956 வரை கேரள மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து நாகர்கோவிலைச் சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் நாடார், சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் காமராஜர் முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த தாலுகாவின் கீழ் தென்காசி ஒரு காலத்தில் இருந்தது.
செங்கோட்டை முதலில் திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1851 டிசம்பரில், செங்கோட்டைப் பக்கத்தில் உள்ள திருநெல்வேலிக்கும் திருவிதாங்கூருக்கும் இடையிலான எல்லை 1846 ஆம் ஆண்டிலேயே ஜெனரல் கல்லனால் முன்மொழியப்பட்டபடி தெளிவாக வரையறுக்கப்பட்டு, இறுதியாக சென்னை அரசால் அனுமதிக்கப்பட்டது. செங்கோட்டை நகராட்சி 1921 இல் உருவாக்கப்பட்டது.
1949 இல், செங்கோட்டை புதிதாக உருவாக்கப்பட்ட திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது . மாநில மறுசீரமைப்புச் சட்டம் , 1956 நவம்பர் 1, 1956 முதல் நடைமுறைக்கு வந்தது, அதன் விளைவாக, குயிலான் மாவட்டத்தின் செங்கோட்டை தாலுகாவின் தமிழ் பேசும் பகுதி திருவிதாங்கூர்-கொச்சியிலிருந்து சென்னை மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. 22 மே 1998 தேதியிட்ட GO எண்.85 இன் படி செங்கோட்டை கிரேடு III நகராட்சியிலிருந்து தரம் II நகராட்சியாக மறுவகைப்படுத்தப்பட்டது. செங்கோட்டை நகராட்சி வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.
செங்கோட்டை வட்டம் தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் இலத்தூர், பண்பொழி, செங்கோட்டை என 3 குறுவட்டங்களும், 18 வருவாய் கிராமங்களும் உள்ளன. இந்த தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களுக்காக, கிராம மக்களுக்காக ஜெபிப்போம்.
செங்கோட்டை நகராட்சி கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் Bro. C.Krishnamurali அவர்களுக்காகவும், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Dhanush M.Kumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்புகரம் இவர்களோடுகூட இருக்கும்படி ஜெபிப்போம்.
செங்கோட்டை நகராட்சி ஆணையர் Sis. S.Parkavi அவர்களுக்காகவும், செங்கோட்டை நகராட்சி தலைவர் Sis. R.Ramalakshmi அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. S.Navaneetha Krishnan அவர்களுக்காகவும், வருவாய்துறை ஆணையர் Bro. R.Petchikumar (Shencottai) அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம்.
செங்கோட்டையில் மொத்தம் 26,823 மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஆண்கள் 13,183, பெண்கள் 13,640 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 76.98%, இசுலாமியர்கள் 21.19%, கிறித்தவர்கள் 1.77% மற்றும் பிற மதத்தினர் 0.06% ஆக உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 7146 குடும்பங்கள் உள்ளன. செங்கோட்டை தாலுகாவில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் கர்த்தருடைய வல்லமையான கரம் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இந்த தாலுகாவில் 674 முக்கிய விவசாயத் தொழிலாளர்கள், 1,923 வீட்டுத் தொழில்கள், 7,435 இதர தொழிலாளர்கள், 590 குறு தொழிலாளர்கள், 14 குறு விவசாயிகள், 60 குறு விவசாயத் தொழிலாளர்கள், 1041 குறு விவசாயத் தொழிலாளர்கள் என மொத்தம் 10,736 தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழில்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.